Magalir Urimai Thogai Government Order PDF Download | Magalir Urimai Thogai GO | மகளிர் உரிமை தொகை அரசாணை
Magalir Urimai Thogai Government Order PDF Download
தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை திட்டம் விரிவான வழிகாட்டு நெறிமுைறகளை ஜூலை 10ம் தேதி ( 10.7.2023) அன்று வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் அப்படியே வெளியிடப்படுகிறது –
‘ஆணுக்கிங்னே பெண் நிகர் என்னும் சமத்துவப் பாதையில் தமிழ்நாடு அரசு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டிச் செயல்படுத்தி வருகிறது. அவற்றுள் மற்றொரு மாபெரும் நலத்திட்டமாக, மாதந்தோறும் உரிமை தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.
Magalir Urimai Thogai Government Order PDF Download – Click Here
Read Also: Magalir Urimai Thogai Form PDF Download
1.வரலாற்று பின்புலம்
வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்த்தால், தாய்வழி சமூக முறைதான் மனிதகுலத்தை முதலில் வழிடத்தி வந்திருக்கிறது என்ற உண்மை தொிய வரும். உழவுக் கருவிகளை கண்டுபிடித்து, வேளாண் சமூகமாக மாறியபோதும்கூட, ெபண்களின் உழைப்பு ஆண்களுக்கு நிகராகவே அமைந்திருந்தது. ஆனால், காலப்போக்கில் மதத்தின் பெயராலும், பழமையான மரபுகளின் பெயராலும், பெண்கள் வீட்டுக்குள் முடக்கப்பட்டார்கள். அவர்களுக்கு கல்வியறிவு மறுக்கப்பட்டது. பெண்குலத்தின் உழைப்பு நிராகரிக்கப்பட்டது. பூட்டிய இரும்பு கூட்டின் கதவினை திறந்து, பெண் அடிமைதனத்தை தகர்த்து, அவர்களுக்கான சமூக, பொருளாதார சுதந்திரத்தை மீட்க எத்தனையே சமூக சீா்திருத்தவாதிகள் பணியாற்றதன் விளைவாக, இன்று பள்ளி, கல்லூரி படிப்புகளில் மாணவிகள் அதிகம் பயின்று பெண்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். அரசு பணியாளர் தேர்வுகளிலும் பெண்கள் அதிகம் தேர்ச்சி பெறுவது தமிழச் சமூகத்தின் முதிர்ச்சியை காட்டுகிறது. இன்றளவும் பல குடும்பங்களில் குறிப்பாக பொருளாதாரத்தை சுமக்கும் முதுகெலும்பாகவும் பெண்கள் இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
2. பெண்களின் உழைப்புக்கான பொருளாதார மதிப்பு
சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் ஒரு பெண் இருப்பார் என்று கூறுவதுண்டு. உண்மையில், ஒவ்வொரு நாளும் தன் திறனுக்கேற்ற பணிபுரிந்து, பொருள் ஈட்டும் ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் அவரது தாய், சகோதிரி, மனைவி, மகள் ஆகிய பெண்களின் பல மணிநேர உழைப்பு மறைந்து இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொரு ஆணின் வெற்றிக்காகவும், அவரவர் குழந்தைகளின் கல்வி, உடல்நலம் காக்கவும் இந்த சமூகத்திற்காகவும், வீட்டிலும், வெளியிலும் ஒரு நாளைக்கு பல மணி நேரம் பெண்கள் உழைத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த உழைப்புக்கு ஊதியம் கணக்கிடப்பட்டிருந்தால், குடும்ப சொத்துகள் அனைத்திலும் சமமாக பெண்கள் பெயரும், சட்டம் இயற்றாமலேயே இடம் பெற்றிருக்கும்.
இப்படிக் கணக்கில் கொள்ளப்படாத பெண்களின் உழைப்பை முறையாக அங்கீகரித்திடவே பெண்களுக்குச் சொத்துரிமை வழங்கி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் இட ஒதுக்கீடு அளித்து பெண் உரிமை போற்றிட, கலைஞர் அவர்களின் பெயரால் இந்த மகளிர் உரிமைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான், இந்தத் திட்டத்திற்கு மகளிருக்கான உதவித் தொகை என்று இல்லாமல் மகளிர் உரிமைத் தொகை’ என்று கவனத்துடன் பெயரிடப்பட்டிருக்கிறது.
