Whose job is the preparation of the Transfer Certificate? மாற்றுச்சான்றிதழ் தயாரித்தல் பணி யாருடையது?
பெரும்பாலான அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்பித்தல் பணி தவிர அலுவல் பணிகள் செய்வது வழக்கம். குறிப்பாக, பதிவேடு பராமரிப்பு பணி செய்வது, எமிஸ் தளத்தில் விவரங்கள் பதிவேற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர். ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பணியில் தொய்வு ஏற்பட இதுவும் ஒரு காரணம்.
இதுதவிர, அலுவலக பணியாளர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடையே சில அலுவலக பணிகளை யார் செய்ய வேண்டும் என்று வார்த்தை போர் நடப்பது அவ்வப்போது வழக்கம். அவ்வாறாக, ஒருவர், தமிழக முதல்வர் தனிப்பிரிவில் கேள்வி ஒன்று கேட்டு, அதற்கான தகவலையும் பெற்றுள்ளார்.
அந்த கேள்வியில், அரசு தொடக்க, நடுநிலை, உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வருட இறுதியில் வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ் Transfer Certificate தயாரித்து பணி யாருடையது, அதாவது இந்த பணி அலுவலக பணியாளர்கள் செய்ய வேண்டிய பணியா? அல்லது தலைமை ஆசிரியர்கள் செய்ய வேண்டிய பணியா? என கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு முதல்வர் தனிப்பிரிவு தெளிவாக பதில் அளித்துள்ளது, அதன் விவரம் பின்வருமாறு,
வருட இறுதியில், பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் மாற்றுச்சான்றிதழ்களை தயாரித்தல் பணி அலுவலர்களின் பணி ஆகும். அவ்வாறு தயார் செய்யப்பட்ட மாற்றுச்சான்றிதழ்கள் சரியாக உள்ளதா என ஆய்வு செய்து கையொப்பமிட்டு வழங்குவது பள்ளி தலைமை ஆசிரியர் பணி ஆகும்.
இதுதவிர, பதில் ந.க.எண் 11416/இ1/2020 நாள் 10.12.2020 என்று குறிப்பிட்டுள்ளது.
இதில் கவனிக்கதக்கது என்னவென்றால், மாற்றுச் சான்றிதழில் ஏதாவது மாணவர்கள் விவரங்கள் மாற்று சான்றிதழில் பிழையாக இருந்தால், அதற்கு தலைமை ஆசிரியரே முழு பொறுப்பு ஏற்க வேண்டும் என்று இந்த மறைமுகமாக தெளிவுப்படுத்தியுள்ளது.

Comments are closed.