You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TN Teacher Transfer Counselling Policy 2021 Full Details - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2021

Tamil Nadu Children Education Policy 2021

TN Teacher Transfer Counselling Policy 2021 Full Details - ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு 2021

பள்ளி கல்வித்துறை 17.12.2021 அன்று, அரசாணை எண் 176 மூலம் 2021-22 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு கொள்கை மற்றும் நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த உத்தரவு அரசு/ ஊராட்சி ஒன்றியம் /நகராட்சி தொடக்க, நடுநிலை பள்ளிகள்/ மற்றும் அரசு/நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில் 5 வகையான அரசாணைகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

  • 1. G.O. (Ms).No.404, Education, Science and Technology (S2) Department, Dated 25.05.1995
  • 2. G.O. (Ms).No.525, Education Department, Dated 29.12.1997.
  • 3. G.O. (Ms).No.231, school Education Department, Dated 11.09.2010.
  • 4. G.O.(1D).No.218, school Education Department, Dated 20.06.2019.
  • 5. The commissioner of school Education Roc.No.25154/A1/S2/2021,dated 13.10.2021, 09.11.2021, 17.11.2021 and 22.11.2021
குறிப்பு - இந்த அரசாணையை தமிழ் விளக்கத்துடன் வெளியிட்டவர் செல்வ ரஞ்சித்குமார். அவர்களுக்கு நன்றி. அவர்களுடைய தமிழ் பதிப்பை அப்படியே வெளியிடப்படுகிறது.

Also Read This | ஐபிஎல் போன்று, ஆசிரியர் பணியிட மாறுதல் ஏலம் விடப்படுகிறதா? – கல்வித்துறைக்கு நீதிமன்றம் குட்டு

பள்ளிக் கல்வித்துறை பொது மாறுதல் கலந்தாய்வுக் கொள்கைக

என்னுரை -

இது ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட பள்ளிக் கல்வித்துறையின் அரசாணை நிலை எண் 175 [SE5(1)] நாள் 17.12.2021–ல் தெரிவிக்கப்பட்டுள்ள ‘ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு கொள்கை’ தொடர்பான கருத்துகளைத் தொகுத்து, தமிழில் மொழிபெயர்த்து 3 பக்கங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இது முழுக்க முழுக்க மானுட மொழி பெயர்ப்பே என்பதால் பிழைகள் இருக்கலாம். ஆனால் கருத்துச்சிதைவு இருக்காது என நம்புகிறேன். புதிய நடைமுறையால் ஏற்பட்டுள்ள தெளிவு / ஐயம் குறித்து சில இடங்களில் அடைப்புக்குறிக்குள் சாய்வெழுத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைவிடக் கூடுதலான தெளிவோ, ஐயங்களோ, வினாக்களோ இதை வாசிக்கும் தங்களுக்கு எழக்கூடும். அதற்கான விடை காண, தாங்கள் சார்ந்திருக்கும் ஆசிரியர் இயக்கங்களை நாடுங்கள். நன்றி!.

முன்னுரிமை வட்டார (Priority Blocks) நடைமுறை:

ஓராண்டிற்குக் குறையாது மலைப்பகுதிகளில் பணியாற்ற விதிக்கப்பட்ட மலைச் சுழற்சி தொடர்பான அரசாணை எண் 404, EDUCATION, SCIENCE AND TECHNOLOGY (S2) DEPARTMENT DATED 25.05.1995 திரும்ப பெறப்படுகிறது. அதற்குப் பதிலாக இப்புதிய அரசாணையின் வழி, ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ள வட மாவட்ட, கிராமப்புற மற்றும் தொலைதூர வட்டாரங்களை அதன் ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஏற்ப வரிசைப்படுத்தி, அதில் மாநிலத்தில் உள்ள 413 வட்டாரங்களில் 10 சதவீதத்திற்கு மிகாமல், அதாவது ஆசிரியர் பற்றாக்குறை அதிகமுள்ள முதல் 41 வட்டாரங்களைத் தெரிவு செய்து அவற்றை முன்னுரிமை வட்டாரங்களாக(Priority Blocks) அறிவித்துக் கொள்ளுதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இப்பட்டியலில் இடம் பெறும் வட்டாரங்களின் பெயர்கள் காலத்திற்கேற்ப மாறுதலுக்குட்பட்டவை.

