Trichy Srirangam Government Boys School | கணித ஆசிரியர் உயிரிழப்பு
Trichy Srirangam Government Boys School
திருச்சி மாவட்டம் அடுத்து ஸ்ரீரங்கத்தில் அரசு ஆண்கள் மேல்நிலை செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 23 ஆண்டுகளாக, பாண்டுரங்கள் என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், நேற்று வழக்கம்போல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கணக்கு பாடம் நடத்தி வந்தார். அப்போது, திடீரென ஆசிரியர் மயங்கி கீழே விழுந்தார். இதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து சக ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.
Read Also: அரசு பள்ளி ஆசிரியர் மீது தாக்குதல்
பின்னர், அங்கிருந்த ஆசிரியர்கள் பாண்டுரங்கனை திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து சென்றுள்ளனர். அப்போது மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், அவரது உயிர் பிரிந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், இந்த தகவலை அவரது குடும்பத்தாருக்கு தெரிவித்தனர். தொடர்ந்து அமரர் ஊர்தி மூலம் அவரது சொந்த ஊரான விருதாச்சலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வகுப்பறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும்போதே மாராடைப்பு ஏற்பட்டு கணித ஆசிரியர் உயிரிழந்த நிகழ்வு மாணவர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.