Vocational Education Present Status | தமிழகத்தில் 600 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்புகள் மூடல்
Vocational Education Present Status
தமிழகத்தில் ஆசிரியர் நியமிக்காததால் 600 அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழில்கல்வி ஆசிரியர் கழக பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் குற்றம் சாட்டியுள்ளார்.
அவர் கூறியதாவது: மாநிலத்தில் 1605 அரசு மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு இருந்தது. 'அரசு மேல்நிலை பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர் ஓய்வு பெற்றாலே அல்லது பணியிடம் மாறி சென்றாலோ அந்த இடத்தை காலியாக அறிவிக்க கூடாது; அப்பள்ளியில் அந்த பாடப்பிரிவை மூடி விட வேண்டும்' என 2007ல் கல்வித்துறை வாய்மொழி உத்தரவு பிறப்பித்தது.
Read Also: சிறப்பாசிரியர் தேர்வு பணியில் ஈடுபடுத்த கோரிக்கை
இதனால் 13 ஆண்டுகளாக 600 பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர் இல்லை. கணக்கு பதிவியலும் தணிக்கையியலும், அலுவலக செயலியல், வேளாண்மை பொறியியல், பொது இயந்திரவியல், மின்சாதனங்களும் பழுதுபார்த்தலும், மின்னணு சாதனங்களும், ஆடை வடிவமைத்தலும் தயாரித்தலும், துணிகள் தொழில்நுட்பம் உட்பட 10 பாடப்பிரிவுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய, சாதரணமாக படிக்கும் மாணவர் இதுபோன்ற தொழிற்கல்வி பாடம் படித்து சுயதொழில் துவங்குவது பெரிதும் பாதித்துள்ளது. புதிய கல்வி கொள்கையில் மாணவர்கள் தொழிற்கல்வி கல்வி பயில வேண்டும் என மத்திய அரசு தெரிவித்த நிலையில், மாநில அரசு தொழிற்கல்வி பணியிடங்களை நிரப்ப வேண்டும். இதற்கான வழிகாட்டல் முறையை கல்வித்துறையை வகுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.