இனி முன்னுரிமை வட்டாரங்களை ஒவ்வொன்றாக நிரப்பும் வகையில்தான் ஆசிரியர் நியமனக் கலந்தாய்வு நடத்தப்படும். அங்கு நியமிக்கப்படும் ஆசிரியர்கள் குறைந்தது 5 ஆண்டுகள் அவ்வட்டாரத்திலேயேதான் பணியாற்றிட வேண்டும். மாற்று ஒன்றியங்களில் இருந்து அங்கு மாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் குறைந்தது 3 ஆண்டுகள் அவ்வட்டாரத்திலேயேதான் பணியாற்றிட வேண்டும்.

கட்டாய இடமாறுதல் நடைமுறை (Compulsory Transfer):

17.12.2021-க்குப் பின்னர் பணியமர்த்தப்படும் புதிய ஆசிரியர்கள் ஒரே பள்ளியில் தொடர்ந்து 8 ஆண்டுகள் பணிநிறைவு செய்தால் கட்டாயப் பணியிட மாறுதல் செய்யப்படுவர். (பள்ளி மீதான பற்றுதல் குறையவே வாய்ப்புண்டு) இவர்களுக்கான கலந்தாய்வு, பொது மாறுதல் கலந்தாய்வின் பணிநிரவல் கலந்தாய்வு நிகழ்வோடே நடத்தப்படும்.

பல்வேறு வகையான மாறுதல்களும் காலமும்:

  • பொது மாறுதல் கலந்தாய்வு மே / முதல் பருவ / இரண்டாம் பருவ இறுதியில் மட்டுமே நடத்தப்படும். முதலில் பணிநிரவலும் அதனைத் தொடர்ந்து விருப்ப மாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படும்.
  •  ாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு உயிரிழக்கும் படைவீரர்களின் இணையருக்கு, பொது மாறுதல் கலந்தாய்வுக்கு முன்னரே மாறுதல் வழங்கலாம்.
  • நிருவாகக் காரணங்களுக்கான மாறுதல்கள் எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம்.

பரிமாற்ற மாறுதல் (Mutual Transfer):

இரு ஆசிரியர்களுக்கிடையேயான பரிமாற்ற (Mutual) மாறுதல் விண்ணப்பத்தை கல்வியாண்டில் எப்போது வேண்டுமாலும் பரிசீலிக்கலாம். விண்ணப்பிக்கும் ஆசிரியர் 2 ஆண்டுகளில் பணி நிறைவு பெறுபவராக இருத்தல் கூடாது. ஒருமுறை பரிமாற்ற மாறுதலில் சென்றவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு மீண்டும் பரிமாற்ற மாறுதலுக்கு விண்ணப்பிக்க இயலாது.

அலகு மாறுதல்(Unit):

அலகுவிட்டு அலகு (Union / Municipal/ Welfare /DEE-DSE /DSE-DEE) செல்ல தகுதிகாண் பருவம் முடித்த ஆசிரியர்களே தகுதியானவர்கள். பள்ளிக் கல்வித்துறை, பிற துறைகளில் உள்ளோரை கல்வியாண்டில் எப்போது வேண்டுமானாலும், முன்னுரிமை ஒன்றியங்களின் காலிப்பணியிடங்களுக்குக் கலந்தாய்வு வழி ஈர்த்துக்கொள்ளலாம். அலகுவிட்டு அலகு மாறிச் செல்ல, அவர்கள் தற்போது பணியாற்றும் துறைத் தலைவரிடம் தடையின்மைச் சான்று பெறுதல் வேண்டும். மாறுதலில் செல்லும் அலகில் இவரே இளையவராகக் கருதப்படுவார்.

உபரி ஆசிரியர் பணி நிரல்:

