அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

Do You Know these Playschool Kids Safety Norms ? – மழலையர் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு விதி உங்களுக்கு தெரியுமா?

Do You Know these Playschool Kids Safety Norms ? – மழலையர் பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு விதி உங்களுக்கு தெரியுமா?

முந்தைய பதிவில் மழலையர் பள்ளி வசதிகள் குறித்து நாம் அறிந்திருப்போம். அந்த பதிவினை படிக்க தவறியவர்கள் இங்கே கிளிக் செய்து படித்து கொள்ளலாம். https://tneducationinfo.com/category/school-education/revised-draft-code-of-regulations-for-play-schools-2015/ .

மேலும் இந்த பதிவில் மழலையர் பள்ளிகள் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக என்னென்ன பாதுகாப்பு அம்சங்கள் பள்ளியில் ஏற்படுத்தியிருக்க வேண்டும் என காணலாம்.

  • Sufficient Space in Playschool
  • Fire Extinguishers in Playschool
  • Evacuation Plan in Playschool
  • Conclusion

Sufficient Space in Playschool – மழலையர் பள்ளி இடவசதி

மழலையர் பள்ளிகள் போதுமான இடவசதிகள் ஏற்பாடு செய்து இருக்க வேண்டும். இது குழந்தைகள் எவ்வித இடையூறு இல்லாமல் விளையாட உதவும். மேலும் அவர்கள் ஒன்றுகூட கலந்துபேசி விளையாடும் வகையில் இடவசதி ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அதேபோன்று, போக்குவரத்து வசதி மிகுந்த சாலைகளை எதிர்நோக்கி பள்ளி நுழைவு வாயில் இருக்ககூடாது. இது சாலை விபத்துக்கு வழிவகுக்கும். மழலையர் பள்ளிகள் நீர் நிலைகள் அல்லது வனம் சார்ந்த இடங்கள் அருகில் இருக்கக்கூடாது என விதி கூறுகிறது.

இதுபோன்ற இடங்களில் குழந்தைகளின் பாதுகாப்பு உறுதி செய்ய முடியாது. மேலும், சுடுகாடு, குப்பை மேடு இடங்கள், போக்குவரத்து நொிசல் மிகுந்த சாலைகள், தொழிற்சாலைகள் அமைந்துள்ள பகுதிகளில் குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி அங்கு மழலையர் பள்ளிகள் இருக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Fire Extinguishers in Playschool – மழலையர் பள்ளியில் தீதடுப்பு சாதனங்கள் பயன்பாடு

முன்னதாக பள்ளி அங்கீகாரத்திற்கு விண்ணப்பம் செய்யும்போது, தீயணைப்பு துறையிடம், மழலையர் பள்ளி நிர்வாகத்தினர் சான்றிதழ் பெற வேண்டும் (மூன்றாண்டு ஒருமுறை புதுப்பிக்க வேண்டும்). போதுமான தீ தடுப்பு சாதனங்களை பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருப்புடன் வைத்திருக்க வேண்டும்.

குறிப்பாக சமையல் அறை, பள்ளி அறை உள்ளிட்ட இடங்களில் தீ தடுப்பு சாதனங்கள் இருக்க வேண்டும். தீடிரென சிறிய அளவிலான தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்தால், இந்த சாதனங்களை பயன்படுத்தி முதல்கட்டமாக தீயை அணைக்க முயற்சிக்க வேண்டும். உடனடியாக, அருகில் உள்ள தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்க வேண்டும். இது மிகப்பெரிய தீ விபத்தை கட்டுக்குள் கொண்டு வர உதவும்.

மின்சாதன பொருட்களான வயர்கள், சுவிட்ச் போர்டுகள் உள்ளிட்வை தரம் வாய்ந்தவையாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அங்கீகாரம் பெற்ற எலக்ட்ரீசியன்களை கொண்டு இந்த பணிகள் பள்ளியில் முடித்திருக்க வேண்டும்.

Evacuation Plan in Playschool – மழலையர் பள்ளியில் அவசரகால வழிகள்

மழலையர்கள் பள்ளிகள் அவசர விபத்து காலங்களில் உடனடியாக குழந்தை வெளியே அழைத்து செல்ல, அதற்கான திட்ட ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். மேலும் அவசர காலத்தில், சப்தம் எழுப்பும் கருவி, சைரன் உள்ளிட்வை பொருத்தப்பட்டிருக்க வேண்டும். அவசர காலங்களில் இது ஒலித்தால், பொதுமக்களும் குழந்தைகளை காப்பாற்ற முன்வருவார்கள்.

100மீ தொலைவிற்குள் அமைந்துள்ள பெட்ரோல் பங்குகள் அருகே பள்ளிகள் செயல்படக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அந்நியர் நடமாட்டத்தை கண்காணிக்கவும், மாணவர்கள் பாதுகாப்பு கண்காணிக்கவும் பள்ளிகளில் கண்டிப்பாக சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும் என்பது விதி. மேலும் இவை அனைத்தும், பள்ளி காவலர்கள் மூலம் கண்காணிக்க வேண்டும்.

பதாகைகளான மது அருந்துவது, பிகை பிடிப்பது, பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவதின் தீமைகள் குறித்து பள்ளிக்கு வெளியே பொருத்தப்பட்டிக்க வேண்டும். அதேபோன்று, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் அல்லது காஸ் சிலிண்டர் உள்ளிட்டவை பள்ளி வளாகத்தில் வைக்கக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Conclusion

ஒருவேளை மழலையர் பள்ளிகளில் சிசிடிவி காமிரா இருந்ததை நீங்கள் பார்த்துள்ளீர்களா அல்லது மழலையர் பள்ளிகள் விதிமீறி பெட்ரோல் பங்கு அருகில், வனத்துறை பகுதிகள், சுடுகாடு போன்ற இடங்களில் செயல்படுவது உங்களுக்கு தெரியுமா, அவ்வாறாக இருப்பின், அந்த பள்ளியின் பெயர், முகவரி மற்றும் மாவட்டத்தை கீழ் உள்ள கமெண்ட் பாக்ஸில் மறக்காமல் தெரிவிக்கவும்.

எங்கள் தகவல்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுக்கு மறக்காமல் ஷேர் செய்து அவர்கள் விழிப்புணர்வு அடைய உதவ வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

Related Articles

Latest Posts