Medical Course Details in Tamil | மருத்துவ படிப்பு | எம்பிபிஎஸ் படிப்பு
Medical Course Details in Tamil
கொரோனா பாதிப்பு பின், மருத்துவ துறையின் மதிப்பு மரியாதை கொடி கட்டி பறக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் தடுக்கி விழுந்தாலும் பொறியியல் படித்தவர்கள் மீது விழும் அளவிற்கு பொறியியல் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. ஆனால், மருத்துவ துறையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது.
மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான ஆர்வம் அதிகாித்து வருகிறது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், நர்சர் படிப்புகளில் சேர, நீட் நுழைவுத் தேர்வு எழுதி குறைந்தபட்ச மதிப்பெண் பெற வேண்டியது அவசியம்.
நீட் தேர்வு எழுதும் மாணவர்கள், இரண்டு கலந்தாய்வுகளில் கலந்துகொண்டும் அரசு மருத்துவ கல்லூரியில் சேரலாம்.
தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நடத்தும் கலந்தாய்வு
http://tnhealth.tn.gov.in/
அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் நடத்தும் கலந்தாய்வு
https://mcc.nic.in/
ஐந்தரை ஆண்டு காலப் படிப்பாக எம்பிபிஎஸ் உள்ளது. பல் மருத்துவ படிப்பு என்பது ஐந்தாண்டு காலம் கொண்டது. தமிழ்நாட்டில் 36 அரசு மருத்துவ கல்லூரிகளும் 16 தனியார் மருத்துவ கல்லூரிகளும் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரியில் 3150 இடங்கள் உள்ளன. இந்தியாவிலேயே அதிக மருத்துவ படிப்புகள் கொண்ட மாநிலமாக தொடர்ந்து தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது.
மருத்துவ படிப்பு வேலை வாய்ப்பு
எம்பிபிஎஸ் படித்து அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றுபவர்களுக்கு அரசு மருத்துவர்களாக நியமிக்கப்பட உள்ளது. தற்போது தனியார் மருத்துவமனைகள் அதிகரித்தும், தங்களுடைய கிளை மருத்துவ மனைகளை இரண்டாவது மற்றும் மூன்றாவது நகரங்களில் தொடங்குவதாலும் மருத்துவம் படித்தவர்களுக்கு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன.
Read Also: சிறந்த கல்லூரி தேர்வு செய்வது எப்படி
- சென்னை அரசு மருத்துவ கல்லூரிகள்
- சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை
- ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, இராயபுரம், சென்னை
- கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி, சேத்துப்பட்டு, சென்னை
- சென்னை அரசு மருத்துவ கல்லூரி, ஒமந்தூார், அரசினர் தோட்டம், சென்னை
- தமிழ்நாடு அரசு பல் மருத்துவ கல்லூரி, சென்னை
மருத்துவ படிப்பு கட்டணம் என்ன?
அரசு மருத்துவ கல்லூரிகளில் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ 13,600
பல் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைத்தால் செலுத்த வேண்டிய கட்டணம் ரூ 11600
பிற பிரிவை சேர்ந்த மாணவர்கள் எம்பிபிஎஸ், சேர ஒதுக்கீடு பெற்றாலோ பல் மருத்துவம் பயில வாய்ப்பு பெற்றாலே செலுத்த வேண்டிய கட்டணம் ரூ 9600
அரசு ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவ கல்லூரியில் கட்டணம் எவ்வளவு?
அரசு ஒதுக்கீட்டில் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் பொதுப்பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் அல்லது பல் மருத்துவம் சேர ஒதுக்கீடு பெற்றால், கல்வி கட்டணமாக ரூ.25,000 செலுத்த வேண்டும்.
தாழ்த்தப்பட்டோர், அருந்ததியினர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள், தங்களுடைய பெற்றோர்களின் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு குறைவாக இருந்தால், கல்வி கட்டணமாக ரூ.25,000 ரூபாய் செலுத்துவதில் இருந்து விலக்கு வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு
இந்தியாவில் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் நீட் தேர்வு எழுத வேண்டியது அவசியம். போட்டி அதிகரித்து வரும் வேளையில் நீட் நுழைவுத் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிடலும் தகுந்த முறையில் தயாரிப்பு பணி ஆரம்பிப்பது அவசியம்.
நீட் தேர்வை தேசிய தகுதித்தேர்வு ஆணையம் நடத்திவருகிறது. தேசிய தகுதித்தே்ாவு ஆணையம் நீட் தேர்வுக்கு எந்த பகுதியை படிக்க வேண்டும் என்பதற்கான பாடத்திட்டத்தையும், மாதிரி கேள்வித்தாள்களையும் வெளியிட்டுள்ளது. மாணவர்கள் இதனை முழுமையாக பயன்படுத்தி கொள்ளலாம். மேலும், தேர்வுக்கு முன்பு மாதிரி தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்துகிறது. இதனையும் எழுதி பழகிக்கொள்ளலாம்.
நீட் தேர்வுக்கு யார் விண்ணப்பிக்க முடியும்
பொதுப் பிரிவினர் இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் 50 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மற்ற பிரிவினர் மேற்கண்ட பாடங்களில் 40 சதவிகித மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
நீட் தேர்வு எழுத விருப்பப்படும் மொழிகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம். கேள்விகள் ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம்பெறும்.
மூன்று மணி நேரம் நடைபெறும் நீட் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் மற்றும் விலங்கியல்) பாடங்களிலிருந்து அப்ஜெக்டிவ் (சரியான விடைகளை தோ்ந்தெடுக்கும் முறை) முறையில் 180 கேள்விகள் கேட்கப்படும்.
எவ்வளவு மதிப்பெண்?
சரியான விடையளித்தால் 4 மதிப்பெண்கள். தவறான விடையளித்தால் ஒரு மதிப்பெண் கழித்துக்கொள்ளப்படும். கேள்விக்கு பதில் அளிக்கவில்லை என்றால் மதிப்பெண் கிடையாது. மொத்த மதிப்பெண் 720.