Tamil Nadu Chief Minister Talent Search Exam | தமிழ்நாடு முதலமைச்சர் திறனறி தேர்வு
Tamil Nadu Chief Minister Talent Search Exam
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, அரசு பள்ளி மாணவ, மாணவியரிகளின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் 2023-2024ஆம் கல்வியாண்டு முதல் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தோ்வு நடத்தப்பட உள்ளது. அரசு பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டத்தின்கீழ் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்வில் 1000 மாணவர்கள் (நடைமுறையில் உள்ள இடஒதுக்கீடு பின்பற்றி 500 மாணவா்கள் மற்றும் 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்கள் மட்டும்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
Read Also: இலக்கிய திறனறித் தேர்வு என்றால் என்ன?
Read Also: இலக்கிய திறனறி தேர்வு வினாத்தாள் 2022
Read Also: இலக்கிய திறனறி தேர்வு விதிமுறைகள்
Read Also: தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு மையம்
Read Also: தமிழ் மொழி திறனறித் தேர்வு படிவம்
தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளின் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் இருத்தாள்களாக தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு தாளிலும் 60 கேள்விகள் இடம்பெறும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். முதல் தாள் காலை10 மணி முதல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையிலும் நடைபெறும்.
இந்த நிலையில், 23.9.2023 (சனிக்கிழமை) நடைபெற உள்ள இத்தேர்விற்கு 2023-2024ஆம் கல்வியாண்டில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.
மாணவர்கள் விண்ணப்பங்களை
www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 7.8.2023 முதல் 18.8.2023 வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணமாக ரூ.50 சோ்த்து மாணவர்கள் பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் -18.8.2023.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.