You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Nursing course details in Tamil | நர்சிங் படிப்பு | செவிலியர் படிப்பு

Nursing course details in Tamil

Nursing course details in Tamil | நர்சிங் படிப்பு | செவிலியர் படிப்பு

Nursing course details in Tamil

12ஆம் வகுப்பு உயிரியல், வேதியியல், இயற்பியல் பாடப்பிரிவுகளை படித்தவர்கள், நர்சிங் (செவிலியர்) படிப்பில் சேரலாம் என்றாலும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் இடையே கலந்தாய்வு நடத்தியே நர்சிங் படிப்பில் சோ்க்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவ கல்லூரியில் ஒர் ஆண்டு படிப்பு கட்டணம் 3000 ரூபாய் மட்டுமே. மேலும், நர்சிங் படிப்பில் சேர போட்டியும் குறைவு. இதனால், நர்சிங் படிப்பை தேர்ந்தெடுப்பவர்கள் அதிகம். தற்போது அதிகரித்து வரும் மருத்துவமனைகளால் நர்சிங் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன. ஆரம்பத்தில் நர்ஸ் என்று அழைக்கப்பட்டவர்கள், பொதுவான ஒரு பிரிவின் கீழ் மட்டுமே பயின்று வந்தனர். தற்போது, நர்சிங் துறையிலும் பல சிறப்பு பிரிவுகளும் வர ஆரம்பித்துவிட்டன.

Read Also: Medical Course Details in Tamil

யாா் நர்சிங் படிக்கலாம்

நோயாளிகளுடன் மருத்துவர்களுடன் எந்தவிதமான சுணக்கமும் இல்லாமல் பணியாற்றுவதற்கான அர்ப்பணிப்பு, இரக்கம் மற்றும் சிறந்த தகவல் தொடர்பு திறனும் அவசியம்.

4 ஆண்டு நர்சிங் படித்து முடித்தவர்கள், ஒரு வருட பயிற்சி முடித்து, தங்களுடைய பெயரை நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிஎஸ்சி நர்சிங் முடிப்பவர்கள், எம்.எஸ்சி, நர்சிங் படிக்கவும் வாய்ப்பு உள்ளது. இளங்கலை நர்சிங் படிப்பு முடித்தவர்கள், குழந்தை மருத்துவ நர்சிங், அவசர கால பிரிவு நர்சிங், கார்டியோ –தெரபிக் நர்சிங், நியூரோ சயின்ஸ் நர்சிங், நெப்ரோ யூரோலஜி நர்சிங், மகளிர் மருத்துவ நர்சிங் என ஏராளமான சிறப்பு பயிற்சிளும் படிப்புகளும் உள்ளன.

எத்தனை இடங்கள் உள்ளன

தமிழகத்தில் ஐந்து அரசு மருத்துவ கல்லூரிகளில் நர்சிங் படிப்புகள் உள்ளன. இங்கு 250 பிஎஸ்சி, நர்சிங் இடங்களும், 2000 நர்சிங் சான்றிதழ் படிப்புக்கான இடங்களும் உள்ளன. தனியார் கல்வி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டில் 5134 பிஎஸ்சி, நர்சிங் இடங்கள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரியில் நர்சிங் படிப்புக்கான ஆண்டு கட்டணம் ரூ.3000 மட்டுமே, இதுவே தனியார் கல்லூரியில் 45000 ரூபாய்.

யாா் விண்ணப்பிக்கலாம்

மாணவிகளுக்கு வாய்ப்புகள் அதிகம் உள்ள நர்சிங் படிப்பில் தற்போது மாணவர்களும் சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். பிஎஸ்சி, நர்சிங் படிக்க 17 வயது நிறைவடைந்தவர்களும் 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். எஸ்சி, எஸ்டி பிரிவினர் வயது 35 வரை இருக்கலாம். மற்ற படிப்புகளுக்கு விண்ணப்பிக்க, 17 வயது நிரம்பியிருக்க வேண்டும்.

நர்சிங் படிப்பு வேலை வாய்ப்பு

தற்போது இந்தியா முழுவதும் 6 லட்சம் நர்சிங் படித்தவர்களுக்கான தேவை உள்ளது என்கிறது சுகாதாரத்துறை. மத்திய அரசு சுகாதாரத்துறையில் அதிக கவனம் செலுத்தி வருவதால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என கணித்துள்ளனர். நர்சிங் படித்தவர்களும் அரசு வேலை வாய்ப்பும் அதிகமாக உள்ளது.

நர்சிங் படித்தவர்களுக்கு வௌிநாட்டிலும் வேலை வாய்ப்பு மிகுந்துள்ளது. தமிழக அரசு நிறுவனமான ஒவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் நிறுவனம், நர்சிங் படித்தவர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பை அடையாளம் கண்டு தேர்ந்தெடுத்தும் அனுப்பும் பணியைச் செய்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்து அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளில் நர்சிங் படித்தவர்களுக்கு தேவை அதிகமாக உள்ளது.

நர்சிங் படிப்பு உள்ள அரசு மருத்துவ கல்லூரிகள்

  • Madras Medical College, Chennai
  • Madurai Medical College, Madurai
  • Chengalpattu Medical College, Chengalpattu
  • Gov. Mohan Kumaramangalam Medical College, Salem
  • Govt. Theni Medical College, Theni