You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

pocso act in tamil | போக்சோ சட்டம் என்றால் என்ன

pocso act in tamil

குழந்தைகளுக்கான உரிமைகள் என இந்தியாவில் பல சட்டங்கள் உள்ளன. குறிப்பாக, CRC (Child Right Convention). CRC அடிப்படையில்தான் குழந்தைகளுக்கான உரிமை வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவில் நான்கு முக்கிய சட்டங்கள் நம் நாட்டில் குழந்தைகளுக்காக உள்ளன. குழந்தை திருமண தடை சட்டம், குழந்தை தொழிலாளர் தடை சட்டம், கல்வி உரிமை சட்டம் மற்றும் போக்சோ சட்டம்

Pocso full form: 

The Protection of Children from Sexual Offenses, 2012

போக்சோ சட்டம் என்றால் என்ன?

போக்சோ சட்டம் 2012ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாக்கும் சட்டம்தான் போக்சோ சட்டம். இதுமட்டுமல்லாது குழந்தைகளுக்கென சிறப்பு சட்டங்களை கொண்டு வரலாம் என நமது அரசியலமைப்பு சட்டம் கூறுகிறது. இதனை நாம் சற்று விரிவாகவே காண்போம். 

குழந்தை பாலியல் வன்கொடுமை என்றால் என்ன? 

குழந்தைகளை உடல் மற்றும் மனதை பாலியல் ரீதியாக கொடுமை படுத்துவது பாலியல் வன்கொடுமை எனப்படும். Sexually abusing the mind and Body of the children (touch/touchless/verbal, visible/online) 

உட்செலுத்துதல் பாலியல் தாக்குதல் penetrative sexual assault 

ஒருவர் தன்னுடைய அல்லது வேறெந்த உறுப்புகளையோ (விரல் மற்றும் பொருள்களையோ) உட்செலுத்துவதோ உடலுறவு கொள்வதோ உட்செலுத்தும் பாலியல் தாக்குதல் எனப்படும். 

தண்டனைகள் 

7 வருடத்திற்கு குறையாத சிறை தண்டனை. அது ஆயுள் தண்டனையாக நீட்டிக்கப்படலாம் மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

கடுமையான உட்செலுத்தும் பாலியல் தாக்குதல் (Aggravated Penetrative Sexual Assault) 

காவல்துறை அலுவலர்கள், இராணுவ துறை அலுவலர்கள், அரசு ஊழியர்கள், சிறைச்சாலை ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவன முதன்மையர்கள், ஊழியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என கருதும் நபர்களாலும் பிறப்புறுப்புகளை உட்செலுத்தி பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தப்படும் செயல்கள் மற்றும் பல்வேறு இதர பாலியல் துன்புறுத்தல்களும் (பிரிவு 5ன் கீழ் a முதல் u வரை) செய்தால் அது கடுமையான உட் செலுத்தும் பாலியல் தாக்குதல் ஆகும்.

Read Also: Children Basic Rights in Tamil

பாலியல் தாக்குதல் (Sexual Assault)

பாலியல் உள் நோக்கத்துடன் குழந்தைகளின் அந்தரங்க உறுப்புகளை தவறான நோக்கத்துடன் பார்க்கச் செய்வது, பிறப்புறுப்புகளை உட் செலுத்தாமல் அதனை தொடுவது, குழந்தைகளை தொடச் செய்வது போன்ற செயல்கள் பாலியல் தாக்குதல் ஆகும். 

தண்டனைகள்

மூன்று வருடத்திற்கு குறையாத சிறை தண்டனை. அது 5 வருடம் வரை நீட்டிக்கப்படலாம் மற்றும் அபராதமும் விதிக்கப்படும் (பிரிவு8).

கடுமையான பாலியல் தாக்குல் - Aggravated Sexual Assault

காவல்துறை அலுவலர்கள், இராணுவ வீரர்கள், அரசு ஊழியர்கள், சிறைச்சாலை ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவன ஊழியர்கள் இவர்களால் பிறப்புறுப்புகளை உட் செலுத்தாமல் பாலியல் தாக்குதலுக்குண்டான செயல்களை செய்வது போன்ற செயல்பாடுகள் (பிரிவு 5ன் கீழ் a முதல் u வரை) செய்தால் கடுமையான பாலியல் தாக்குதல் எனப்படும். 

தண்டனை 

5 வருடத்திற்கு சிறை தண்டனை அது 7 வரை நீட்டிக்கப்படலாம் மற்றும் அபராதமும் விதிக்கப்படும் (பிரிவு 10).

Read Also: Children Safety Norms in Tamil

பாலியல் தொந்தரவு Sexual Harassment 

குழந்தையிடம் ஆபாசமாக பேசுவது, ஆபாச படம் மற்றும் ஆபாசமாக ஜாடை காட்டுவது, ஒலி எழுப்புவது, ஆபாசமாக படபிடிக்கும் நோக்கத்துடன் பாலியல் தொந்தரவு செய்வது, தொடர்ந்து ஒரு குழந்தையை நேரடியாகவோ அல்லது மின்னணு சாதனங்கள் மூலம் பின் தொடர்வது போன்ற செயல்கள். 

