Unemployed Computer Teachers | கணினி ஆசிரியர்கள் கலைஞருக்கு நினைவஞ்சலி
Unemployed Computer Teachers
அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்திற்கு முக்கியத்துவம் தந்து மேல்நிலைப்பள்ளிகளில் 1998ம் ஆண்டு கணினி அறிவியல் பாடத்தை கொண்டு வந்தவர் கலைஞர். அரசுப் பள்ளிகளில்தான் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், முதல் தலைமுறையாக கல்விக் கூடங்களில் காலடி எடுத்து வைக்கும் வாய்ப்பு பெரும்பாலும் இருக்கிறது. அப்படி இருக்கும்பொழுது கிராமப்புற ஒடுக்கப்பட்ட, ஏழை – எளிய குடும்பங்களைச் சேர்ந்த இருபால் மாணவர்களுக்குக் கணினிக் கல்வி அவசியம் என என்னி அவர்களின் எதிர்காலம் ஒளிமயமாக அமைய கணினி அறிவியல் பாடத்திற்கு ஒளியேற்றி தந்தவர் இன்று உறங்குகிறார்.
சமச்சீரில் கணினி பாடம்…
தமிழகத்தில் கடந்த 2009 -ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் மாண்புமிகு கலைஞர் அவர்களால் சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது 6ம் வகுப்பிலிருந்து 10 ஆம் வகுப்புகளில் வரை சமச்சீர் கல்வி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இலவச கணினி அறிவியல் கல்வி அறிவிக்கும் வகையில் சமச்சீர் கல்வித் திட்டம் கொண்டு வரப்பட்டது. 2011-12 கல்வி ஆண்டில் அனைத்து வகுப்புகளிலும் சமச்சீர் கல்வி அறிமுகம் செய்யப்பட்டது.
Also read: கணினி ஆசிரியர்கள் கோாிக்கை – மத்திய அரசு பதில் மனு
அதே ஆண்டின் மே மாதம் 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சுமார் 28 லட்சம் மாணவர்களுக்கு ரூ.150 கோடியில் அச்சடிக்கப்பட்ட கணினி அறிவியல் பாடப்புத்தகங்கள் ஆட்சி மாற்றம் காரணமாக இன்று வரை கிடங்குகளில் உறங்கிக் கொண்டிருக்கின்றன. சமச்சீர் கல்வித்திட்டம் கொண்டு வரப்பட்டதால் பி.எட் கணினி ஆசிரியர் படிப்பை முடித்த சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு அரசுப்பள்ளிகளில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால், அரசுப்பள்ளிகளில் பி.எட் படித்த கணினி ஆசிரியர்களுக்கு பகுதி நேர வேலை கூட கிடைக்கவில்லை.
ஆசிரியர்கள் செஞ்சோற்றுக் கடன் நன்றியுடன் நினைவஞ்சலி செலுத்த வேண்டிய ஓர் தலைவன் அஸ்தமித்து விட்ட தினம் இன்று..
“அறிக்கை தந்த சூரியனுக்கு”
அரசுப் பள்ளிகளில் கணினி ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும் என்று 2016ஆம் ஆண்டு பத்திரிக்கை செய்திகள் அறிக்கை வெளியிட்டார் .

கணினி ஆசிரியர்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் கலைஞர் மறைந்தது பேரிழப்பே…
கணினி ஆசிரியர்கள் மட்டுமன்றி ஆசிரிய சமுதாயத்தைச் சேர்ந்த அத்தனை குடும்பங்களுக்கும் மீட்க முடியாத இழப்பு..
மாண்புமிகு கலைஞர் ஐயா அவர்களின் நினைவாக சமச்சீர் கல்வியில் கலைஞர் தந்த கணினி அறிவியல் பாடத்தை மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஐயா அவர்களும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஐயா அவர்களும் கணினி பாடத்தை அரசுப்பள்ளியில் உருவாக்கிட இந்நாளில் வேண்டுகிறோம்.
என்றும் நன்றியுடன் வெ.குமரேசன், மாநிலப் பொதுச் செயலாளர், மற்றும் உறுப்பினர் தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.