You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

கணினி ஆசிரியர்கள் கோாிக்கை - மத்திய அரசு பதில் மனு - Tamil Nadu Computer Teacher Association Demands

Tamil Nadu Computer Teacher Association Demands|

தமிழ்நாடு பி.எட் கணினி ஆசிரியர்கள் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ.குமரேசன் சமீபத்தில் அவர்களது கோரிக்கை மனுவை மத்திய கல்வி அமைச்சகத்திற்கு சமர்ப்பித்திருந்தார்.

அந்த மனுவில் அவர், கணினி அறிவியல் பாடத்தை தொடக்க கல்வியில் இருந்து அறிமுகம் செய்ய வேண்டும், 6 முதல் 10ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நலன் கருதி கணினி அறிவியல் பாடத்தை கட்டாய பாடமாக்க வேண்டும், மாணவர்கள் எண்ணிக்கை ஏற்ப, கணினி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும், குறைந்தபட்சம் அரசு பள்ளிகளில் ஒரு கணினி ஆசிரியர் பணியிடத்தை உறுதி செய்ய வேண்டும், அரசு அலுவலகங்களில் கணினி இயக்குபவர் பணியிடங்களில் கணினி ஆசிரியர் நியமிக்க வேண்டும், அதபோன்று மாநிலத்தில் 60,000 கணினி பட்டதாரி ஆசிரியர்கள் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் வகையில், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மனுவில் தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் மத்திய கல்வி அமைச்சகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில், கணினி ஆசிரியர் சங்கத்தினர் வழங்கிய பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகள் Digital Learning Education - ஆல் கவனிக்கப்படும் என ஒரு தெளிவற்ற பதிலை அளித்துள்ளது.

மாநில பொதுச்செயலாளர் குமரேசன் கூறும்போது, தற்போது அரசியல்வாதிகளால் டிஜிட்டல் இந்தியா என்று அழைக்கப்படும் நம் நாட்டில், அதே டிஜிட்டல் கல்வி ஏழை மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. நவீன டிஜிட்டல் அசுர வளர்ச்சியில் பயணித்து கொண்டிருக்கும்போது, ஏழை மாணவர்களுக்கு கணினி கல்வி கண்ணாமூச்சியாகவே உள்ளது. தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கணினி கல்வி வழங்கப்படும்போது, அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏன் கணினி கல்வி மறுக்கப்படுகிறது என்பதே பிரதானமான கேள்வியாக மத்திய, மாநில அரசு நோக்கி உள்ளது.

இதே மாநில அரசு, மேல்நிலை கல்வியில் பயின்ற மாணவர்களிடம் கணினி அறிவியல் பாடத்தை செய்முறையில் முறையாக பயின்றுள்ளனரா என்பது குறித்து ஆய்வு நடத்தினால், அதிர்ச்சிகரமான முடிவுதான் கிடைக்கும். இதை காரணம்காட்டிதான், கணினி கல்வியை தொடக்கப்பள்ளி முதல் தொடங்க வேண்டும் என்று கடந்த பத்து ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால், எங்களின் கோரிக்கைகள் ஏற்க இங்கு மறுக்கப்படுகிறது. ஆனால், முன்னாள் முதல்வர் கலைஞா் அவர்கள் தொலை நோக்கு பார்வையில், அப்போதே கணினி கல்வியை அறிமுகப்படுத்தி புரட்சி செய்த நிலையில், அடுத்து வந்த அரசு கணினி கிடப்பில் போட்டது. தற்போது உள்ள திமுக அரசு, கலைஞரின் கனவு திட்டத்தை கணினி கல்வியை நிறைவேற்றி, ஏழை குழந்தைகள் சிந்தனையில் கணினி கல்வியை புகுத்திட வேண்டும் என்று நாங்கள் கோரிக்கை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.