You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
உங்களிடம் இருக்க வேண்டியதெல்லாம் ஒன்றுதான், தன்னைத்தான் அறிதலின் முதல் கட்டத்தில் என்னவாக இருக்கிறோம் என்று யோசிப்பதை தாண்டி என்னவாக ஆக விரும்புகிறோம் என்ற இலக்கை நோக்கிய பயணமே கனவுகள் மெய்யப்படும் காலத்திற்கு வழிவகுக்கும்.
கற்றல் நோக்கங்கள் அறிவோம்
நம் நேரத்தை நம் கையில் எடுப்பது பற்றி தெரிந்துகொள்ளுதல் நம் உணர்ச்சிகளை கையாள கற்றுக்கொள்ளுதல்நம் வாழ்வில் நெருங்கிய உறவில் உள்ள பெற்றோர், நண்பர் மற்ற பெரியவர்களுடன் உறவுகளை எப்படி பேணுவது என்பதை பற்றி தெரிந்துெகாள்ளுங்கள் தற்போது 10, 11, 12ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு பொதுத்தேர்வு மிக முக்கியமானவை. ஒரு புறம் பொதுத்தேர்வுகளில் சிறப்பான தேர்ச்சி பெற வேண்டும், அதே நேரத்தில் அடுத்து, நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை நோக்கிய பயணத்தையும் திட்டமிட வேண்டும். இதற்கெல்லாம் அடிப்படையில் தேவைப்படுவது நம்மை நாம் உணர்வதுதான். இதனை இரண்டு விதமாக பிரிக்கலாம். ஒன்று: நாம் தற்போது என்னவாக இருக்கிறாம் என்பதை தெரிந்துகொள்வது. இரண்டு: இலக்கு நோக்கிய பயணத்திற்கு நம்மை நாம் எப்படிச் செதுக்கிக்கொள்ள போகிறோம் என்பதை திட்டமிடுவது. இன்றைக்கு நம் கண்முன் இருக்கக்கூடிய சவால்களைவிட அதிகப்படியான வாய்ப்புகளும் உள்ளன. உயர்கல்வி தொடர்பான அரசின் பல்வேறு திட்டங்கள் உள்ளன. வழிகாட்ட பலரும் உள்ளனர். உங்களிடம் இருக்கவேண்டியதெல்லாம் ஒன்றுதான் தன்னைத்தான் அறிதலின் முதல் கட்டத்தில் என்னவாக இருக்கிறோம் என்று யோசிப்பதை தாண்டி என்னவாக ஆக விரும்புகிறோம் என்ற இலக்கை நோக்கிய பயணமே, கனவுகள் மெய்ப்படும் காலத்திற்கு வழிவகுக்கும். பலம்படிப்பதில் ஆர்வம் இருக்கிறது. என் நாளை என்னால் நன்கு திட்டமிட முடிகிறது. வளரிளம் பருவத்தில் வரக்கூடிய மன ஊசலாட்டங்களை கையாள முடிகிறது. பலவீனம் படிப்பில் ஆர்வம் இருந்தாலும் எனக்குள் உள்ள சில பழக்கவழக்கங்கள் என்னை பின்னுக்கு இழுக்கின்றன. கைப்பேசியை பயன்படுத்துவது, தொலைக்காட்சியை பார்ப்பது, நண்பர்களின் வற்புறுத்தலால் வீணாக சுற்றி திரிய நேரிடுவது, உணர்வுகளை கையாள முடியாமல் இருப்பது போன்ற பல்வேறு காரணங்கள் திட்டமிட்டப்படி படிக்க முடியாமல் தடுக்கின்றன.வாய்ப்புகள் எனது உயா்கல்வியை திட்டமிட பல வழிகள் உள்ளன. பள்ளியிலும் பள்ளிக்கு வழியிலும் வழிகாட்டிகள் உள்ளனர். சவால்கள் இலக்குகளைத் திட்டமிட முடியவில்லை. புறத்தே உள்ள பலலை கவனத்தை திசை திருப்புகின்றன. மேறகுறிப்பிட்டவை அனைவரின் வாழ்க்கையில் உள்ளவைதான். ஆனால், இதை தாண்டியும் பலரால் இன்றைக்குச் சில உயரங்களை எட்ட முடிந்ததற்கு காரணம். அவர்களால் அவர் வாழ்க்கையை கையில் எடுக்க முடிந்ததுதான்.
வாழ்க்கையை கையில் எடுக்க தேவையானது என்ன?
நம் நேரம் மீதான நம் கட்டுப்பாடுஉணர்ச்சிகளை கையாள தெரிவதுஉறவுகளை தக்கவைப்பதுஎல்லோருக்குமே ஒரு நாள் என்பது 24 மணி நேரம்தான். அதை சரிவர பயன்படுத்தி கொள்பவர்களால், அதை எப்படி செய்ய முடிந்தது, அவர்கள் நேரத்தை திட்டமிடவில்லை. அவர்கள் வாழ்க்கையை அவர்கள் கையில் எடுத்ததால் நேரம் அவர்கள் கையில் நம் வாழ்க்கையை நம் கையில் எடுக்க முடியாவிட்டால் நேரம் நம்மை ஆட்கொண்டுவிடும்.வாழ்க்கையை பயனுள்ளதாக மாற்ற நேரத்தை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்த வேண்டும். நம் வீணாகக் கழிக்கும் நேரங்கள், நம் வாழ்க்கையை பின்னுக்கு தள்ளிவிடும். நேரத்தை வீண் செய்வது தோல்வி, பயம், வருத்தம், அழுகை போன்ற எதிர்மறை உணர்வுகளை குவிக்கும். மகிழ்ச்சி, ஆச்சரியம், நெகிழ்ச்சி போன்ற நல்ல உணர்வுகள் படிப்பிலும், வாழ்க்கையிலும் ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும். ஆகவே வளரிளம் பருவத்தில் உள்ள நாம் நமது பலவீனத்தை கண்டறிந்து அவற்றை பாலமாக மாற்ற நேரத்தை கட்டுக்குள் வைத்திருப்பதும், உணர்வுகளை கையாள தெரிந்துகொள்வதும் மிகவும் அவசியம். இதைபோல் உறவுகளை சீராக கட்டமைத்து கொள்வது மிக அவசியம். ஆக்கபூர்வ வளர்ச்சி செயல்பாடு உங்கள் வாழ்க்கையின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்ட நேரம், ஆக்கப்பூர்வ வளர்ச்சி செயல்பாடுஇளைப்பாறுதல்கைப்பேசி அல்லது தொலைக்காட்சியை அரைமணி நேரம் பயன்படுத்தினால் அது இளைப்பாறல்பின்னோக்கி இழுக்கும் செயல்பாடுகைப்பேசி அல்லது தொலைக்காட்சியை 2,3 மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து பயன்படுத்தினால், அது பின்நோக்கி இழுக்கும் செயல்பாடு.