Agal Vilakku Scheme PDF download in tamil | அகல் விளக்கு திட்டம் என்றால் என்ன
அகல் விளக்கு திட்டம் என்றால் என்ன
தமிழகத்தில் உயர்நிலை மற்றும் மேல் நிலை பள்ளிகளில் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு உடல் மற்றும் மனரீதியாக ஏற்படும் இடையூறுகளில் இருந்து பாததுகாத்துக் கொள்வதற்காக அகல் விளக்கு என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழக அரசு அறிவித்தது. அகல் விளக்கு திட்டத்தை தொடங்கியது யார்
இந்த திட்டத்தினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு மகளில் மேல்நிலை பள்ளியில் தொடங்கி வைத்தார். அகல் விளக்கு திட்டம் நோக்கம்
மாணவிகளுக்கு உடல், மனம் மற்றும் சமூக ரீதியாக பல்வேறு இடையூறுகள் நேரடியாகவும், செல்போன் பயன்படுத்துவதன் மூலமாக இணையதள வாயிலாகவும் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்னைகளில் இருந்து விடுபட முடியாமல் சிலர் தவறான முடிவையும் எடுத்து விடுகின்றனர். இது அவர்களுக்கு கல்வியிலும், குடும்பத்தினருக்கு பொருளாதாரத்திலும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி விடுகிறது. Read Also: போக்சோ சட்டம் என்றால் என்ன - விழிப்புணர்வு பதிவு Read Also: பள்ளி மாணவர்கள் உதவி எண்இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து மாணவிகள் தங்களை மீட்டு, பாதுகாத்து கொள்வதே இதன் நோக்கம். தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்காக குழு அமைக்கப்பட்டு செயல்படுத்தப்பட உள்ளது. இக்குழுவில் ஆசிரியைகள், மாணவிகள் இடம் பெறுவர். மாணவிகளுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்து ஆசிரியர்கள் கண்டறிந்து தீர்வு காண்பர். இதற்கான விழிப்புணர்வு கையேடு வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ரூ 50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. Agal Vilaku scheme pdf download in tamil - Download Here