ஒரு பள்ளியில் உபரிப் பணியிடம் உருவானால் அப்பள்ளி அளவிலான குறிப்பிட்ட நிலை / பாட ஆசிரியர்களில் பள்ளியளவில் இளைய ஆசிரியராக் கருதப்படும் நபர், தொடக்கக் கல்வித்துறையில் வட்டாரம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், வெளி மாவட்டம் என்ற வரிசையிலும், பள்ளிக் கல்வித்துறையில் வருவாய் மாவட்டம், வெளி மாவட்டம் என்ற வரிசையிலும் பணி நிரவல் செய்யப்படுவார். ஒருமுறை பணி நிரவல் செய்யப்பட்டவர் சுயவிருப்பம் இல்லாதபட்சத்தில் அடுத்த 3 கல்வியாண்டுகளுக்கு மீண்டும் பணி நிரவல் செய்யப்படமாட்டார். (வட்டார அளவிலான முன்னுரிமை பின்பற்றப்படும் தொடக்கக் கல்வித்துறையில் பணி நிரவல் செய்யப்பட்டோர் மீண்டும் தாய் வட்டாரம் திரும்ப முன்னுரிமை வழங்குவது பற்றியோ, அவர்களின் தாய் வட்டார பதவி உயர்வு முன்னுரிமை [ PROMOTION SENIORITY] மீதான பாதுகாப்புகுறித்தோ எதுவும் தெளிவுபடுத்தப்படவில்லை.)

உபரியாகக் கருதப்படும் ஆசிரியர் 40 சதவீதத்திற்கு மேலான பார்வைக் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி / அக்கல்வியாண்டில் பணி நிறைவு பெறப்போகிறவர் / NCC பொறுப்பாசிரியர் எனில் அவருக்கு முந்தைய ஆசிரியரே இளையவராகக் கருதப்பட்டு பணி நிரவல் செய்யப்படுவார். (இதற்கு முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளையும் பணிநிரவலுக்கு உட்படுத்துவதில்லை. ஆனால் இம்முறை பார்வைக் குறைபாடுடையோருக்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.)

பள்ளி அளவிலான இளைய ஆசிரியர் என்பவர் அக்குறிப்பிட்ட பள்ளியில் பணியேற்ற தேதியின் படி முடிவு செய்யப்படுவார். (பள்ளியில் பணியேற்ற தேதிதான் என்பதால் மூத்த பணி அனுபவமிக்க ஆசிரியராகவே இருந்தாலும் அவர் பணி நிரவல் செய்யப்படுவார்)

வட்டாரம், கல்வி மாவட்டம், வருவாய் மாவட்டம், வெளி மாவட்டம் உள்ளிட்ட ஒவ்வொரு பிரிவிலும் நிரவல் செய்யத் தொகுக்கப்படும் பள்ளி அளவிலான இளைய ஆசிரியர்கள், அவர்கள் முதன்முதலில் ஆசிரியப் பணியேற்ற தேதியின்படியும், ஒரே தேதியெனில் அவர்களின் பிறந்த தேதியின் அடிப்படையிலும் சார்ந்த பிரிவுகளில் வரிசைப்படுத்தப்படுவர்.

பள்ளி அளவிலான இளையோரைத் தவிர்த்து அக்குறிப்பிட்ட நிலை / பாடம் சார்ந்த வேறு ஆசிரியரைக்கூட சுயவிருப்பத்தின் பேரில் BEO/HM/DEO ஒப்புதலோடே உபரி ஆசிரியர் பணி நிரவலுக்கு அனுமதிக்கலாம்.

பொது மாறுதல் கலந்தாய்வுபொது ஆசிரியர் பணியிட நிர்ணயம் - அறிவிக்கை - விண்ணப்பிக்கும் முறை:

EMIS தளத்தில் ஆகஸ்ட் 1-ஆம் தேதியன்று இருக்கும் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப, கல்வி உரிமைச் சட்டப்படி ஆசிரியர் எண்ணிக்கை நிர்ணயிக்கப்படும். மே மாதம் கலந்தாய்வு நடந்தால் அம்மாதத்தோடே பணி நிறைவு பெறுவோரின் பணியிடம் காலியாக எடுத்துக்கொள்ளப்படும். அன்னார் பதவி உயர்வு பெறத் தகுதியிருப்பின் அதற்கு அனுமதிக்கப்படுவார். ஒரு ஆசிரியர் 1 மாதத்திற்கும் மேல் தகவலின்றி விடுப்பிலிருந்தால் (Unauthorized Absence) அவரின் பணியிடம் காலியாக எடுத்துக்கொள்ளப்படும். 6-10 வகுப்புகளில் ஆங்கில வழியில் ஒரு பிரிவில் 15 மாணவர்களுக்குக் குறைவான எண்ணிக்கையிருப்பின் தனியாக ஆசிரியர் நியமிக்கப்படமாட்டார்.

