Ennum Ezhuthum Kondatam | எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் | கீழ்நம்பிபுரம் தொடக்கப்பள்ளி
Ennum Ezhuthum Kondatam
அரசு பள்ளியில் எண்ணும் எழுத்தும் கொண்டாட்டத்தின்போது, பெற்றோர் ஒருவர் ஆசிரியரை பள்ளி வளாகத்தில் சரமரியாக தாக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியத்தில் கீழ்நம்பிபுரம் தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், பெற்றோர் ஒருவர் அந்த ஆசிரியரை சரமரியாக பள்ளி வளாகத்தில் கொடூரமாக தாக்கியது வீடியோவாக வெளியாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
Read Also: பள்ளி கல்வி அமைச்சர் அவசர செய்தி
அந்த வீடியோவில், பெற்றோர் தம்பதியினர் பள்ளிக்கு வந்தனர். அப்போது அங்குள்ள ஆசிரியர் ஒருவரிடம் எதற்காக என் மகனை அடித்தீர்கள் என்று மாணவனின் அம்மா அந்த ஆசிரியரிடம் கேட்டார். அதற்கு அந்த ஆசிரியர், நான் உங்கள் குழந்தையை அடிக்கவில்லை என்று கூறினார். மேலும், உங்களை எதை கொண்டு அடிப்பேன் என்று தெரியவில்லை அந்த ஆசிரியரிடம் தரக்குறைவாக பேசினார். அங்கிருந்த ஒருவர் போன் பேசிய பிறகு, அந்த ஆசிரியரின் கண்ணத்தில் அறைந்தார். அதிர்ந்து போன ஆசிரியர் அங்கிருந்து வெளியே ஒடுகிறார். அந்த நபர் அந்த ஆசிரியரை விடாமல் துரத்துகிறார். பள்ளி வளாகத்தில் அந்த ஆசிரியரை பிடித்து பயங்கரமாக தாக்கியுள்ளார். அதனுடன அந்த பெண்ணும் ஆசிாியரை தாக்குகிறார். நிலைதடுமாறி அந்த ஆசிரியரை அங்கு இங்குமாய் ஓடி தஞ்சம் புகுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், துறை ரீதியாகவே அல்லது காவல்துறை மூலமாகவே புகார் கொடுக்காமல், நேரடியாக பள்ளிக்கு வந்து தாக்கியது ஆசிரியர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்படி, 2ம் வகுப்பு மாணவனை அடித்ததாக எட்டயபுரம் அருகே கீழ்நம்பிபுரம் அரசு பள்ளி தலைமை ஆசிரியை குருவம்மாள், ஆசிரியர் பரத் மீது தாக்குதல் நடத்திய சிவலிங்கம், அவரது மனைவி செல்வி மற்றும் செல்வியின் தந்தை முனியசாமி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.