You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Physiotherapist Course Details in Tamil | பிசியோதெரப்பிஸ்ட் படிப்பு

Physiotherapist Course Details in Tamil

Physiotherapist Course Details in Tamil | பிசியோதெரப்பிஸ்ட் படிப்பு

Physiotherapist Course Details in Tamil

இப்போது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றால், மருத்துவர் சிகிச்சையை முடித்ததும் அடுத்த அறையில் உள்ள பிசியோதெரப்பிஸ்ட்டையும் பார்க்கலாம். நோயை குணமாக்குவதில் மருத்துவர் வழங்கும் சிகிச்சையுடன் பிசியோதெரப்பிஸ்ட் வழங்கும் பயிற்சியும் உடலையும் சீக்கிரம் குணமாக்கும். தற்போது பெரிய மருத்துவமனைகளில் பிசியோதெரப்பிஸ்ட்டுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். இதனால் நிபுணத்துவம் பெற்ற பிசியோதெரப்பிஸ்ட்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது.

நோயின் தன்மை, உடல் உறுப்புகளின் செயல்பாடு போன்றவற்றை நுணுக்கமாகச் கற்றுக்கொள்ளவும், மருத்துவ சிகிச்சையுடன் உடற்பயிற்சியின் மூலம் பாதிக்கப்பட்ட பகுதியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வரத் தேவையான பயிற்சிகளை கற்றுத் தரும் திறனும் பிசியோதெரப்பிஸ்ட்க்கு அவசியம்.

Read Also: Nursing course details in Tamil | நர்சிங் படிப்பு

பிசியோதெரப்பிஸ்ட், மருத்துவமனையில் பணி செய்வதோடு மற்ற நேரத்தில் நோயாளிகளின் இருப்பிடத்திற்கே சென்று பயிற்சி வழங்குவதும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் கணிசமான வருமானம் கிடைக்கிறது. தற்போது, விளையாட்டுத்துறை வளர்ந்து வருகிறது. இத்துறையில் பிசியோதெரப்பிஸ்ட்டுகளின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. விளையாட்டு துறையில் ஆர்வமுள்ளவர்கள், பிசியோதெரப்பிஸ்ட் படித்தும் வேலை வாய்ப்பு பெறலாம்.

பிசியோரெப்பிஸ்ட் படிப்பில் சேர நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்தால் போதும் என்ற நிலை மாறி, குறைந்தபட்சம் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றியிருக்க வேண்டும் என்றாகியிருக்கிறது.

பிசியோதெரபி படிப்பு அரசு கல்லூரிகள்

  • Govt. Institute of Rehabilitation Medicine, Chennai
  • Govt. College of Physiotherapy, Trichy
  • Govt. Kilpauk Medical College, Chennai
20க்கும் மேற்பட்ட சுயநிதி கல்லூரிகள் உள்ளன. அரசு கல்லூரியில் ஆண்டு படிப்பு கட்டணம் ரூ.3000. சுயநிதி கல்லூரிகளில் படிப்பு கட்டணம் ரூ 33,000.

பிசியோதெரபி படிப்பு வேலை வாய்ப்பு பிசியோெதரப்பிஸ்ட் படித்தவர்கள், மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் வேலை வாய்ப்பு பெறலாம். பணி அனுபவத்தை பெற்று தனியே பிசியோரதெரப்பி மையங்களை வைத்தும் நடத்தலாம். விளையாட்டு நிறுவனங்களிலும், உடற்பயிற்சி மையங்களிலும் வேலை வாய்ப்பு பெறலாம். இந்தியாவை விட வளர்த்த நாடுகளில் பிசியோதெரப்பி படிப்பை படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகம்.