You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

Public Exam Tips in Tamil | பொதுத்தேர்வு டிப்ஸ் | பொதுத்தேர்வு எதிர்கொள்வது எப்படி

TRUST Exam Hall Ticket Download link 2023

Public Exam Tips in Tamil | பொதுத்தேர்வு டிப்ஸ் | பொதுத்தேர்வு எதிர்கொள்வது எப்படி |

Public Exam Tips in Tamil

தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறையில் நடந்துகொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து பயனுள்ள சில யோசனைகள் இதோ…

தேர்வு கால அட்டவணையை வீட்டில் பார்க்கும் இடத்தில் ஒட்டி வைக்கவும். எந்தெந்த தேதிகளில் தேர்வுகள் நடைபெறுகின்றன என்பதை அவ்வப்போது நினைவுப்படுத்திக்கொண்டிருக்கும். பாடபுத்தகங்கள், குறிப்பேடுகள், கையேடுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் வைக்கவும், இல்லாவிட்டால் கடைசி நேரத்தில் அவற்றை எங்காவது ஞாபகமறதியாக வைத்துவிட்டு தேடும் நிலை ஏற்படலாம் என்பதால் கவனமாக இருக்க வேண்டும்.

தேவையான பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பா், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை தேர்வுக்கு முதல் நாளிலேயே எடுத்து வைத்துக்கொள்ளவும், ஹால்டிக்கெட் மறந்துவிடாதீர்கள், தேர்வு எழுத ஹால்டிக்கெட் மிக அவசியம்.

தோ்வுக்கு முந்தைய நாட்களில் நள்ளிரவு வரை கண்விழித்து படிக்க வேண்டாம். போதுமான தூக்கம் இல்லாவிட்டால், அடுத்த நாள் தேர்வு எழுதும்போது சோர்வாக இருக்கும். தேர்வு நேரத்தில் பதற்றம் அடைய வேண்டாம். தேர்வுக்கு செல்லும்போது, பட்டினி வேண்டாம், அளவோடு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்ளவும். திடீர் உடல்நல குறைவு ஏற்பட்டால் தகுந்த மருந்துகளை சாப்பிட்டுவிட்டு தேர்வுக்கு செல்லவும்.

Read Also: தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்

தேர்வு தொடங்க ஒரு மணி நேரம் முன்னதாகவே, தேர்வு மையத்திற்கு செல்வது நல்லது. இதனால் பேருந்து தாமதம் கடைசி நேர பரபரப்பு மற்றும் பதட்டத்தை தவிர்க்க முடியும். தேர்வு மைய வளாகத்தில் உங்களிடம் உள்ள பாடக்குறிப்பை சிறிது நேரம் திருப்பி பார்த்துவிட்டு அமைதியாக இருக்கவும், மற்றவர்களிடம் தேவையில்லாத அரட்டைகளை தவிர்க்கவும்.

தேர்வு அறையில் உங்களது தேர்வு எண் குறிப்பிடப்பட்டுள்ள இருக்கையில் அமரவும், அதற்கு முன்னதாக, உங்களது புத்தங்களையும், உங்களது பையில் ஏதாவது பாடக்குறிப்புகளோ காகிதங்களோ இருந்தால் அதையும் சேர்த்து தேர்வு அறைக்கு வெளியில் வைத்துவிட்டு வர வேண்டும்.

உங்களுக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டவுடன் பரபரப்பாக உடனே விடைகளை எழுத தொடங்கிவிடாதீர்கள். தெரியாத அல்லது கடினமான வினாக்களை பாாத்து ஏமாற்றமோ அல்லது வருத்தம் அடையக்கூடாது. வினாத்தாளை முழுமையாக பார்த்து படித்துவிட்டு முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடை எழுத தொடங்குங்கள். விடைத்தாளில் தேர்வுத்துறையினர் குறிப்பிட்டுள்ள இடத்தை தவிர, வேறு இடங்களில் தேர்வு எண்ைணயோ, பெயரையோ எழுதக்கூடாது. விடைத்தாளில் தேர்வு எண் சரியாக எழுதியிருக்கிறமோ என்பதை ஒருமுறைக்கு இரு முறை சரிபார்த்துக்கொள்ளவும்.