தண்டணைகள் 

3 வருடங்கள் வரையிலான சிறை தண்டனை மற்றும் அபாராதம் விதிக்கப்படும் (பிரிவு 10). 

யாரால் பாதிக்கப்படுகின்றனர்?

நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், இரத்தம் சம்மந்தமான நெருங்கிய உறவினர், தத்து எடுப்படுவர், வளா்ப்பு பெற்றோர், ஒரே வீட்டில் வசிப்பவர், பகிர்வுடைய குடும்ப உறுப்பினர்கள், குழந்தை பராமரிப்பு செய்யக்கூடியவர்கள் மற்றும் உரிமையாளர்கள், கல்வி, மத, நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், காவல்துறை, இராணுவ மற்றும் பாதுகாப்பு வீரர்கள், நம்பிக்கையானவர்கள், பக்கத்து வீட்டில் உள்ளவர்கள், விளையாட்டு பயிற்சியாளர்கள், குழந்தைகளுடன் அன்றாடம் தொடர்பில் இருப்பவர்கள், முற்றிலும் அறிமுகமாகாத மற்றும் தெரியாத நபர்கள். 

குழந்தைகள் இவர்கள் தேர்வு செய்யும் விதம்

Identifying the children - ேதர்ந்தெடுப்பது 

Gaining the trust of the Family – குடும்பத்தின் நம்பிக்கை சம்பாதிப்பது

Gain Access of the Child – அணுகுமுறை 

Gain Trust of the Child – நம்பிக்கை சம்பாதிப்பது

Creating Secrecy around the Relationship உறவைப் பற்றிய ரகசியம் 

Break down Boundaries – எல்லை மீறுதல்

Maintain Control – தன்வசத்திலேயே வைத்திருத்தல் 

குற்றவாளிகள் குழந்தைகளை நெருங்வது எப்படி

குழந்தைகளுக்கு பிடித்தது போல் நடப்பர், பின்னர் இவர்களுக்கு பிடித்ததுபோல் குழந்தைகளை நடக்க வைப்பர். 

Grooming -– தன்வசப்படுத்துதல்

எதற்காக grooming செய்யப்படுகிறது.

தான் செய்வதை குழந்தைகள் யாரிடமும் சொல்லக்கூடாது, சொன்னாலும் யாரென சொல்லக்கூடாது. 

குழந்தைகள் பாதிக்கப்பட்டதை நாம் எவ்வாறு கண்டறியலாம்

உடல் ரீதியான மாற்றங்கள் / நடப்பது உட்காருவதில் கடினம், உடலில் காயங்கள், பால்வினை நோய்கள், தோலில் தொற்றுகள், இரத்தப்போக்கு, சிறுநீர் கழிக்கும்போது, கர்ப்பம். 

நடத்தை மாற்றங்கள், பழகுவதில் மாற்றம், தன்னையே காயப்படுத்தி கொள்ளுதல், தூக்கமின்மை, படுக்கை ஈரமாக்குதல், அதிகமான உடை உடுத்துவது, பயம், குறிப்பிட்ட இடம் மற்றும் நபர் பற்றிய பயம், குறிப்பிட்ட சுவை/மணம்/ பொருட்களை பற்றிய பயம்.

குற்றவாளிகள் குழந்தைகளை நெருங்குவது எப்படி 

PAANT RULE 

P – Private Parts - தனிப்பட்ட உறுப்புகள்

A Avoid Darkness - இருட்டு ஆபத்து

A Accept No Gifts- பாிசுகள் வேண்டாம்

N No Secrets - ரகசியம் வேண்டாம்.

T Trust us - எங்களை நம்பு, நாங்க இருக்கோம். 

அதிகபட்ச தண்டனை-– தூக்கு தண்டனை

 30 நாட்களுக்குள் குழந்தையின் வாக்குமூலம் பதிவு செய்யப்ப வேண்டும்.

விசாரணை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும். 

குற்றவாளியே நான் குற்றவாளியில்லை என்று நிரூபிக்க வேண்டும்

மருத்துவ சிகிச்சை உடனடியாக கொடுக்க வேண்டும்.

இலவச சட்ட உதவி கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் ஒப்புதலுடன் உடலுறவு கொள்வதும் குற்றமாகும்.

பாதிக்கப்பட்ட குழந்தைக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும். 

Read Also: Child line in Tamil 

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்மந்தப்பட்ட புகார்களை யாரிடம் கூறலாம்

காவல்துறை

சிறப்பு சிறார் காவல் அலகு

கிராம நிர்வாக அலுவலர்

குழந்தைகள் நலக்குழு

கிராம ஒன்றிய அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

1098/100/181  

நன்றி,

பி சதிஷ்குமார்

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், நாமக்கல்