You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TTSE Exam Hall Norms in Tamil | தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு விதிமுறைகள்

Typing exam apply Tamil 2023

TTSE Exam Hall Norms in Tamil | தமிழ்மொழி இலக்கிய திறனறி தேர்வு விதிமுறைகள்

TTSE Exam Hall Norms in Tamil

Read Also: Tamil Talent Search Exam in Tamil

  • அரசு தேர்வுகள் இயக்ககம் தமிழ் மொழி திறனறித் தேர்வு அக்டோபர் 15ம் தேதி நடக்கிறது.
  • இத்தேர்வினை 11ம் வகுப்பு மாணவர்கள் (அனைத்து பள்ளி வகை) எழுதுவார்கள்.
  • தேர்வு நேரம் காலை 10 மணி முதல் 12மணி வரை நடைபெறுகிறது.
  • தேர்வு முடியும் வரை எக்காரணம் கொண்டு தேர்வர்கள் வெளியே அனுமதிக்கப்படமாட்டார்கள்.
  • தமிழ்மொழி பாட ஆசிரியர்கள் தேர்வு அறை கண்காணிப்பாளராக பணியாற்ற அனுமதி இல்லை.
  • தேர்வு அறையில் 20 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். இதனால் 20 வினாத்தாள் மற்றும் 20 விைடத்தாள் மட்டுமே தேர்வு அறை கண்காணிப்பாளருக்கு வழங்கப்படும்.
  • தேர்விற்கான வினாத்தாள் தேர்வு துவங்குவதற்கு கால் மணி நேரம் முன்னதாக அதாவது காலை 9.45 மணிக்கு பிரிக்கப்பட்டு முறையே காலை 10 மணிக்கு தேர்வர்களுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
  • மாணவர்கள் தேர்வுக்கூட நுைழவுச்சீட்டை (ஹால்டிக்கெட்) தேர்வு அறைக்குள் கொண்டு வர வேண்டும். அனுமதிச்சீட்டு இருந்தால் மட்டுமே தேர்வர்கள் அறையில் அனுமதிக்கப்படுவார்கள்.
  • மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ஓஎம்ஆர் ஆன்சர் ஷீட் அவர்களுடைய பதிவெண்ணிற்குரியவைதானா என்பதை உறுதி செய்துகொண்டு மாணவர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் கையொப்பம் இட வேண்டும்.
  • நுழைவுச்சீட்டில் புகைப்படம் மாறியிருந்தாலோ அல்லது புகைப்படம் இல்லாமல் இருந்தாலோ, அதே நுழைவுச்சீட்டில் உரிய தேர்வரின் புகைப்படம் ஒட்டி அதில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் முதல்வர் முத்திரையுடன் சான்றொப்பம் பெற வேண்டும்.
  • தேர்வு நாளன்று வழங்கப்படும் ஓஎம்ஆர் ஷீட்லும் புகைப்படம் மாறி/இல்லாமல் இருந்தால் பெயர் பட்டியலில் (என்ஆர்) மட்டுமே உரிய புகைப்படத்தினை பசையினால் ஒட்டி (நுழைவுச்சீட்டுடன் ஒப்பிட்டு) தேர்வர்களை தோ்வு எழுத அனுமதிக்க வேண்டும்.
  • மாணவர்கள் அருகருகில் இருப்பதை தவிர்க்க தேர்வு மையத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் சீட்டிங் பிளானை ஐ அமைக்க வேண்டும்.
  • தேர்வர்கள் 9.40 மணிக்கு தேர்வறைக்குள் அனுமதித்து, தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை சரிபார்த்து உரிய இருக்கையில் அமர வைக்கப்பட வேண்டும்.
  • தேர்விற்கான வினாத்தாட்கள் 9.55 மணிக்கு அறை கண்காணிப்பாளர்களால் உறை பிரிக்கப்பட்டு 10 மணிக்கு தேர்வர்வர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
  • தேர்வு முடிந்தவுடன் 12 மணிக்கு தேர்வர்களிடம் இருந்து ஓஎம்ஆர் விடைத்தாட்களை சரிபார்த்து பெறப்படும்.
  • தேர்வர்கள் தங்களுடன் தண்ணீர் பாட்டில் (வெளிப்படையாக), கை கிருமிநாசினி எடுத்து வந்திருந்தால், அதனை தேர்வறைக்குள் எடுத்து செல்ல அனுமதிக்கப்படும்.
  • தேர்வர்கள் தேர்வு முடிந்தவுடன் வினாத்தாள் புத்தகத்தை எடுத்து செல்ல அனுமதி உண்டு.
  • தேர்வர்கள் ஓஎம்ஆர் விடைத்தாளில் தாம் எந்த கலத்திற்கான விடை சரி என நிைனக்கிறாரோ அந்த கலம் கருப்பு மை கொண்ட பந்துமுனை (பால் பாய்ண்ட்) பேனாவினால் மட்டுமே நிழற்படுத்த வேண்டும்.