தேர்வில் ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே பேனாவில் எழுத வேண்டும். புதிய பேனாவில் எழுத வேண்டாம். அது சில நேரங்களில் சரியாக எழுதாமல் போகலாம். எனவே, ஏற்கனவே பயன்படுத்திய பேனாவையே பயன்படுத்தவும், முன்னெச்சரிக்கையாக கூடுதல் பேனாக்களை வைத்துக்கொள்ளவும்.

தேர்வு அறையில் மற்ற மாணவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்காதீர்கள். விடைகள் எழுதுவதில் மட்டும் உங்கள் கவனம் முழுமையாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வினாவுக்கும் விடை அளிக்க எவ்வளவு நேரம் திட்டமிட்டுக்கொண்டு விடைகளை எழுத வேண்டும். இதனால் சில வினாக்களுக்கு பதில் தெரிந்தும், நேரம் இல்லாமல் போய், விடை எழுதாமல் விட்டுவிட வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. சில வினாக்களுக்கு விடை எழுத அதிக நேரம் பிடிக்கலாம். அதுபோன்ற நிைலயில், அடுத்து எழுதும் விடைகளில் அந்த நேரத்தை சரிசெய்து கொள்ள வேண்டும்.

விடை எழுதும்போது தேவையான இடங்களில் வரைபடங்களை வரைய வேண்டும். அதற்காக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளக்கூடாது. தேர்வு நேரத்தில் ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் தேர்வுக்கூட கண்காணிப்பாளரிடம் மட்டுேம கேட்க வேண்டும். பக்கத்தில் உள்ள மாணவர்களிடம் கேட்கக்கூடாது. ஆரம்பம் முதல் இறுதிவரை கையெழுத்து சீராக இருக்கட்டும். அதற்காக மெதுவாக எழுதி நேரத்தை வீண் செய்ய வேண்டாம். கூடியவரை அடித்து அடித்து எழுதுவதை தவிர்க்க வேண்டும்.

எந்த வினாவுக்கும் அரைகுறையாக விடையளிக்க வேண்டாம். சுருக்கமாகவாது முழுமையாக விடை எழுத முயற்சிக்க வேண்டும். ஏதேனும் ஒரு வினாவுக்கு விடை நன்கு தெரிகிறதே என்று நேரம் போவது தெரியாமல் அதிகமாக நீட்டி முழக்கி எழுதிக்கொண்டிருக்காதீர்கள். அப்புறம் மற்ற வினாக்களுக்கு விடை எழுத நேரம் இல்லாமல் போய்விடும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

தேர்வு நேரம் முடிய சிறிது நேரம் இருக்கிறது என்றால், எழுத வேண்டிய விடைகளை சுருக்கமாக எழுதி, உாிய நேரத்திற்குள் முடிக்க பார்க்க வேண்டும். தேர்வு நேரம் முடிவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாகவே எழுதி முடித்துவிட்டு எழுதிய விடைகளை சரிபார்ப்பது நல்லது. தெரியாத வினாக்களுக்கு விடைகளை எழுதவும் இந்த நேரத்தை பயன்படுத்திகொள்ளலாம்.

தெரிந்த அனைத்து வினாக்களுக்கான விடைகளை எழுதி முடித்தவிட்டு, பின்னர் தெரியாத வினாக்களுக்கான விடைகளை நினைவுக்கு கொண்டு வந்து எழுத முயற்சிக்க வேண்டும். விடைத்தாளை, தேர்வு எழுதி மேசையிலேயே வைத்துவிட்டு வெளியேறக்கூடாது, தேர்வு கூட கண்காணிப்பாளர் உங்களிடம் வந்து விடைத்தாளை பெற்ற பிறகுதான் வெளியேற வேண்டும்.