அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
27.9 C
Tamil Nadu
Thursday, June 8, 2023

Thoothukudi Teacher Attack | ஆசிரியர் சங்கம் கண்டனம்

Thoothukudi Teacher Attack | ஆசிரியர் சங்கம் கண்டனம்

Thoothukudi Teacher Attack | ஆசிரியர் சங்கம் கண்டனம்

 தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் ச மயில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

தூத்துக்குடி மாவட்டம்,புதூர் ஒன்றியம்,கீழ நம்பிபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் திருமதி. குருவம்மாள்,திரு. பரத் ஆகியோர் மீது இன்று(21.03.2023) அப்பள்ளியில் இரண்டாம் வகுப்புப் பயிலும் மாணவனின் பெற்றோர் நடத்திய கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரும் கொந்தளிப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Read Also: பள்ளி வளாகத்தில் ஆசிரியர் மீது கொடூரதாக்குதல்

 “எழுத்தறிவித்தவன் இறைவன்” என்று ஆசிரியர்கள் மதிக்கப்பட்ட காலம் போய், எழுத்தறிவிக்கும் ஆசிரியர்களை கேட்பதற்கே நாதியில்லாமல் விரட்டி விரட்டி அடிக்கும் கேவலமான செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது காவல்துறை மிகக் கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தனது குழந்தையை ஆசிரியர் அடித்ததாகச் சொல்லும் பெற்றோர் ஒருவேளை அது உண்மையாக இருந்தாலும்,அதை முறையாகப் புகார் தெரிவிக்க வேண்டிய இடத்தில் தான்  தெரிவித்திருக்க வேண்டும். அதை விடுத்து ஆலயம் போன்ற கல்விக்கூடத்தில் நுழைந்து ஆசிரியர்கள் கூக்குரலிட  தடுப்பதற்கே நாதியில்லாமல் அடித்து உதைத்த கோரக்காட்சி சமூக ஊடகங்களில் பரவி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு முன்பு ஆசிரியர்கள் இதேபோன்று பெற்றோர்களால், மாணவர்களால், சமூக விரோதிகளால் தாக்கப்பட்ட நிகழ்வுகளில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படாததும் இதுபோன்ற காட்டுமிராண்டி செயல்கள் தொடர்வதற்கு காரணமாக அமைந்துவிட்டது. மருத்துவம், கல்வி ஆகிய இரண்டும் சேவைப் பணிகளாகும். மருத்துவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டம் உள்ளதைப் போல், ஆசிரியர்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு இத்தருணத்தில் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

நடந்து முடிந்த கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் ஆசிரியர்களின் உயிரைப் பாதுகாப்பதற்காக ஒத்த கருத்துடைய அமைப்புகளைத் திரட்டி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Articles

Latest Posts