Special Teacher News In Tamil | சிறப்பாசிரியர் தேர்வு பணியில் ஈடுபடுத்த கோரிக்கை
Special Teacher News In Tamil
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு நிறுவனத் தலைவர், சா.அருணன், புதிதாக பதவியேற்ற திருவள்ளூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி வி.வெற்றிச்செல்வி அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
சிறப்பாசிரியர்
அப்போது அடுத்தமாதம் பனிரெண்டாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு நடைபெறுகிறது, இதில் பணிமூப்பு அடைப்படையில் ஆசிரியர்களை தேர்வுப் பணிக்கு உட்படுத்தவேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், மற்றும் உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட சிறப்பாசிரியர்களை தேர்வு அறை கண்காணிப்பாளராகவும் பறக்கும்படையில் ஈடுப்படுத்துவது வழக்கம். ஆனால் சில ஆண்டுகளாக பறக்கும் படையில் அவர்கள் ஈடுப்படுத்தப்படவில்லை, இந்த ஆண்டும் இடைநிலை ஆசிரியர்கள் மற்று உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட சிறப்பாசிரியர்களை பணி மூப்பு அடிப்படையில் பறக்கும் படையில் ஈடுபடுத்த அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
Read Also: தேர்வு பணியில் இருந்து விலக்கு அளிக்குமாறு இயக்குனருக்கு கோரிக்கை
அப்போது, தலைமையாசிரியர் ரேவதி, மாநில மாவட்ட நிர்வாகிகள் கருணாகரன், சூர்யபிரகாஷ், மிகாவேல், சிவக்குமார், அலெக்ஸ், அண்ணாதுரை, முனான், நந்தகுமார், ராஜேஸ்வரி, காஞ்சனா, நவமணி, சுகன்யா, பவுன்ராஜ்,,ரங்கன்,ஹேமலதா, சிவசங்கரி,மாரி, தீபாகரன்,பிரஷாத், ஆகியோர் உடனிருந்தனர்.