How to Study for Exams in Tamil | தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும் | தேர்வுக்கு படிப்பது எப்படி
How to Study for Exams in Tamil
முதலில் தேர்வு குறித்து புரிதலை அறிந்துகொள்ளுங்கள் அதன் சின்ன குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு என்றால் என்ன
மாணவர்களின் அடுத்தகட்டப் படிப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணித்
தேர்வுகள் ஆகும். பள்ளிகளில் பாடங்களை எப்படி படித்திருக்கறீர்கள் என்பதை அறிவுப்பூர்மாக அறிய உதவும் சோதனைதான் தேர்வுகள். அதாவது, உங்களது கல்வித்திறனை அளக்கும் ஒர் அளவுகோல்தான் தேர்வுகள்.
தேர்வுக்கு எவ்வளவும் நேரம் படித்தீர்கள் என்பதை பொறுத்து மதிப்பெண்கள் போடப்படுவதில்லை. எப்படிப் படித்தீர்கள் என்பதை பொறுத்தும் மதிப்பெண்கள் வழங்குவதில்லை. தேர்வுகள் கேட்கப்படும் கேள்விகளுக்கு எப்படி விடை அளிக்கிறீர்கள் என்பதுதான் முக்கியமானது, அதை பொறுத்துதான் உங்களுக்கு மதிப்பெண் கிடைக்கும்.
Read Also: Adolescent Problem in Tamil
தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்
எந்த மாதிரி படிக்க வேண்டும் என்பதற்கும், எப்படி படிக்க வேண்டும் என்பதற்கும் வரையறை எதுவும் கிடையாது. சிலர் காலையில் எழுந்ததும் புத்துணர்ச்சியுடன் படிக்கலாம். சிலர் மாலையில் படிக்கலாம். சிலர் நள்ளிரவில் விழித்து படிக்கலாம். எந்த நேரம் படிக்கிறோம், எவ்வளவு நேரம் படிக்கிறோம் என்பது முக்கியமில்லை. எப்படி கவனத்துடன் படிக்கிறோம் என்பது முக்கியம். தேர்வு முந்தைய நாளில் இரவில் நீண்ட நேரம் விழித்து படிக்க வேண்டியதில்லை.
தேர்வுக்காக படிப்பது என்பது ஒரு நாளுடன் மூட்டைகட்டிவிடக்கூடிய காரியம் இல்லை. தொடர்ந்து செய்ய வேண்டிய வேலை. பாடங்களை திரும்ப திரும்ப படித்து பார்க்கும்போதுதான் பாடங்கள் புரியும், பின்னர் மனதில் நிற்கும். படிக்கும் பாடங்களின் அடிப்படைகளை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம். நமக்கு தெரிந்த விஷயங்களோடு தொடர்புப்படுத்தி பார்க்க வேண்டும். அப்போது அந்த பாடங்கள் என்றைக்கும் மறந்துபோகாது.
படிப்பதை தள்ளி போடவேண்டாம்
பாடங்கள் படிப்பதை ஒத்திவைத்திக்கொண்டே இருந்தால் படிக்க வேண்டிய பாடச்சுமை அதிகரித்து கொண்டே போகும். சிறிது சிறிதாக தொடர்ந்து படித்துகொண்டே வந்தால், மலைப்பாகத் தோன்றாது. நிைறய பாடங்களை ஒரே நாளில், ஒரே நேரத்தில் படித்து மனதில் பதிய வைத்திட முடியாது. தேர்வு நேரத்தில் புதிதாக ஓரு பாடத்தை படிக்க தொடங்கினால் அது சிரமமாக இருக்கும். கஷ்டமான பாடத்தை அதே நேரத்தில் படிக்க நினைத்தால் அது புரியாது. எனவே கடினமான பாடங்களில் உள்ள சந்தேகங்களை ஆசிரியர்களிடமோ அல்லது சக மாணவர்களிடமோ கேட்டு தெரிந்துகொள்ள தயங்கக்கூடாது.
பள்ளிகளில் படிக்கும்போதே அந்தந்த பாடங்களை அவ்வப்போது படித்து வரும் மாணவர்களுக்கு அவ்வளவாகப் பிரச்னை இருக்காது. பாடங்களில் பிடிக்காத பாடங்கள் என்றும் எதுவும் இல்லை. ஆனால், சில மாணவர்கள் தங்களுக்கு பிடிக்காது என்று சில பாடங்களை கருதுவது உண்டு. அவ்வாறு விருப்பம் இல்லாமல், படித்தால் பாடங்கள் எப்படி நினைவில் தங்கும்.
