Unapproved playschools list in Coimbatore | அங்கீகாரம் இல்லாத விளையாட்டு பள்ளிகள்
Unapproved playschools list in Coimbatore
கோவை மாவட்டத்தில் சுமார் 400 விளையாட்டு பள்ளிகள் கல்வித்துறையிடம் அனுமதி பெறாமல் அங்கீகாரமின்றி செயல்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளி) கீதா வெளியிட்ட பத்திரிக்கை செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, விளையாட்டு பள்ளி விதி 2015ன்படி, விளையாட்டு பள்ளி தொடங்க மாவட்ட பள்ளி கல்வித்துறையிடம் முன் அனுமதி பெற்று, நடத்த வேண்டும். எந்த பள்ளியும் அங்கீகாரமின்றி செயல்படக்கூடாது, அவ்வாறு செய்தால், அபராதம் விதித்து பள்ளிகள் மூடப்படும். கோவை மாவட்டத்தில் சுமார் 400 விளையாட்டு பள்ளிகள் அங்கீகாரமின்றி சட்டவிரோதமாக செயல்பட்டு வருவது ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு கருதி, ஓடு, ஆஸ்பெஸ்டாஸ் ஷீட், கூரை கட்டிடங்களில் மற்றும் வணிக வளாக கட்டிடங்கள் மேல் பகுதியில் உள்ள பள்ளிகளில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை சோ்க்கக்கூடாது. அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் பெற்றோர்கள் பிள்ளைகள் சேர்த்துவிட்டு, ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கல்வித்துறை பொறுப்பு ஏற்காது.
Read Also: அறிவோம் விளையாட்டு பள்ளி பாதுகாப்பு விதிகள்
பல இடங்களில் அடுக்குமாடி கட்டிடங்களில் கூடுதல் வாடகை பெற்று, கட்டிட உரிமையாளர்கள் பள்ளி நடத்த அனுமதி வழங்கி வருகிறது. இதுபோன்ற கட்டிடங்கில் ஏதாவது விபத்தில் ஏற்பட்டால் கட்டிட உரிமையாளர் பொறுப்பு ஏற்க வேண்டும். சிறு குழந்தைகள் அரசு அனுமதியின்றி இதுபோன்ற செயல்படும் காப்பகங்கள் மற்றும் விளையாட்டு பள்ளிகளுக்கு வாடகை விடும் கட்டிட உரிமையாளர் மீது அரசு அனுமதியுடன் காவல்துறை உதவியுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அடுத்த மாதம் அனுமதி பெறப்பட்ட விளையாட்டு பள்ளிகளின் பெயர் விபரம் பத்திரிக்கை செய்தி மூலமாக தெரிவிக்கப்படும். ஒண்டிப்புதூரில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் தகுதியான பள்ளிகள் விபரம் பலகையில் ஒட்டப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.