Today Tamil Nadu Rain Holiday | 27 மாவட்டங்களுக்கு விடுமுறை
Today Tamil Nadu Rain Holiday
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கன மழை மற்றும் மிதமாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே விடுமுறை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில் இன்று காலை 7 மணி நிலவரப்படி சுமார் 26 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Read Also: நீட் பயிற்சி நவம்பர் மூன்றாவது வாரம் துவக்கம்
அதன்படி சென்னை, கோவை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், அரியலூர், திருவள்ளூர், நீலகிரி, வேலூர், கரூர், ராணிப்பேட்டை, புதுக்கோட்ைட, கடலூர், பெரம்பலூர், விழுப்புரம், சேலம், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, தேனி, தா்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சிவகங்கை, மதுரை, ராமநாதபுரம் (பள்ளிகள்) ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று (12/11/2022) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், மயிலாடுதுறை, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு அதீத மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.