மனப்பாட முறை வேண்டாம்
பாடங்களை நேசித்துப் படிக்க வேண்டும். அத்துடன் படிக்கும்போது, பாடத்தை தெளிவாக புரிந்துகொண்டு படிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்திலும், நன்றாக தெரிந்த பாடங்கள், இன்னமும் சரியாக தெரியாத பாடங்கள் என பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். நன்றாக தெரிந்த பாடங்களில் மீள்வாசிப்பு செய்வது முக்கியம். அதே சமயத்தில் சரிவர படித்து முடிக்காத பாடங்களுக்கு கூடுதல் நேரம் கொடுத்து அந்த பாடங்களை படித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு பாடத்தை படிக்கும்போது அதில் உள்ள வினா-விடைகளை தனிதனித் பகுதிகளாகப் படிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியையும் படித்து முடித்த பிறகு, சிறிதுநேரம் விட்டு, அடுத்த பகுதிகளை படிக்க வேண்டும். தொடர்ந்து படிக்கும்போது, சோர்வு ஏற்படும். சோர்வு நேரங்களில் படித்த பாடங்கள் மனதில் நிற்காது. எனவே, சிறிது நேரம் இடைவெளி விட்டு படிக்கலாம். பாடபுத்தங்களை நன்றாக படிக்க வேண்டும். பாடங்கள் குறித்து, வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கொடுக்கின்ற விளக்க தொகுப்புகளையும் நோட்ஸ்களையும் படிக்க பயன்படுத்திக்கொள்ளலாம். பாடபுத்தகத்தில் இருந்துதான் வினாக்கள் கேட்கப்படும். எனவே, வழிகாட்டு நூல்களையே முழுவதும் நம்பியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பாடங்களை புரிந்து படித்தால் கேள்விகள் எப்படி கேட்டாலும் எளிதாக பதில் எழுதிவிட முடியும்.
சூத்திரங்கள், சமன்பாடுகள், கோட்டுபாடுகள் போன்றவற்றை குறிப்பகளாக எடுத்து வைத்துக்கொண்டு அவ்வப்போது எடுத்து படித்து பார்க்க வேண்டும். அதனால் அவை மறந்துபோகாது, படித்ததை எழுதி பாருங்கள். படங்களை வரைந்து பாருங்கள். கணக்குகளை போட்டு பாருங்கள். வீட்டில் மாதிரி தேர்வுகளை நீங்களே பார்க்கலாம். படித்த பாடங்களை நீங்களே சொல்லி பார்க்கலாம். படித்ததை எழுதி பார்க்கலாம். இதுபோன்ற பயிற்சிகளுள் மாணவர்கள் தங்களுக்கு எது ஏற்றதோ அதை கடைப்பிடிப்பது நல்லது. தேர்வு நேரத்தில் மற்ற மாணவர்களுடன் படிப்பை பற்றி விவாதிப்பதை தவிர்க்கவும், அவர்கள் அதை படித்துவிட்டார்களே, நாம் படிக்கவில்லையே என்று மனதை போட்டு அலட்டிக்கொள்ளக்கூடாது.
மாணவர்களில் பலர், வகுப்பறை படிப்பை தவிர, தனிப்பயிற்சி டியூசன் செல்வார்கள். டியூசனில் படித்தால் மட்டும் போதும் என்று நினைக்கக்கூடாது. வீட்டுக்கு வந்து பாடங்களை படிப்பது வழக்கமாகிக்கொள்ள வேண்டும்.
மாதிரி தேர்வு
பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறும். அதனை தவற விடக்கூடாது. அதேபோல், மாதிரி தேர்வுகளை தவறவிடக்கூடாது, அதனை சிறப்பாக எழுத வேண்டும். மாதிரி தேர்வு எழுதும்போதுதான், நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். எந்த கேள்விகளுக்கு நன்றாக பதில் எழுத முடிகிறது. எந்த கேள்விகளுக்க விடையளிக்க திணறுகிறோம் என்பதை மாணவர்கள் புரிந்துகொண்டு படிக்க உதவியாக இருக்கும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் படிப்பது, படித்தவற்றை நினைவில் நிறுத்த உதவும். படிக்கும்போது பாடத்தில் மட்டும் முழு கவனம் செல்ல லேண்டும். அப்போதுதான் விரைவாக படிக்க முடியும். படிப்பு என்பது சுவாரசியமான அனுபவம், விரும்பிச் செய்யும் வேலையாக படிப்பதை வைத்துக்கொண்டால் பாடங்கள் கசக்காது. இனிக்கும் படிப்பினால் கிடைக்கும் நன்மைகளையும் நினைத்து பார்த்துகொண்டால் படிப்பதில் ஆர்வம் தானாகவே வரும்.