Pre Education in Tamil | அறிவோம் மழலையர் கல்வி | முன்பருவ கல்வி
Table of Contents
Pre Education in Tamil
பள்ளி கல்வித்துறையின் கீழ் உள்ள மாநில கல்வியியல் ஆராய்ச்சி கழகம் முன்பருவ கல்வி பாடத்திட்டம் குறித்து ஒரு விரிவான செயல்பாடு தகவல் அளித்துள்ளது.
அதில், 0 முதல் 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மூளை செல்கள் மிகவும் செயல்திறனுடையதாக உள்ளது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைப்பட்ட இந்த வயதிற்குள் முன்பருவ கல்வி அல்லது மழலையர் கல்வி என்பது இன்றியமையாதது எனவும், இந்த கல்வி குழந்தைகளின் அறிவாற்றலை மேம்படுத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மழலையர் கல்வியில் வேடிக்கை நிறைந்த கற்றல் செயல்பாடுகளாகவும், விளையாட்டுகளில் சுறுசுறுப்பான ஈடுபாடு வாயிலாகவும் கற்பித்தல் இயல்பாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
also read: பெண் குழந்தைகளை அரவணைக்கும் போக்ஸோ சட்டம் 2012
மழலையர் கல்வி நோக்கம் என்ன?
முன்பருவ கல்வியில், குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் உளப்பாங்கு சார்ந்த அனைத்து பரப்புகளிலும் முழுமையான வளர்ச்சி பெறும்.
விளையாட்டு அடிப்படையிலான கலைத்திட்டம், திறன் வளர்ச்சிக்கான, மகிழ்ச்சிக்கான செயல்பாடாக அமையும்.
ஒவ்வொரு குழந்தைக்கும் தனிப்பட்ட கவனம் மற்றும் சரியான கால அவகாசம் வழங்குவதன் மூலம் அவர்கள் பள்ளி செல்வதற்கான தயார் நிலையை அடைவார்கள்.
மழலையர் கல்வி குறிக்கோள் அறிவோமா?
- ஒருங்கிணைந்த குழந்தை நல உதவிகள், உள்கட்டமைப்பு மற்றும் குழந்தையின் முழுமையான நல்வாழ்வு மற்றும் அவர்களின் தொடர் நலம் சார்ந்த மேம்பாட்டு தேவைகள் எதிர்நோக்கிய சேவைகளாக இருக்கும்.
- அறிவாற்றல், உடல், சமுதாயம் உணர்வு மற்றும் மொழி வளர்ச்சி சார்ந்த அனைத்து நிலைகளிலும் முழுமையான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டினை வளர்ப்பதற்கான ஒருங்கிணைந்த அனுபவ தொகுப்புகள் வழங்கப்படும்.
- குழந்தைகளிடம் நல்ல உடற்கட்டமைப்பு, போதுமான தசை ஒத்திசைவு மற்றும் அடிப்படை இயங்குதிறன் ஆகியவை மேம்படுத்துதல்.
- நல்ல உடல்நல பழக்கவழக்கங்களை மேம்படுத்துதல்
- பள்ளி செல்லும் தயார் நிலையை உருவாக்குதல்
மழலையர் கல்வி கொள்கைதான் என்ன?
6 வயது வரை நிறைவு செய்யும் வரை அனைத்து குழந்தைகளுக்கும் இளம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வியை வழங்குவதை அரசு உறுதி செய்து, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் திருத்தப்பட்ட 45வது பிரிவின் வாயிலாக இந்திய அரசு அதன் கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகிறது. இளம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் கல்வி மற்றும் பள்ளிக்கான தயார் நிலை ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்பின் அவசியத்தை கல்வி உரிமை சட்டம் 2009 (பிரிவு 11) வலியுறுத்துகிறது. இளம் குழந்தை பருவம் 3 முதல் 5 வயது வரையிலுள்ள குழந்தைகளின் தனித்தன்மை கொண்ட படிநிலையாக உள்ளது.
குழந்தைகள் வளர்ச்சி கூறுகள்:
குழந்தையின் நடத்தையினை அறிய, குழந்தைகளின் வளர்ச்சி முறையை அறிந்து கொள்வது அவசியமாகும். இதில் மழலை பருவம் ஒன்றரை முதல் இரண்டரை வயதுடைய குழந்தையாகும். இந்த பருவம், அறிவாற்றல், உணர்வூக்கம் மற்றும் சமுதாயம் சார்ந்த பெரும் வளர்ச்சிக்கான காலமாகும். உடலசைவோடு கூடிய எளிய கட்டளைகளை அவர்களால் பின்பற்ற முடியும்.
மேலும், அப்பருவத்தில், பார்த்தல், கேட்டல், சுவைத்தல், முகர்தல் மற்றும் தொடுதல் அனுபவிக்கின்றனர். மேலும் குழந்தைகள் வயது வந்தோர் அல்லது வளர்ந்த குழந்தையுடனே விளையாடி மகிழ்கின்றனர்.
இரண்டரை முதல் மூன்றரை வயது உடைய குழந்தைகள் முன்பருவத்தினா் என அழைக்கப்படுகிறார்கள். இந்த வயதில் இவர்கள், பேசவும், கவனிக்கவும் அதிக ஆர்வம் காட்டுவார்கள். குறிப்பாக, சக்கரம் அமைந்த பொம்மைகள், ஏற்றங்கள், புதிர்கள் மற்றும் கட்டை அடுக்குகள் ஆகியவற்றை விளையாட அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். சிறுகதை சொல்லவும், கேட்கவும் அதிகம் விரும்புவார்கள்.
Join WhatsApp Group | WhatsApp Group |
To Follow Telegram : | Telegram Link |
To Follow Facebook | Facebook Link |
To Follow Twitter | Twitter Link |
To Follow Instagram | Instagram Link |
To Follow Youtube | Youtube Link |
[…] முதலில் இதை படிங்க.. மழலையர் கல்வி நோக்கம் என்ன? […]