Pharmacy Course in Tamil | மருந்தாளுநர்கள் படிப்பு
Pharmacy Course in Tamil
மருத்துவத்துறையில் மருந்தாளுநர்களுக்கான படிப்புகளும் (Pharmacy Course) முக்கியத்துவம் பெறுகின்றன. பன்னிரண்டாம் வகுப்பில், இயற்பியல், வேதியியல், உயிரில் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்களில் 40 சதவிகிதம் அல்லது அதற்கும் கூடுதலான மதிப்பெண் பெற்றவர்கள் பார்மஸி படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்கக்ததால் நடத்தப்படும் மாநில அளவிலான கலந்தாய்வு வழியாக இப்படிப்பில் சேர்த்துகொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை மற்றும் மதுரையில் அரசு மருந்தாளுநர் கல்லூரிகள் உள்ளன. இதை தவிர, 37 சுயநிதி கல்லூரிகளிலும் மருந்தாளுநர் படிப்பு உள்ளது. பார்மஸி படிப்புவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருந்தாளுநராகப் பணிபுரியலாம். எம்.பார்ம் போன்ற உயர் கல்வி படிக்கலாம். பி.பார்ம் படித்தவர்கள் தனியாக மருந்தகம் துவங்கலாம். டி.பார்ம் படித்தவர்கள் நோயாளிகளுக்கு மருந்து ஆலோசகராகப் பணிபுரியலாம். வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு உள்ளது.
B Pharm (Bachelor of Pharmacy) - 4 years
D Pharm (Diploma in Pharmacy) – 2 years
Pharm D (Doctor in Pharmacy) – 6 years
Read Also: Medical Course Details in Tamil
Read Also: Nursing course details in Tamil
Read Also: Physiotherapist Course Details in Tamil