அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
29.3 C
Tamil Nadu
Sunday, December 3, 2023

சைல்டுலைன் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்று அறிவோமா?

முந்தைய பதிவில், சைல்டு லைன் உருவான விதம் குறித்து அடிப்படை விஷயங்களை தெரிவித்திருப்போம்.

தற்போது சைல்டுலைன் அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது, அது எப்படி குழந்தைகளுக்கு பேரூதவியாக உள்ளது என்பது குறித்து அறிவோம்.

ஜனவரி 13, 2021 நிலவரப்படி, இந்தியா முழுவதும் 598 நகரங்கள் மற்றும் மாவட்டங்களில் சேவை மற்றும் தீர்வு குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் பங்கு அமைப்பான, ரயில் நிலையங்களில் செயல்படும் சைல்டு ஹெல்ப் டெஸ்க் (139) மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்பு (1069) முயற்சியால் இந்த நகரங்களை மற்றும் மாவட்டங்களில் கண்காணிக்க முடிகிறது.

இதில் ரயில் ஹெல்ப் டெஸ்க் குழு நாடு முழுவதும் உள்ள 7,321 ரயில் நிலையங்களில் கண்காணித்து வருகின்றனர். அடிக்கடி பெற்றோர் தங்களது குழந்தைகளை ரயில் நிலையத்தில் விட்டு செல்வது, சிலர் குழந்தைகளை கடத்துவது, கூட்ட நெரிசல்களில் சிக்கிய குழந்தைகள் மாயமாவது உள்ளிட்டவை கண்காணிப்பது, தீர்வு காண்பதே ரயில்வே ஹெல்ப்டெஸ்க்ன் செயல்படாக உள்ளது.

தொலைபேசி அழைப்பு முதல் தீர்வு வரை:

அவசரம் மற்றும் ஆபத்தில் இருக்கும் குழந்தைகள் உடனடியாக 1098 என்ற எண்ணிக்கு அழைத்தால், குழந்தைகளை மீட்கும் வரை அவர்களை அதிகாரிகள் மூலம் கண்காணிக்க தொடங்குகின்றனர். இந்த நடைமுறை எப்படி செயல்படுகிறது என்பதை காணலாம்.

  • குழந்தைகள் அல்லது பதின்பருவ மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்னை, அவசர காலம் என்றால் 1098 என்ற எண்ணிற்கு அழைத்து உதவி கோரலாம். இந்த எண் 24 மணி நேரமும் செயல்படுகிறது.
  • 1098 சேவையாளர்கள் குழந்தைகளிடமே அல்லது பொதுவான நபர்களிடம் இருந்து தொலைபேசி அழைப்பு ஏற்றதும், அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் சேகரிக்க தொடங்குவார்கள். ஆபத்தில் இருக்கும் முடிந்த அளவிற்கு அனைத்து தகவல்களும் அவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான், ஆபத்தில் இருக்கும் குழந்தைகளை மீட்க எளிதாக இருக்கும்.
  • சேவையாளா்களிடம் பெறப்படும் அடிப்படை தகவல்களை கொண்டு, சைல்டுலைன் அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆபத்து அல்லது உதவி கோரும் குழந்தைகளை ஒரு மணி நேரத்தில் மீட்க நடவடிக்கை எடுப்பார்கள். இதில் காவல்துறையினர், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, சமூக பணியாளர்கள், ஆலோசர்கள் உள்ளிட்டோர் குழந்தைகளுக்கு தேவையான உதவி செய்து மீட்டுடெடுப்பார்கள்.
  • அதிகாரிகள் உதவிக்கு பிறகு, குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்வார்கள், கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க தகுந்த நடவடிக்கை எடுப்பார்கள், காப்பகங்களில் தங்க வைப்பார்கள், காப்பகத்தில் அனைத்து உரிய முறையில் கிடைக்கிறதா என உறுதி செய்வார்கள். பெற்றோரிடம் சேர விரும்பும் குழந்தைகளுக்கு, பெற்றோரை சந்திக்க ஏற்பாடு செய்வார்கள்.  

தொடரும்…

Related Articles

Latest Posts