3.உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை
உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் (Global Gender Gap Report -2023), தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில், இந்தியா 127ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. வாங்கும் திறன் அடிப்படையில், பெண்களின் உலகளாவிய சராசரி ஆண்டு வருமானம் சுமார் $11,000 என்றும், அதேவேளையில், ஆண்களின் சராசரி ஆண்டு வருமானம் $21,000 என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஆண்களின் வருமானத்தைவிட, பெண்கள் ஏறக்குறைய சரிபாதி அளவுக்குத்தான் வருமானம் ஈட்டுகிறார்கள். உலகளாவிய அளவில், ஆண்டு வருமானத்தில் பாலின அடிப்படையில் பெரிய அளவில் மாறுபாடு இருப்பதாகவும் இந்த ஆய்வறிக்கை கண்டறிந்துள்ளது. குறைவாக மதிப்பிடப்படும் பெண்களின் உழைப்புக்கான பொருளாதார மதிப்பை விவசாயம், வீட்டு வேலை போன்ற குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் ஈடுபட்டுள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பொருளாதார சுதந்திரத்தை வழங்கிடவும் இந்த மாபெரும் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது.
4.பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம்
பன்னாட்டுத் தொழிலாளர் அமைப்பின் 2022ஆம் ஆண்டுத் தரவுகளின்படி, இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 23.97% ஆகும். தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 28.5% ஆக உள்ளது. இது தேசிய சராசரியை விட அதிகமாகும். 2022-23ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வு அறிக்கையின்படி, தமிழ்நாட்டில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் 12% சதவீதம் உயர்ந்துள்ளது. பெண்களுக்குக் கட்டணமில்லாப் பேருந்துப் பயணம், புதுமைப்பெண் போன்ற மாநில அரசின் முன் மாதிரித் திட்டங்கள் காரணமாக வேலைக்கு செல்வதற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெண்களுக்கான வாய்ப்புகள் பெருகி உள்ளன.
5.உலகளாவிய ஆய்வுகள்
பொது அடிப்படை வருமானம் (Universal Basic Income) என்ற பெயரில் உலகில் பல நாடுகளில் சோதனை முறையில், குறிப்பிட்ட சில பகுதிகளில், ஒரு சில பிரிவினரிடம் மட்டும் இத்தகைய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அப்படி பரிசோதனை அடிப்படையில் நிறைவேற்றப்பட்ட திட்டத்தின் மூலமாகவே, பல குறிப்பிடத்தக்க மாற்றங்கள் நிகழ்ந்திருப்பதாகப் பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்தத் திட்டத்தின் மூலம். வறுமை பாதியாகக் குறைந்திட வாய்ப்பு உண்டு என்றும், கிடைக்கும் நிதியைப் பெண்கள் தங்கள் குழந்தைகளின் கல்விக்கும், ஊட்டச்சத்து மற்றும் மருத்துவச்செலவு செய்திடவும் முன்னுரிமை தருகிறார்கள் எனவும், சிறுசிறு தொழில்களைச் செய்ய முன்வருகிறார்கள் எனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இவை அனைத்துக்கும் மேலாக, பெண்கள் தன்னம்பிக்கை பெற்றுள்ளார்கள். பரிசோதனை முயற்சியாக உலகில் சில ஆங்காங்கே நடைமுறைப்படுத்திய திட்டத்திற்கே இவ்வளவு பயன்கள் கிடைக்கின்றன என்றால் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படவுள்ள இந்த மகத்தான முயற்சி, எதிர்காலத்தில் தமிழ்ச் சமூகத்தில் பெரும் பொருளாதாரப் பலன்களை உருவாக்கும்.
6. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 27.3.2023 அன்று ஆற்றிய உரையில் பின்வருமாறு அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, வரலாற்றில் விளங்கவுள்ள, இந்த மகத்தான மகளிர் உரிமைத் தொகை வழங்கும் திட்டம் ஏறத்தாழ ஒருகோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கிடும் வகையில் அமைந்திடும்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி வரலாற்றுச் சிறப்புமிக்க கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
7. திட்டத்தின் நோக்கம்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இரண்டு முக்கிய நோக்கங்களை கொண்டுள்ளது. குடும்பத்திற்கான வாள்நாளெல்லாம் ஒயாமல் உழைத்து கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்குக் கொடுக்கும் அங்கீகாரம் முதன்ைமையானது. அடுத்து ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை என்பது பெண்கள் வாழ்வாதரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்பதாகும்.
8.விண்ணப்பிக்கும் நடைமுறைகள்
i குடும்பத் தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற, கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்ற குடும்பங்களில், 21 வயது நிரம்பிய பெண் ஒருவர் விண்ணப்பிக்கலாம். அதாவது, செப்டம்பர் 15, 2002 தேதிக்கு முன்னர் பிறந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ii) இத்திட்டதிற்கு பொது விநியோக நியாயவிலைக் கடைகள் ஒரு கணக்கெடுப்பு அலகாக எடுத்துக்கொள்ளப்படும். விண்ணப்பதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இருக்கும் நியாயவிலைக் கடை அமைந்திருக்கும் விண்ணப்பப் பதிவு முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
iii) ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்.
