NSS Logo in Tamil | NSS Icon | நாட்டு நலப்பணித்திட்டம் சின்னம்
NSS Logo in Tamil
நாட்டு நலப்பணித்திட்டம் சின்னம்
Read Also: நாட்டு நலப்பணித்திட்டம் என்றால் என்ன?
Read Also: நாட்டு நலப்பணித்திட்டம் குறிக்கோள்
நாட்டு நலப்பணித்திட்டத்தின் சின்னம் ஒரிசாவில் உள்ள கோனார்க் சூரியக்கோவில் உள்ள சக்கரம் ஆகும். இந்த பெரிய சக்கரமானது படைப்பின் சக்கரம், பாதுகாப்பின் சக்கரம், விடுதலையின் சக்கரம் என்று வருணிக்கப்படுகிறது. இந்த சக்கரம் இயக்கத்தை குறிக்கிறது. இது வாழ்க்கை சக்கரத்தை குறிக்கிறது. இது தொடர்ச்சியையும் மாற்றத்தையும் அதாவது நாட்டு நலப்பணித்திட்டத்தின் தொடர்ச்சியான பணியினையும் அதனால், ஏற்படும் மாற்றங்களையும் குறிக்கிறது.
நாட்டு நலப்பணித்திட்டம் முத்திரை
நாட்டு நலப்பணித்திட்டத்தின் முத்திரையில் என்.எஸ்.எஸ் சின்னம் பொறிக்கப்பட்டிருக்கும். இதை நாட்டு நலப்பணித்திட்ட உறுப்பினர்கள் சமூக சேவைகளில் ஈடுபடும்பொழுது அணிந்திருப்பர். கோனார்க் சக்கரத்தில் எட்டு ஆரங்கள் காணப்படும. ஒவ்வொரு ஆரமும் மூன்று மணி நேரங்களாகக் கருதப்பட்டு இருபத்து நான்கு மணி நேரத்தை குறிக்கும்.
அதாவது தாங்கள் இருபத்து நான்கு மணி நேரமும் சேவை செய்ய தயாராய் இருப்பதை குறிக்கும் வண்ணமாய் அதை நாட்டு நலப்பணித்திட்ட உறுப்பினர்கள் எப்பொழுதும் அணிந்து இருப்பர். இது சக்தி மற்றும் முழு ஆர்வத்தை குறிக்கிறது. இதனை சுற்றி அமைந்துள்ள நீல நிறம் மனித குலத்துக்கான சேவையை குறிக்கிறது.
மேலும் முத்திரையை சுற்றி நாட்டு நலப்பணித்திட்டத்தின் கொள்கையை பறைசாற்றக்கூடிய “ எனக்காக அல்ல உனக்காக (Not Me But You)” என்னும் வாசகம் இந்தியிலும், ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருக்கும். இது ஜனநாயகத்தையும், தன்னலமற்ற சேவையின் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது. ஒருதனிமனிதனின் நலன் மொத்த சமுதாயத்தின் நலனையே சார்ந்துள்ளது. இந்த கொள்கையை நாட்டு நலப்பணித்திட்டம் தனது அனுதின நடைமுறைகளில் ஒர் அங்கமாக கொள்ள வேண்டும்.