You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Children Basic Rights in Tamil | குழந்தைகள் அடிப்படை உரிமைகள்

Children Basic Rights in Tamil||

Children Basic Rights in Tamil | குழந்தைகள் அடிப்படை உரிமைகள்

Children Basic Rights in Tamil | குழந்தைகள் அடிப்படை உரிமைகள்

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் நான்கு அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. குழந்தைகளுக்கான உரிமைகள் ஐக்கிய நாடுகள் சபையினால் வரையறுக்கப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களாலும் சமூகக் கட்டமைப்புகளாலும் குழந்தைகளுக்கான அவ்வுரிமைகள் மறுக்கப்படுகின்றன.

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் நமது கடமைகள் பற்றி அறிந்து அதன்படி நடந்துகொள்வதே குழந்தைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் நடவடிக்கைகள் ஆகும்.

Read Also: முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்

குழந்தைகளின் அடிப்படை உரிமைகள் மற்றும் பொதுவான உரிமைகள்

✓ குழந்தைகளுக்கான கல்வி உரிமைச் சட்டம் 2009

✓ போக்ஸோ சட்டம் 2012

✓ மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016

குழந்தைகளுக்கான அடிப்படை உரிமைகள்

குழந்தைகளின் உரிமைகளுக்கான ஐ.நா.வின் சர்வதேச உடன்படிக்கையின்படி 18 வயதிற்குட்பட்டவர்கள் அனைவரும் குழந்தைகளே. குழந்தைகளின் பாதுகாப்பு, கல்வி, உணவு, சுகாதாரம் ஆகியவற்றில் சிறப்புக் கவனம் செலுத்தி, அவற்றை உறுதிபடுத்த வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். நமது குழந்தைகளுக்கான அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு இயற்கையிலேயே வழங்கப்பட வேண்டியவை. குழந்தைகளுக்கான கல்வி உரிமை, அவர்களுடைய வாழ்வுரிமை ஆகும்.

➢ உயிர் வாழ்வதற்கான உரிமை

➢ பாதுகாப்பிற்கான உரிமை

➢ முன்னேற்றத்திற்கான உரிமை

➢ பங்கேற்பிற்கான உரிமை

குழந்தைகளுக்கான பொதுவான உரிமைகள்

குழந்தைகளுக்கு உயிர் வாழ்வதற்கான உரிமை, பாதுகாப்பிற்கான உரிமை, முன்னேற்றத்திற்கான உரிமை, பங்கேற்பதற்கான உரிமை என நான்கு வகையான அடிப்படை உரிமைகளும் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. இந்த உரிமைகளின் அடிப்படையில் பல்வேறு வகையான உரிமைகள் வருமாறு

Children Basic Rights in Tamil
Children Basic Rights in Tamil

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009 (RTE ACT 2009)

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 26 ஆகஸ்ட் 2009 அன்று பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, 27 ஆகஸ்ட் 2009 இல் மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது.

6 முதல் 14 வயது வரை உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்குவதற்கான இச்சட்டம், கல்விச் சார்ந்த சட்டங்களைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அவற்றை நடைமுறைப்படுத்துதலும் பின்பற்றுதலும் இன்றியமையாததாகும். இங்கு கல்வி சார்ந்த விதிகள், துணை விதிகள், சட்டச்சொற்கள் மற்றும் அவற்றுக்குரிய விளக்கங்கள் பற்றி விவாதிப்போம்.

• 6 முதல் 14 வயதுவரை உள்ள குழந்தைகள் 8ஆம் வகுப்புவரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறுதல். அருகிலுள்ள பள்ளி ஒன்றில் சேர்ந்து கல்வி பெறுதல்.

• விரும்புகிற பள்ளியில் சேர்ந்து படித்தல், வயதுக்கேற்ற வகுப்பில் சேருதல் மற்றும் 14 வயது கடந்த பிறகும் 8 ஆம் வகுப்பை முடித்தல்.

• தேக்கமின்றி 8ஆம் வகுப்புவரை தேர்ச்சி பெறுதல் ஆண்டின் இடையில் சேரும் குழந்தைகள் சிறப்புப் பயிற்சி பெறுதல்.

• உடலளவிலோ, மனதளவிலோ தண்டனை பெறாமல் இருத்தல் (தண்டனையைத் தடுக்கும் உரிமை).

