Magalir Urimai Thogai Camp Date | மகளிா் உரிமை தொகை முகாம் எப்போது நடக்கும்
Magalir Urimai Thogai Camp Date
மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்ப முகாம் வரும் ஜூலை 24ம் தொடங்கும் என்று சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு பெண்களுக்காக கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி, தகுதிவாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ ஆயிரம் உரிமை தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டம் அடுத்த மாதம் முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
இதற்கான ஆயத்தப்பணிகள் இளம்பகவத் ஐஏஎஸ் தலைமையிலான அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பயோமெட்ரிக் கருவிகள் அரசு பள்ளிகளில் இருந்து பெறப்பட்டுள்ளது. இத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தவும், இத்திட்டத்திற்கு மகளிர்கள் விண்ணப்பிக்க ஏதுவாக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்களுக்கு பயிற்சி வழங்கும் பணி தொடங்கியுள்ளது, மேலும் விண்ணப்பங்களும் இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
Read Also: Magalir Urimai Thogai Government Order PDF Download
Read Also: மகளிர் உரிமை தொகை திட்டம் எப்போது?
இந்த நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உரிமை தொகை விண்ணப்பம் தொடர்பாக முகாம் ஜூலை 24ம் தேதி முதல் மாநகராட்சி அதிகாரிகள் மூலம் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.