You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

NSS scheme Details in Tamil | National Service Scheme in Tamil | நாட்டு நலப்பணித்திட்டம் என்றால் என்ன?

Typing exam apply Tamil 2023

NSS scheme Details in Tamil | National Service Scheme in Tamil | நாட்டு நலப்பணித்திட்டம் என்றால் என்ன?

NSS scheme Details in Tamil

தேசப்பிதா என்று அழைக்கப்படும் காந்தியடிகளின் காலத்தில் இந்திய மாணவர்களை நாட்டு நலப்பணிகளில் ஈடுபட வைக்கும் எண்ணம் துளிர்விட்டது. அவர் தமது மாணவ ஆதரவாளர்களிடம் வலியுறுத்திய முக்கிய கருத்து என்னவென்றால், நமது சமுதாயக் கடமைகளை எப்பொழுதும் நம் கடமையாக கொள்ள வேண்டும் என்பதே.

மாணவர்களின் முதல் கடமை படிக்கும் காலங்களை தன்மனம் போன போக்கில் செயல்படம் காலங்களாக எண்ணாமல், சமுதாய சேவைகளில் ஈடுபடத் தங்களை தயார்படுத்தும் காலங்களாக நினைத்து செயல்பட வேண்டும். மாணவர்கள் தம்மை சுற்றியுள்ள சமுதாயத்தினருடன் ஒரு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். ஆசிரியர்கள் சமூக பொருளாதார பலவீனங்கள் குறித்து ஆய்வு செய்ய மாணவர்களை தூண்ட வேண்டும். இதன் வழியாக மாணவர்கள் அத்தகைய பலவீனங்களை களைய முற்படுவர். இதனால் கிராமங்களில் நிலை உயரும். கிராமங்கள் உயர்ந்தால், நம் நாடு நலம்பெரும். கிராமங்களின் வளர்ச்சியே நம் நாட்டின் வளர்ச்சியாக கருதப்படுகிறது.

Read Also: தேசிய பசுமைப்படை - சுற்றுச் சூழல் மன்றம்

விடுதலைக்கு முந்தைய காலமானது மாணவர்களை சமூக சேவைகளில் ஈடுபடுத்தியமைக்காக சிறப்பு பெற்றது. கல்வியை சீரமைப்பதற்காகவும், கற்றவர்களின் தரத்தை உயர்த்துவதற்காகவும் மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவின் தலைவராக முனைவர் இராதகிருஷ்ணன் அவர்கள் செயல்பட்டபோது, மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே ஒரு ஆரோக்கியமான தொடர்பை ஏற்படுத்துவதற்காக நாட்டு நலப்பணித்திட்டத்தை அறிமுகப்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.

இதன் விளைவாக இதே திட்டத்தை சிஏபிஇ அமைப்பும், ஜனவரி 1950இல் மறுபடியும் பரிந்துரை செய்தது. இதனை தொடர்ந்து, 1969ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ம் தேதி நாட்டு நலப்பணி திட்டம் உருவானது.