மே / செப்டம்பர் / டிசம்பர் மாத முதல் வாரத்தில் காலிப் பணியிடம், உபரிப் பணியிடம் & முன்னுரிமைப் பட்டியல் தொடர்பாக அறிவிக்கை வெளியிடப்படும்.

விருப்ப மாறுதல் கோருவர் தங்களது விண்ணப்பத்தையும், ஆட்சேபணை தெரிவிப்போர் தமது கோரிக்கையையும் மேற்படி அறிவிக்கை வெளியான 5 நாள்களுக்குள் EMIS தளத்தின் வாயிலாகப் பதிவு செய்ய வேண்டும். மேலும் முன்னுரிமை கோருவோர் அதற்கான சான்றுகளை உடன் தயார் செய்து அவற்றையும் இணையத்தில் பதிவேற்ற வேண்டும். மாவட்டத்திற்குள் & மாவட்டம் விட்டு மாவட்டம் விருப்ப மாறுதல் கோருவோர் இரண்டிற்கும் சேர்த்து ஒரே விண்ணப்பத்தில் விண்ணப்பித்தாலே போதுமானது.

காலிப் பணியிடம், உபரிப் பணியிடம் & முன்னுரிமைப் பட்டியல் தொடர்பான இறுதிப்பட்டியல், மேற்படி அறிவிக்கை வெளியிடப்பட்ட 10 வேலைநாள்களில் பிரசுரிக்கப்படும்.

விருப்ப மாறுதல் கலந்தாய்வில் ஆண் ஆசிரியர்கள் ஆண்கள் & இருபாலர் பள்ளிகளைத் தேர்வு செய்யலாம். பெண்கள் பள்ளியைத் தேர்வு செய்ய போதிய பெண்ணாசிரியர்கள் விண்ணப்பிக்காத போது ஆண் ஆசிரியர்கள் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவர். குற்றச்சாட்டு / ஒழுங்கின்மையால் நிர்வாக மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர் மீண்டும் அதே பள்ளியைத் தேர்வு செய்ய அனுமதியில்லை.

முன்னுரிமை வரிசனை (PRIORITY):

1. 100% பார்வைக் குறைபாடுடைய ஆசிரியர்கள்

2. 40%மேலான குறைபாடுடைய மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள்

3. மாற்றுத்திறனாளி / மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளையுடைய ஆசிரியர்கள்

4. சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை / Dialysis சிகிச்சை / இருதய அறுவைச் சிகிச்சை / புற்றுநோய் பாதிப்பு / மூளைக்கட்டி பாதிப்பிற்கு உள்ளான ஆசிரியர்கள்

5. முன்னுரிமை ஒன்றியங்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் (முன்னுரிமை ஒன்றியம் சாராத ஆசிரியர் 10 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்து station seniority -யை காப்பாற்றி வைத்திருந்தாலும் இனி அதனால் பலனில்லை)

6. படைப்பிரிவுகளில் பணியாற்றுவோரின் இணையர்

7. கணவன் / மனைவியை இழந்தோர், 40-வயதிற்கு மேலாகியும் திருமணமாகாத பெண்கள் (முதிற்கன்னி என்று குறிப்படப்படாததால் மருத்துவச் சான்று தேவையிருக்காது. கிராம நிருவாக அலுவலர் வழி பெறப்படும் Unmarried Certificate போதுமானதாக இருக்கும்.), சட்டப்படி திருமண முறிவு செய்து கொண்ட பெண்கள்.

8. தனது இணையர் 30கி.மீ தொலைவிற்கு அப்பால் ஒன்றிய அரசு / மாநில அரசு / பொதுத்துறை / அரசு உதவி பெறும் பள்ளிகள் / அலுவலகங்களில் பணியாற்றும் நேர்வு. ஒருமுறை இம்முன்னுரிமையைத் துய்த்தோர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இம்முன்னுரிமையைக் கோர இயலாது.

9. மற்ற ஆசிரியர்கள்

இவற்றுள் இனம் 1, 2, 3 & 4-ஐச் சார்ந்தோர் மாறுதலுக்கு விண்ணப்பிக்க, தற்போது பணியாற்றும் பள்ளியில் குறைந்தது ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

Full Details of the General Transfer Counselling Policy PDF 2o21 -

அதிகாரப்பூர்வமாக ஆங்கில விளக்கத்துடன் கூடிய அரசாணை கொடுக்கப்பட்டுள்ளது.