You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
Teachers Hill Rotation Guidelines PDF மலை சுழற்சி மாறுதல் வழிகாட்டு நெறிமுறைகள்
Teachers Hill Rotation Guidelines PDF Details
பள்ளி கல்வி, தொடக்க கல்வி இயக்ககம் நிர்வாகத்தின் கீழ் மலைப் பகுதிகளில் உள்ள தொடக்க, நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மலைச் சுழற்சி மாறுதலின் போது பின்பற்றப்பட வேண்டிய பொதுவான வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளி கல்வி செயலர் காகர்லா உஷா அரசாணை நிலை எண் 107 வெளியிடுகிறார்.
Teachers Hill Rotation Guidelines PDF Detailsமலை சுழற்சி மாறுதல் வழிகாட்டு நெறிமுறைகள்
1.மலைச்சுழற்சி மாறுதல்கள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளியில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.
2.மலைச் சுழற்சி முறை மாறுதல் நடைமுறையில் உள்ள ஒன்றியங்களில் பொது மாறுதலுக்கு முன்னதாகவே மலை சுழற்சி மாறுதல்கள் (முதல் நாளிலேயே நடத்தப்பட வேண்டும்)
3. அனைத்து வகை ஆசிரியர்களும் மலைப்பகுதிகளில் பணியாற்ற பெரிதும் தயக்கத்துடன் உள்ளனர் என்பதால் அனைத்து ஆசிரியர்களும் குறைந்த ஓராண்டு காலம் மலைப்பகுதியில் சுழற்சி முறையில் பணிபுரிய அனுமதிக்கப்பட வேண்டும். அவர்கள் மலைப்பகுதிகளில் உள்ள அதே பள்ளியிலேயே தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் நேர்வில் எழுத்துப்பூர்வமான கடிதம் பெற்று, அதே பள்ளியில் தொடர அனுமதிக்கலாம். அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் (இடைநிலை, பட்டதாரி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர், நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்) இது பொருந்தும்.
Teachers Hill Rotation Guidelines PDF
மலை இறக்கம் - மலை பகுதியில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் எவரேனும் அதே பள்ளியில் தொடர்ந்து பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் நிகழ்வில் அந்த ஆசிரியர்களை தொடர்ந்து அதே பணியிடத்தில் பணிபுரிய அனுமதித்து, மற்ற ஆசிரியர்களை அவர்களின் முன்னுரிமை ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த நாள் அடிப்படையில் சமவெளி பகுதிக்கு மாறுதல் அளிக்க வேண்டும். இவ்வாறு மாறுதல் அளிக்கும்போது, மலையேற்றத்தால் ஏற்படும் காலிபணியிடங்களையும் ஏற்கனவே சமவெளி பகுதியில் உள்ள காலிபணியிடங்களை ஒட்டுமொத்த காலிபணியிடங்களாக காண்பித்தல் வேண்டும். மாவட்டங்கள் பிரிக்கப்படும் போது, ஒரு ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள் வேறு ஒன்றியத்தில் இணையும் நிகழ்வில் அதாவது, ஒரு சமவெளிப்பகுதி ஒன்றியத்தில் உள்ள பள்ளிகள் மலைச்சுழற்சி ஒன்றியத்தில் இணையும்போது அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் பழைய ஒன்றியத்தில் சேர்ந்த தேதியே மலை சுழற்சிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
5. மலை ஏற்றம் - மலை இறக்கம் செய்யப்படுவதால் ஏற்படும் காலிபணியிடங்களை பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டிய எண்ணிக்கையை தவிர்த்து நிகர பணியிடங்களுக்கு சமவெளி பகுதியில் பணிபுரியும் ஆசிரியர்களில் இளையோரிலிருந்து மூத்தோர் என்ற நிலையில் முன்னுரிமை நிர்ணயம் செய்து சுழற்சி முறையில் மலை ஏற்றம் செய்யப்படுவர். ஏற்கனவே உள்ள சுழற்சி முழுமை பெறும் வரை மலையேற்றம் நிகழும்.
6.மலை சுழற்சி ஒரு முழுசுற்று நிறைவடைந்த பின்னர் ஒன்றியத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மலை சுழற்சி மாறுதல் பதிவேட்டில் இருந்து மலை சுழற்சிக்கு உட்படுத்தப்படாத அனைத்து வகை ஆசிரியர்களும் அடுத்த சுற்று மாறுதலுக்கு உட்படுத்தப்படுவர். குறிப்பாக ஒரு முழுச்சுற்று முடிவடையும் முன்பு நேரடி நியமனம் மூலமாகவே, பணிமாறுதல் மூலமாகவோ, பணி நிரவல் காரணமாகவோ இந்த ஒன்றியத்தில் இணையும் அனைவருக்கும்.