8.1. குடும்பத்தலைவி வரையறை
i) குடும்ப அட்டையில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் அனைவரும் ஒரு குடும்பமாகக் கருதப்படுவர்.
ii) ஒவ்வொரு தகுதிவாய்ந்த குடும்பத்திலும் உள்ள குடும்பத்தலைவி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம்.
iii) குடும்ப அட்டையில் குடும்பத்தலைவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள பெண் குடும்பத் தலைவியாகக் கருதப்படுவார்.
iv) குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராகக் குறிப்பிடப்பட்டிருந்தால், அந்தக் குடும்பத்தலைவரின் மனைவி குடும்பத்தலைவியாகக் கருதப்படுவார்.
v) குடும்ப அட்டையில் ஆண் குடும்பத்தலைவரின் மனைவியின் பெயர் ஏதேனும் காரணத்தினால் இல்லாதபட்சத்தில், குடும்பத்திலுள்ள இதர பெண்களில் ஒருவர் கருதப்படுவார். ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவியாக கருதப்படுவார். ஒன்றுக்கும் மேற்பட்ட 21 வயது நிரம்பிய பெண்கள் இருந்தால், இத்திட்டத்தின்கீழ் பயன்பெற, ஒரு நபரைக் குடும்ப உறுப்பினர்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்கச் செய்யலாம்.
vi) திருமணமாகாத தனித்த பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால் அவர்களும் குடும்பத் தலைவிகளாகக் கருதப்படுவர்.
8.2. பொருளாதாரத் தகுதிகள்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் குடும்பங்கள் கீழ்க்காணும் மூன்று பொருளாதார அளவுகோல்களுக்கு உட்பட்ட குடும்பங்களாக இருத்தல் வேண்டும்.
i) ஆண்டு வருமானம் ரூ.2.5 இலட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
ii) ஐந்து ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது பத்து ஏக்கருக்குக் குறைவாகப் புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்கள்.
iii) ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள்.
பொருளாதாரத் தகுதிகளுக்காகத் தனியாக வருமானச் சான்று அல்லது நில ஆவணங்களைப் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கத் தேவையில்லை.
8.3. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள்
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் குடும்ப உறுப்பினர்களில் யாரேனும், கீழ்க்காணும் ஏதாவது ஒரு வகையைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர், மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதி இல்லாதவர் ஆவர்.
i) ரூபாய் 2.5 இலட்சத்திற்குமேல் ஆண்டு வருமானம் ஈட்டும் குடும்பங்கள்.
ii) குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சம் மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள்.
iii) ஆண்டுக்கு ரூ.2.5 இலட்சத்திற்குமேல் வருமானம் ஈட்டி தொழில் வரி செலுத்துவோர்.
iv) மாநில, ஒன்றிய அரசு ஊழியர்கள் / பொதுத்துறை நிறுவனங்கள்/வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதாரர்கள்.
v) தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் (ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களைத் தவிர). அதாவது பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள்.
vi) சொந்தப் பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள்.
vii) ஆண்டுக்கு ரூ.50 இலட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை (Annual turnover) செய்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள்.
viii) ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்புசாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற தொடர் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள்.
மேற்கண்ட ஏதாவது ஒரு தகுதியின்மை வகைப்பாட்டில் வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத் தகுதி இல்லை.
8.4 விதிவிலக்குகள்
மாற்றுத் திறனாளிகள் நலத்துறையால் வழங்கப்படும் அறிவுசார் மாற்றுத்திறன், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறன், முதுகுத்தண்டுவடம் / தண்டுவடம் மறப்பு நோய் மற்றும் பார்க்கின்சன் நோய் மாற்றுத் திறன், தசைச்சிதைவு நோய் மாற்றுத்திறன், தொழுநோய் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை பெறும் உறுப்பினரைக் கொண்ட குடும்பங்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவை. இவ்வகைப்பாட்டினர், திட்டத்தின் பிற தகுதிகளைப் பூர்த்தி செய்து, எவ்விதத் தகுதியின்மை வகைப்பாட்டிலும் வரவில்லை எனில், விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
9. செயல்படுத்தும் துறைகள்
இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நிர்வாகத் துறை சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை ஆகும். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சமூகப் பாதுகாப்புத் திட்ட ஆணையர், இத்திட்டத்தைச் செயல்படுத்தும் துறைத் தலைவராகச் செயல்படுவார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமைத் தலைமைச் செயல் அலுவலர், மாநில அளவில் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், மென்பொருள் உருவாக்குதல், திட்டத் தரவுகளைச் சரிபார்த்தல் ஆகிய பணிகளைச் செய்வார். சிறப்புப் பணி அலுவலர், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின், ஒட்டுமொத்தத் திட்டப் பணிகளை ஒருங்கிணைப்பார். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையுடன் ஒருங்கிணைப்புத் துறைகளாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆகியவை செயல்படும்.
