மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் என்பது சிவில் சர்வீஸ் தேர்வு மூலம் இந்திய அரசு பணிகளுக்காக தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக அமைக்கப்பட்ட ஒரு அமைப்பு. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு அரசு துறைகளுக்கான பணியாளர்களை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்து கொடுக்கும் பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, இந்திய வெளிநாட்டு பணி, இந்திய வருவாய் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழங்குப்படுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவை விதிகளை கட்டுப்படுத்தி வருகிறது. 1926ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர், உறுப்பினர்கள் குடியரசு தலைவரால் நியமிக்கப்படுகின்றனர். யுபிஎஸ்சி தேர்வில் பங்கேற்க, கல்வித்தகுதியாக பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச வயது 21வயது ஆக இருக்க வேண்டும். ஆண்டுக்கு ஒரு முறை சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்கு இந்திய வரலாறு, உலக புவியியல், இந்திய பொருளதாரம், இந்திய அரசியல், சுற்றுசு்சூழல், செய்திதாள்கள் வாசித்தல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பயிற்சியாக மேற்கொள்ள வேண்டும். மத்திய, மாநில அரசு திட்டங்கள் நன்கு கவனத்தில் வைத்திருக்க வேண்டும். 6 முதல் 12ஆம் வகுப்பு பாட புத்தகங்களில் இருந்து முக்கிய தகவல்களை சேகரிக்க வேண்டும். யுபிஎஸ்சி புத்தகங்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. Read Also: Entrance Exam Tips in Tamil தமிழ் மொழி மட்டுமின்றி, ஆங்கிலமும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். கூடுதல் மொழிகள் தெரிந்திருந்தாலும் சிறப்பு. இத்தேர்வு 22 மொழிகளில் நடத்தப்படுகிறது. யுபிஎஸ்சி நடத்ததும் சிவில் சர்வீஸ் தேர்வானது முதல்நிலை தேர்வு (பிரிலிம்ஸ்), சிவில் சர்வீஸ் (மெயின்ஸ்) மற்றும் ஆளுமை தேர்வு (நேர்காணல்) ஆகிய மூன்று கட்டங்களாகும். பெரும்பான்மையான விண்ணப்பதாரர்களை வடிகட்டும் நோக்கில் இவ்வாறு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. மெயின்ஸ் மற்றும் நேர்காணலில் தேர்ச்சி பெற்றால் தரவரிசை அடிப்படையில் இந்திய அரசு பணியிட வாய்ப்பு கிடைக்கும். கடந்தாண்டு மே மாதம் யுபிஎஸ்சி அறிவிப்பின் படி, 2024 ஜூன் 16ல் முதல்நிலை தேர்வு, செப்டம்பர் 20ல் முதன்மை தேர்வும் நடைபெறுகிறது. மேலும் விவரங்கள் அறிய, www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம். எஸ்.மாரியப்பன்