Entrance Exam Tips in Tamil
தமிழ்நாட்டில் கலை, அறிவியல், பொறியியல், வேளாண்மை, துணை மருத்துவம், மீன்வளம் மற்றும் கால்நடை கல்லூரிகளில் சேருவதற்கு நுழைவு தேர்வு தேவையில்லை. 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.பொறியியல் படிப்புகளில் பிஆர்க் படிப்பதற்கு நாட்டா (NATA) நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் நுழைவுதேர்வு நடத்தப்படுகிறது. இவை தவிர, அகில இந்திய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு கல்வி நிறுவனங்களில் சேருவதற்கு தனியே பல நுழைவு தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
பல நுழைவு தேர்வுகள் குறித்த அறிவிப்புகள், மாணவர்களுக்கு தெரியாமல் போகின்றன. திறமையும் தகுதியும் ஆர்வமும் இருந்தும் பல மாணவா்கள் இந்நுழைவு தேர்வுகளை எழுத முடியவில்லை. குறிப்பிட்ட சில படிப்புகளில் சேர நினைக்கும் பல மாணவர்கள் அதற்கான நுழைவு தேர்வுகளுக்கு முன்னதாகவே திட்டமிட்டு தயராகிறார்கள்.
நுழைவுத் தேர்வு வெற்றி பெற குறிப்புகள்
நுழைவு தேர்வுக்கான பாடத்திட்டத்தையும், கேள்விதாள் அமைப்பு முறையையும் அறிந்திருக்க வேண்டும்.நுழைவு தேர்வுக்கு மனப்பாடம் செய்வது முக்கியம் இல்லை. கோட்பாடுகள், சூத்திரங்கள் போன்றவற்றை தெரிந்துகொண்டு அவற்றை ஒன்றுடன் ஒன்று பொருத்திபார்த்து எழுத தெரிந்திருக்க வேண்டும்.
வழக்கமாக 12ம் வகுப்பு தேர்வில் கேட்கப்படுவதுபோல் நுழைவுத்தேர்வு வினாத்தாள் இருக்காது. அதாவது, வினாக்களுக்கு விடை எழுத வேண்டியதில்லை. ஒரு வினாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள நான்கு விடைகளில் எது சரியானது என்பதை கடைபிடித்து குறித்து நேரத்திற்குள் குறியிட்டு விளக்கம் அளிக்க வேண்டும். இணையதளம் மூலம் எழுத வேண்டி இருந்தால் முன்னதாகவே, கம்ப்யூட்டர் மூலம் நுழைவுத்தேர்வு எழுத பயிற்சி பெற வேண்டும்.இதற்கு பிளஸ் 1, பிளஸ் 2 பாடபுத்தகங்களில் உள்ள பாடங்களை புரிந்து படிக்க வேண்டியது அவசியம். அவ்வாறு படித்தால், எவ்வகையான வினாக்களும் மாணவர்களால் விடை அளிக்க முடியும். இதற்கு தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் கூட்டு வெளியீடாக கொண்டு வந்துள்ள வினா வங்கிகள் உங்களுக்கு உதவக்கூடும்.
நாம் எழுத வேண்டிய நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன் நுழைவுத்தேர்வு முடிவு வந்ததும், சம்மந்தப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு நுழைவுத்தேர்வு மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்க மறந்துவிடக்கூடாது.நுழைவுத்தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை எழுதி பார்த்து பழகிக்கொள்ள வேண்டும்.
Entrance Exam Tips in Tamil நுழைவுத்தோ்வில் கேட்கப்படும் வினாவை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு கொடுகப்பட்டிருக்கும் விடைகளில் எது சரியானது என்று பார்க்க வேண்டும். மேலெழுந்த வரியாக படித்துவிட்டு ஏதாவது ஒரு விடையை தேர்வு செய்யக்கூடாது. பாடங்களை புரிந்துகொண்டு படித்தால்தான் சரியான விடையை கண்டுபிடிக்க முடியும்.
தவறான விடைகளுக்கு நெகடிவ் மதிப்பெண்கள் கொடுக்கப்படுகிறதா என்பதையும் பார்க்க வேண்டும். அதுபோன்ற சூழ்நிலையில், தெரியாத, ஐயத்திற்கு இடமான விடைகளை எழுதக்கூடாது. நெகடிவ் மதிப்பெண்கள் இல்லை என்றால் எந்த வினாவிற்கு விடையளிக்காமல் விட்டுவிட கூடாது என்பதை மாணவர்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
நுழைவுத்தேர்வு கண்டு பயம் வேண்டாம்
நுழைவுத்தேர்வில் முதலில் தெரிந்த வினாக்களுக்கு விடையளிக்க வேண்டும். தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதற்கு நேரத்தை செலவழித்து கொண்டிருக்கக்கூடாது. தெரிந்த வினாக்களுக்கு விடையளித்த பிறகு சிரமமான வினாக்களுக்கு ஒவ்வொன்றாக விடையளிக்க முயற்சிக்கலாம். அப்போதுதான் நுழைவுத்தேர்வு எழுத நேரம் போதவில்லை என்ற பிரச்னை வராது.
நுழைவுத்தேர்வு எழுத பதற்றப்பட வேண்டியதில்லை. பாடங்களை நன்றாக படித்திருந்தாலே போதும் தன்னம்பிக்கை தானாக வந்துவிடும். நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள், வெற்றி பெறுங்கள்.