மாவட்ட அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திட்டப் பயனாளிகளைக் கண்டறிதல், முகாம்கள் ஏற்பாடு செய்தல், விண்ணப்பங்கள் பதிவு செய்தல், பயனாளிகள் செய்யும் மேல்முறையீட்டைத் தீர்வு செய்தல் ஆகிய பணிகளை மாவட்ட அளவிலான அலுவலர்கள், வட்ட அளவிலான அலுவலர்களைக் கொண்டு செய்ய வேண்டும். இப்பணிகளைச் சென்னைப் பெருநகர மாநகராட்சிப் பகுதியில், சென்னைப் பெருநகர மாநகராட்சி ஆணையாளர் செயல்படுத்துவார்.
10.மாநிலக் கண்காணிப்புக்குழு
தலைமைச் செயலாளர் தலைமையில் மாநில அளவில் இத்திட்டத்தை கண்காணிக்கவும் ஒருங்கிணைக்கவும் மாநிலக் கண்காணிப்புக்குழு செயல்படும். இக்குழுவில், வளர்ச்சி ஆணையர், நிதித்துறை, சிறப்புத் திட்டச் செயலாக்கத்துறை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆகிய துறைச் செயலாளர்கள் உறுப்பினர்களாக இருப்பர். இக்குழு திட்டச் செயல்பாடுகள் குறித்து அவ்வப்பொழுது ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி, செயல்படுத்தும் அரசுத்துறை அலுவலர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்கும்.
11. விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்
திட்டச்செயலாக்கம் குறித்த விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் இவ்வரசாணையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதைத் துறைத்தலைவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர்களும் முழுமையாகப் பின்பற்றித் திட்டப் பயனாளிகளைக் கண்டறிய வேண்டும்.
12. நிதி ஒதுக்கீடு
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் செயல்படுத்த 2023-24ஆம் நிதியாண்டில் செயல்படுத்திட ரூ.7000 கோடிக்கு நிர்வாக அனுமதியும் நிதி ஒப்பளிப்பும் வழங்கலாம் என அரசு முடிவு செய்து அவ்வாறே ஆணையிடுகிறது.
மேலே பத்தி 12 இல் ஒப்படைப்பு செய்யப்பட்ட செலவினத்தை 2023-24 வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில், கீழ்காணும் கணக்குத் தலைப்புகளின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட வேண்டும்.
2235-சமூகப் பாதுகாப்பும் நலனும் – 02 – சமூக நலன் – 103-மகளிர் நலன் – மாநில செலவினங்கள் – CD மகளிர் உரிமைத் தொகை 311 மானியங்கள் மானியம் 02 பொதுவான [DPC: 2235-02-103-CD-311-02]
2235 – சமூகப் பாதுகாப்பும் நலனும் – 02 சமூக நலன் – 789 – ஆதி திராவிடர்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டம் மாநில செலவினங்கள் AB மகளிர் உரிமைத் தொகை – 311 மானியங்கள் 02 பொதுவான மானியம் [DPC: 2235-02-789-AB-311-02]
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டச் செயல்பாட்டுக்காக பயோமெட்ரிக் தொழில்நுட்பக் கருவிகள் புதிதாக வாங்குதல் மற்றும் வாடகைக்கு எடுத்தல், மொபைல் இணைப்புச் சாதனம் (Mobile Connecter) புதிதாக வாங்குதல், இணையதளம் உருவாக்குதல் மற்றும் இணையதள மைய சர்வர் சேவைகள், ஆதார் இணைப்புச் சேவைகள் ஆகிய பணிகளை மின் ஆளுமை நிதியிலிருந்து (e-governance corpus fund) செயல்படுத்த தமிழ்நாடு மின் ஆளுமை முகமைத் தலைமைச் செயல் அலுவலர் தனியான கருத்துரு அனுப்பி அரசாணை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டச் செலவினத்தை ஒவ்வொரு மாதமும் மேற்கண்ட கணக்கு தலைப்புகளிலிருந்து பெற்று வழங்கிட ஆணையர், சமூகப் பாதுகாப்புத் திட்டம் அவர்களுக்கு அதிகாரமளித்து ஆணையிடப்படுகிறது.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான நிர்வாகச் செலவினங்களுக்கு ஆணையர், சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அவர்கள் தனியாக கருத்துரு அனுப்பி நிர்வாக அனுமதியும், நிதி ஒப்பளிப்பும் பெற அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.