• நலிவுற்ற மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகளை அருகில் உள்ள தனியார் பள்ளிகளில் 25ரூ இட ஒதுக்கீட்டில் நுழைவுநிலை வகுப்பில் சேர்த்தல்.

• இயற்கைத் தடையுள்ள இடங்களில் பள்ளிக்குச் செல்ல தேவையான போக்குவரத்து வசதி பெறுதல்.

• பள்ளி வளாகத்தினுள் அனைத்துக் குழந்தைகளையும் சமமாக நடத்துதல்.

• அரசால் வழங்கப்படும் விலையில்லாப் பாடப்புத்தகங்கள், சீருடைகள், கல்வி தொழில்நுட்ப சாதனங்கள் மற்றும் அரசின் நலத்திட்டங்களைப் பெறுதல்.

• மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளும் பள்ளியில் சேர்ந்து கல்வி பெறுதல்.

• குறிப்பிட்ட சில பள்ளிகளைத் (கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சைனிக் பள்ளி) தவிர, வேறு மாநிலத்தில் உள்ள எந்தப் பள்ளிக்கும் அல்லது அதே மாநிலத்தில் உள்ள வேறு எந்தப் பள்ளிக்கும் மாறுதல் பெற்றுச் சென்று கல்வியைத் தொடருதல்.

• தேவைப்படின் அப்பள்ளியிலிருந்து உடனடியாக மாற்றுச்சான்றிதழ் பெறுதல்.

• சென்று சேரும் பள்ளியில் சேர்க்கையை அப்பள்ளித் தலைமையாசிரியர் தாமதப்படுத்தாமலும் மறுக்காமலும் உடனடியாகச் செய்தல்.

• கட்டட வசதி, ஆசிரியர்கள், கற்றல் பொருள்கள், தூய குடிநீர், சுகாதாரமான கழிப்பறைகள், விளையாட்டுத்திடல், விளையாட்டுப் பொருள்கள் முதலியவற்றைப் பெறுதல்.

• ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான தரமான கல்வி பெறுதல்.

• கட்டணம் செலுத்தாமல் பள்ளியில் சேர்ந்து கல்வி பெறுதல்.

• எழுத்துத் தேர்வோ, நேர்முகத் தேர்வோ இன்றிப் பள்ளியில் சேருதல்.

• வயதிற்கான எவ்விதச் சான்றிதழும் இன்றிப் பள்ளியில் சேருதல்.

• 6 வயது நிறைவடையும் வரை பள்ளிக்கு முந்தைய முன்பருவக் கல்வி பெறுதல்.

குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள்

குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள்
குழந்தைகள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள்

மாற்றுதிறனாளிகள் உாிமைச்சட்டம் 2016 - The Rights of Persons with Disabilities Act 2016

ஈ. மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் 2016 என்பது மாற்றுத் திறனாளிகளின் நலன் மற்றும் அவர்களின் உரிமைக்காக இந்திய அரசால் 28, டிசம்பர் 2016 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது.

இச்சட்டம் பின்வரும் முதன்மைக் கூறுகளைக் கொண்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் உரிமையும் நலமும்

சம உரிமை

வேலை வாய்ப்பு

இந்தியாவில் மட்டும் 7 கோடிக்கும் அதிகமாகவே மாற்றுத்திறனாளிகள் உள்ளனர் என உலக வங்கியின் அறிக்கை குறிப்பிடுகிறது. மாற்றுத்திறனாளிகளின் தேவையைக் கருணை அடிப்படையில் பார்க்கக்கூடாது என்பதும் உரிமைகளின் அடிப்படையில் பார்க்க வேண்டும் என்பதும், அவர்களுக்கு எதிரான பாரபட்சங்கள் களையப்பட வேண்டும் என்பதும் ஐக்கிய நாட்டு சபையின் உடன்படிக்கையாகும். இச்சட்டம் 21 குறைபாடுகளுக்கான தீர்வுகளைக் குறிப்பிடுகிறது.

