School students helpline Number 14417
தமிழக பள்ளி கல்வித்துறை மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் தேவையான கல்வி, வேலை வாய்ப்பு மற்றும் இதர துறைகள் குறித்த தகவல்கள், தெளிவுரைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்க வழிகாட்டும் உதவி மையம் தொடங்கப்பட்டது.அதன் சார்பில் கட்டணமில்லா தொலைபேசி எண் 14417 அறிமுகம் செய்யப்பட்டு, கடந்த 2018 மார்ச் 1ம் தேதி முதல் செயல்பட்டு வருகிறது. இதன் முக்கிய நோக்கம் பெற்றோர்கள் மற்றும் மாணவா்கள் தங்களது வேலைவாய்ப்பு, போட்டி தேர்வுகள், உயர்கல்வி, உளவியல் ஆலோசனைகள், கற்றல் குறைபாடு உள்ள மாணவர்களின் திறனை மேம்படுத்த வழிமுறைகள், அரசு மற்றும் அரசு சார்ந்த திட்டங்கள் மற்றும் அவற்றின் பயன்களை தெரியப்படுத்துதல் உள்ளிட்டவை எளிதாக அறிந்து கொள்ள முடியும்.Read Also: மாணவர் மன நலன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த உத்தரவுஇதுதவிர, மத்திய அரசு மற்றும் மாநில அரசு வழங்கும் உதவித்தொகை, கடன் உதவித்தொகை குறித்த தகவல், பாடத்திட்டம் மற்றும் தேர்வு எதிர்கொள்வது, உடல் நலம் மற்றும் பாதுகாப்பு, தலைமுறை இடைவெளி குறித்த சிக்கல்கள் ஆகியவை குறித்து ஆலோசனையும் வழங்கப்படுகிறது.அரசு அறிவிப்பு செய்தாலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு இதன் மீது விழிப்புணர்வு சற்று குறைவாகத்தான் இருக்கிறது. இதன் மாணவர்கள் மத்தியில் எடுத்து செல்ல பள்ளி கல்வித்துறை பள்ளி தினசரி வழிபாட்டின் போது, (TOLL FREE HELP LINE – 14417) குறித்து விழிப்புணர்வு செய்ய வேண்டும் எனவும், பெற்றோர் ஆசிரியர் கூட்டத்தில் பெற்றோருக்கு இதுகுறித்து அவ்வப்போது விழிப்புணர்வு செய்ய வேண்டும் என ஏற்கனவே பள்ளி கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.நடைமுறையில், ஆசிரியர்கள் இதுகுறித்து விழிப்புணர்வு செய்வது குறைவுதான். இனிவரும் காலங்களில், பள்ளி மாணவர்கள் மத்தியில் இதுகுறித்து விழிப்புணர்வு செய்து, பயன் அடைய வைக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.