7. மலைச்சுழற்சி மாறுதலில், மலையில் இருந்து இறக்கம் செய்யும் ஆசிரியர்களுக்கு அந்த ஆண்டில் மலை ஏற்றம் செய்வதால் ஏற்படும் காலிபணியிடங்கள் மற்றும் மலை சுழற்சி ஒன்றியத்தில் ஏற்கனவே (The crucial date will be declared by the Directorate) காலியாக உள்ள மற்ற காலிபணியிடங்கள் அனைத்தும் கலந்தாய்வின்போது அட்டவணைப்படுத்தப்பட்டு, ஒன்றிய முன்னுரிமையின் அடிப்படையில் தெரிவு செய்வதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
9.பதவி உயர்வு பணியிடங்களான நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆகிய பணியிடங்களுக்கான பதவி உயர்வானது மலைப்பகுதிகளில் காலிபணியிடம் இல்லாத பட்சத்தில் மட்டுமே சம வௌி பகுதிகளில் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்.
10.சமவெளி பகுதியில் நடப்பாண்டில் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்கள் இளையோராக கருதப்பட்டு தொடர்ந்து வரும் கல்வியாண்டில் மலை சுழற்சிக்கான மலை ஏற்று பட்டியலில் அவர்களின் பெயர் முதலில் இடம்பெற வேண்டும். இது அந்த ஒன்றியத்தில் உள்ள முன்னுரிமையின்படி அமைதல் வேண்டும்.
11.பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கும் பதவி உயர்வு பெற்ற தேதி முன்னுரிமைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். நேரடி நியமன ஆசிரியர்கள் மற்றும் ஒன்றியங்கள் அல்லது பிற மாவட்டங்களில் இருந்து மாறுதலின் மூலம் பணியேற்ற ஆசிரியர்கள் அந்த ஒன்றியத்தில் பணியில் சேர்ந்த நாளை முன்னுரிமைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
12. மலை பகுதி அமைந்துள்ள ஒன்றியங்களில், மலைப்பகுதியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர்களும் அவர்கள் மலைப்பகுதியில் விரும்பும் காலம் அல்லது துறை அனுமதிக்கும் காலம் வரை பணிபுரிய அனுமதிக்கப்படுவர் . (குறைந்தபட்சம் 1 ஆண்டு)
எந்தெந்த ஆசிரியர்களுக்கு மலை சுழற்சியில் இருந்து விலக்கு?
பார்வையற்ற ஆசிரியர்கள்
40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மாற்றுத்திறன் கொண்ட ஆசிரியர்கள் (உரிய தகுதிவாய்ந்த அலுவலர்களால் வழங்கப்பட்ட சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்.)
மன வளர்ச்சி குன்றிய/மாற்றுத்திறன் உடைய தமது குழந்தைகளை பராமரிக்கும் ஆசிரியர்கள் (உரிய தகுதி வாய்ந்த அலுவலர்களால் வழங்கப்பட்ட சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும்)
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் டையாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்பவர்கள், இதய அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் மூளைகட்டி அறுவை சிகிச்சை செய்தவர்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
14. மலையேற்றம் ஆணை பெற்ற ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் பெற்று இருப்பின் அந்த ஆசிரியர் அடுத்த கலந்தாய்வுக்கு முன்னரே பணிவிடுப்பு செய்ய வேண்டும்.
15. பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு முன்னரே மலைச்சுழற்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு மலைப்பகுதிக்கு ஆணை பெற்ற ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் ஆணை பெற்றால் (அவ்வாசிரியர்களை பணிவிடுப்பு செய்யும் பட்சத்தில் மலைப்பகுதியில் காலிப்பணியிடம் ஏற்படும் என்பதால்), அந்த ஆசிரியர்களை தொடர்ந்து வரும் அடுத்த கலந்தாய்வுக்கு முன்னர் மட்டுமே பணிவிடுப்பு செய்ய வேண்டும்.
Read Also This: TN Teacher Transfer Counselling Policy 2021 Full DetailsRead Also This: Whose job is the preparation of the Transfer Certificate? – மாற்றுச்சான்றிதழ் தயாரித்தல் பணி யாருடையது?Teachers Hill Rotation Guidelines PDF - Download Here