  1. பார்வையின்மை (Blindness)
  2. குறைபார்வை (Low Vision)
  3. செவித்திறன் குறைபாடு
  4. உடலியக்கக் குறைபாடு– (Locomoto Disability)
  5. தொழுநோயிலிருந்து குணமடைந்தோர் (Leprosy Cured)–
  6. குள்ளத்தன்மை– (Dwarfism)
  7. அறிவுசார் குறைபாடு (Intellectual Disability)
  8. மனநோய் (Mental Illness)–
  9. புற உலக சிந்தனை குறைபாடு (அ) மன இறுக்கம் (Autism Specturm Disorder)
  10. மூளை முடக்குவாதம் (Cerebral Palsy)
  11. தகைச்சிதைவு நோய்– (Muscular Dystrophy)
  12. நாள்பட்ட நரம்பியல் குறைபாடு– (Chronic Neurological Conditions)
  13. குறிப்பிட்ட கற்றல் குறைபாடு (Specific learning Disability)
  14. தண்டு வட மரப்பு நோய்– (Multiple Sclerosis)
  15.  பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு– (Speech and Language Disability)
  16. அழிவுச் சோகை– (Thalassemia)
  17. குருதி உறையாமை (அ) இரத்த ஒழுக்கு குறைபாடு (Hemophilia)–
  18. அரிவாள் செல் (Sickle Cell Anemia)
  19. பன்முகக் குறைபாடுகள் (பார்வையின்மையோடு செவித்திறன் குறைபாடு உட்பட)- (Multiple Disabilities including Deafblindness)
  20. அமில பாதிப்புக்குள்ளானோர் (Acid Victims)
  21. நடுக்குவாதம்– (Parkinson’s diseases)

போக்ஸோ சட்டம் - 2012 (POSCO Act -2012)

18 வயதுக்குக் குறைவான அனைத்து குழந்தைகளையும் பாலின வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தலில் இருந்து காப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டம் இது. இந்தச் சட்டம் 2012 ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டில் இருந்து வருகிறது. குழந்தைகளைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்துவது, அந்தரங்க உறுப்புகளைத் தொடுவது அல்லது மற்றவரின் அந்தரங்க உறுப்புகளைக் கட்டாயப்படுத்தி தொடவைப்பது, பாலியல் சீண்டல்கள் செய்வது, பாலியல் ரீதியாகச் செய்கை செய்வது, தொலைபேசி, அலைபேசியில் ஆபாசமாகப் பேசுவது, மின்னஞ்சல் அனுப்புவது, திட்டுவது, பாலியல் இச்சைக்கு அழைப்பது, ஆபாச படங்கள் எடுப்பது, விற்பது, தயாரிப்பது மற்றவருக்கு கொடுப்பது, இணையதளம், கணினி என எந்த தொழில் நுட்ப ரீதியில் இருந்தாலும் குற்றமே.

போக்ஸோ சட்டம் இந்நிகழ்வுகளுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், அபராதமும், அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்க வழிவகை செய்கிறது.

போக்ஸோ-மின்னணுப்பெட்டி

பாலினரீதியாக துன்பத்திற்கு ஆளாக்கப்படும் குழந்தைகள் பற்றிய தகவல்களை இணையதளத்தில் NCPCR இணையதளத்தில் தெரிவிக்கலாம். குழந்தைகளின் உரிமை பாதுகாப்பிற்கான தேசிய ஆணையத்தின் (NCPCR) முன் முயற்சியினால் செய்யப்பட்டு இருக்கும் இந்த ஏற்பாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளை நேரிடையாக ஆணையத்திற்குத் தகவல் தெரிவிப்பதற்கு உதவக்கூடியது. எளிதில் புகார் அளிப்பதற்கும், தவறு செய்பவர்கள் மீது சட்டம் 2012 இன் கீழ் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவும் வழி செய்கிறது. மின்னணுப்பெட்டி இயக்குவதற்கு எளிதானது. புகாரும் இரகசியமாகப் பாதுகாக்கப்படும்.

குழந்தைகள் உரிமைகளைப் பெறுவதில் பள்ளி மேலாண்மைக் குழுவின் பங்கு

• குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வுகளைப் பெறுதல்.

• குழந்தைகளின் உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை அனைத்து பெற்றோர்களுக்கும்

ஆசிரியர்களுக்கும் ஏற்படுத்துதல்.

• குழந்தைகள் தங்கள் உரிமையைப் பெறுவதற்கு அனைத்து விதமான ஏற்பாடுகளையும் பள்ளியில் செய்தல்.

• குழந்தைகளுக்கான உரிமைகள் வழங்கப்படுகின்றனவா என்பதைனைக் கண்காணித்தல் மற்றும் உறுதி செய்தல்.

• குழந்தைகளைப் பாதுகாப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளல்.

இவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது.