What is class I Admission Age | ஒன்றாம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது
What is class I Admission Age
ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயதை 6 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து மத்திய, மாநில யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளளது.
மத்திய அரசு தேசிய கல்வி கொள்கையின்படி, அனைத்து குழந்தைகளுக்கும் 3 வயது முதல் 8 வயது வரையிலான 5 ஆண்டுகள் கற்றல் வாய்ப்பை ஏற்படுத்தி தருவதற்கான அடிப்படை கல்விக்கான காலகட்டமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதாவது 3 ஆண்டுகள் மழலையர் (முன்பருவ பள்ளி கல்வி) கல்வியை தொடர்ந்து ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்புகளும் இந்த 5 ஆண்டுகள் அடிப்படை கல்வி திட்டத்தில் அடங்கும். இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விதமாக அனைத்து மாநில அரசுகளுக்கு இந்த அறிவுதறுத்தலை மத்திய அரசு வழங்கியுள்ளது.
Read Also: Pre Education in Tamil | அறிவோம் மழலையர் கல்வி | முன்பருவ கல்வி
இதுகுறித்து உயர் அதிகாரிகள் கூறும்போது, அனைத்து குழந்தைகளுக்கும் மழலையர் கல்வி முதல் 2 ஆம் வகுப்பு வரை தடையற்ற கற்றல் மற்றும் திறன்மேம்பாடு கிடைப்படை கல்வி கொள்ளை ஊக்குவிக்கிறது. அந்த வகையில் 3 ஆண்டுகள் அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி அல்லது அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகள் அல்லது தனியார் பள்ளிகள் மூலமாக தரமான மழலையர் கல்வி கிடைக்கும்போதுதான் தேசிய கல்வி கொள்கையின் நோக்கத்தை உறுதிப்படுத்த முடியும்.
எனவே, ஒன்றாம் வகுப்பில் குறைந்தபட்சம் 6 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினரை மட்டுமே சேர்க்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளையும் மத்திய கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
குழந்தைகளின் உளவியல் முறு்றும் மனநலனை கருத்தில் கொண்டு குழந்தைகள் மிகச்சிறிய வயதில் பள்ளிகளுக்கு அனுப்பக்கூடாது என்று உச்சநீதிமன்றமும் வழக்கு ஓன்றில் கடந்த ஆண்டு வலியுறுத்தி உள்ளது.
அதோடு குழந்தைகளின் இந்த அடிப்படை கல்விக்கு தகுதிவாய்ந்தா உரிய பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதும் முக்கியமாகும். இதற்காக, முன்பருவ பள்ளி கல்வியில் 2 ஆண்டு பட்டயப்படிப்பு (டிபிஎஸ்இ) திட்டத்தை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைககள் மேற்கொள்ளுமாறும் மாநிலங்களை மத்திய அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த பட்டயப்படிப்பு மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலால் வடிவமைக்கப்பட்டு, அதன் கண்காணிப்பின் கீழ் மாவட்ட கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களால் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது,
இவ்வாறு அவர் கூறினார்.