Childline Scheme in Tamil| 1098 | சைல்டுலைன் திட்டம் உருவாக்கியவர் யார்?
Childline Scheme in Tamil| 1098 | சைல்டுலைன் திட்டம் உருவாக்கியவர் யார்?
பொதுவாக சைல்டுைலன் என்றால் நமது ஞாபகத்துக்கு வருவது
1098 மட்டுமே. ஆனால், அது எதற்காக கொண்டுவரப்பட்டது, யாருக்கானது, எப்படி செயல்படுகிறது என்ற குறைந்தபட்சம் கூட அறிந்திருக்க மாட்டோம். ஏனென்றால், இது பொழுதுபோக்கு கொடுப்பதில்லை. ஒவ்வொரு விஷயத்திலும் நமது அடிப்படை உரிமை, சட்டம் வகுத்துள்ள பாதை என்னவென்று தெரியாததால், பல இடங்களில் நமக்கு ஏற்பட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியாமல் பிறரின் உதவி கேட்கிறோம்.
இந்த வரிசையில்
சைல்டுலைன் குறித்து நிறைய விழிப்புணர்வு தகவல் தகவலாக நமது கல்வி இணையளத்தில் தொடர்ச்சியாக வெளியிட உள்ளோம், இதனை நீங்களும் அறிந்து, குழந்தைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்.
Also Read: சைல்டுலைன் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்று அறிவோமா?
சைல்டுலைன் உருவான கதை:
இந்தியாவில்
1996ம் ஆண்டு, குடும்பம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு துறை மற்றும் மும்பையை சேர்ந்த, டாடா இன்ஸ்டியூட் ஆப் சோஷியல் சயின்ஸ்
(Tata Institute of Social Sciences –TISS) இணைந்து, குழந்தைகள் திட்ட செயல்பாடு குறித்து கள ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. டாடா இன்ஸ்டியூட் ஆப் சோஷியல் சயின்ஸ் சேர்ந்த பேராசிரியை
ஜெரோ பில்லிமோரியா இத்திட்டத்தை துவக்கினார்.
இவர், மும்பையில் உள்ள ரயில் நிலையங்களில் தங்கியிருந்த குழந்தைகள், இரவு நேர காப்பகத்தில் தங்கியிருந்த குழந்தைகளிடம் கலந்துரையாட துவங்கினார். ஆதரவற்ற நிலையில் இருந்த குழந்தைகளை,
ஜெரோ பில்லிமோரியா ஆதரவு கரங்களை நீட்டியதால், குழந்தைகள் மத்தியல் ஒரு விதமான நம்பிக்கை பிறந்தது. அவர், அரவணைக்க தொடங்கியதால், பாசமிகு குழந்தைகள் பேராசிரியையிடம் அன்பு கொண்டனர். நாளடைவில், குழந்தைகள் தொலைபேசியில் அவரிடம் பேச ஆரம்பித்தனர்.
அப்போதுதான், இவர்களை போன்று பல இலட்சம் குழந்தைகள் இந்தியா முழுவதும் இருப்பார்கள், அனைவரிடமும் எப்படி என்னால் பேச முடியும், இது சாத்தியமா?, அதே சமயத்தில் மற்ற குழந்தைகள் மீதும் அவர் கவலை கொண்டார். குழந்தைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், ஒரு மையம் இருக்க வேண்டும் என அவர் உணர்ந்தார்.
1098 வரலாறு?
குழந்தைகளுக்கான பிரச்னை, அவர்களுக்கான உதவி, குழந்தைகளுக்கான ஆலோசனை, உடனடி உதவி உள்ளிட்ட பிரச்னைகளுகு்கு தீர்வு காண ஒரு மையத்தை அமைக்க வேண்டும் எனவும், அவர்கள் தொடர்பு கொள்ள தொலைபேசி வசதியை ஏற்படுத்த தர வேண்டும் என அவர் முடிவு செய்தார். ஆனால், இது எல்லாம் எப்படி செயல்படுத்த முடியும் தனி நபராக, காசு இல்லாமல் குழந்தைகள் எப்படி தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களது பிரச்னைகளை கூற முடியுத் என்ற கவலைகளும் அவரிடம் சற்று அதிகமாகவே இருந்தது.
பொது தொலைபேசி தகவல் மையம் குறித்து அரசிடம் கூறும்போது, கண்டுகொள்ளவில்லை. இந்த பயணத்தில் அவர் பலசோதனைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அதே சமயத்தில், பொது மையத்தை அமைத்தே தீருவேன் என்ற லட்சிய பிடிவாதமும் இருந்தது. பின்னர், அரசின் கவனத்தை ஈர்க்கவும், குழந்தைகளிகன் பிரச்னை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, அவர் போராட்டத்தில் களத்தில் இறங்கினர். தனி நபராக தர்ணா போராட்டம் செய்ய தொடங்கினர், அவருக்கு ஆதரவாக சில குழந்தைகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். தொடர் உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தினர். மூன்றாண்டு கடும் போராட்டத்திற்கு பின், அரசு 1098 என்ற எண் குழந்தைகளுக்கென தேசிய இலவச உதவி எண்ணாக அறிவித்து, இதனை செயல்படுத்த தொடங்கியது.
இருந்தபோதிலும், 1098 என்ற எண் குழந்தைகள் நினைவில் கொள்ளும் வகையில் இல்லை என தெரிவித்தார். அதற்கு, ஒன்று - ஜீரோ -ஒன்பது- எட்டு என்பதற்கு பதிலாக, பத்து- ஒன்பது- எட்டு என்று மாணவா்களிடம் கொண்டு சென்றால், அவர்களை அதனை எளிதாக நினைவில் வைத்துகொள்வார்கள் என பரிந்துரை செய்தது அடுத்து, இந்த எண் முழுமையாக செயல்பாட்டு வந்தது. இந்த போராட்டம்தான் சைல்டுலைன், 1098 உதவி எண் உருவான காரணம்.