அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
33.7 C
Tamil Nadu
Saturday, September 23, 2023

NEET Training Government School Students | நீட் பயிற்சி நவம்பர் மூன்றாவது வாரம் துவக்கம்

NEET Training Government School Students | நீட் பயிற்சி நவம்பர் மூன்றாவது வாரம் துவக்கம்

NEET Training Government School Students

தமிழ்நாடு பள்ளி கல்வி ஆணையர் இன்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது, 2022-2023ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மேல்நிலைக் கல்வி பயிலும் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு உயர்கல்வி போட்டி தேர்வர்களுக்கு செய்யும் வகையில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

போட்டி தேர்வுகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 11ஆம் மற்றும் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு நவம்பர் மூன்றாம் வாரத்திலிருந்து சனிக்கிழமைகளில் நீட் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

Read Also: Justice AK Rajan Committee Report PDF

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒன்றியங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப (ஒன்றியத்திற்கு ஒரு மையம்) என 412 பயிற்சி மையங்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டு நடைமுறையில் உள்ளது.

மேற்கண்ட மையங்களில் இருந்து தமிழ்வழி மற்றும் ஆங்கிலம் வழி பயிற்சி மையங்களை, அம்மாவட்டங்களில் உள்ள மாணவர்களின் பயிற்று மொழி தேவைக்கேற்ப தெரிவு செய்துகொள்ள வேண்டும்.

போட்டி தேர்விற்கு பயிற்சி பெற விரும்பும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் 11ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும்,(அதிகபட்சம் – 50 மாணவர்கள் ஒரு ஒன்றியத்திற்கு) 11 ஆம் வகுப்பு மாணவர்கள், 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண் அடிப்படையிலும் (ஒரு ஒன்றியத்திற்கு அதிகபட்சம் 20 மாணவர்கள்) தெரிவு செய்யப்பட வேண்டும்.

OC/BC – பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு 60 சதவீத மதிப்பெண்களும், SC/ST/PH பிாிவில் 50 சதவீத மதிப்பெண்களாகச் கொண்டு 12ஆம் வகுப்பில் 50 சதவீத மாணவர்களும், 11ஆம் வகுப்பில் 20 மாணவர்களும் தெரிவு செய்து அம்மாணவர்களின் விவரத்தினை, படிவங்களில் பூர்த்தி செய்து jdhssed@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மையங்களில் வருகைப் பதிவேடு, மதிப்பெண் பதிவேடு, முறையாக பராமரிக்கப்பட வேண்டும். இது நேரடி பயிற்சி வகுப்புகளாக நடைபெறும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Posts