போதை வஸ்து மாணவர்கள் பயன்படுத்தினால் ஆசிரியர் மீது நடவடிக்கை | கலெக்டர் எச்சரிக்கை
போதை வஸ்து
போதை வஸ்து பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவது தெரியவந்தால், பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் போதை பொருட்களுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான கூட்டம் கடந்த 5ம் தேதி நடந்தது.
கூட்டத்தில் தலைமை தாங்கிய மாவட்ட ஆட்சியர் மோகன் பேசியதாவது, போதை பொருட்கள் நடமாட்டம் குறித்து போலீஸ், கடலோர காவல்படை, வனத்துறை, ரயில்வே போலீஸ் மூலம் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளில் தவறுகள் நடப்பதற்கு பல்வேறு சந்தர்ப்ப கால சூழ்நிலைகள் உருவாகின்றன.
Also Read:போதை பழக்கம் – மாணவர்கள் எப்படி அடிமையாகிறார்கள்?
அதை தடுப்பது ஆசிரியர்கள் தலையாய கடமை. பள்ளி நேரம் துவங்கியதும் மாணவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கக்கூடாது. வெளி நபர்கள் பள்ளி மாணவர்களுடன் தொடர்பு கொள்வது தெரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும். மாணவர்களுக்கு அறிவரை வழங்கி நல்வழிப்படுத்த வேண்டும். பள்ளியில் தவறு நடப்பது தெரிந்தும், கண்டும் காணாமல் மாணவர்களை வெளியே அனுமதிப்பது தெரிந்தால், பள்ளி தலைமை ஆசிரியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பள்ளி மாணவர்கள் லெக்கின்ஸ் டைட்டாகவும், முட்டி வரையும் பேண்ட் அணிந்து வருகின்றனர். தலைமுடி சரியாக வெட்டுவதில்லை. சீருடையை சரியாக அணிவது கிடையாது. இதையெல்லாம் தலைமை ஆசிரியர்கள் கண்காணித்து மாணவர்களை ஓழுங்குப்படுத்த வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் பேசினார்.
இந்த செய்தி குறித்து உங்கள் கருத்து என்னவென்று மறக்காமல் கீழே உள்ள கருத்து பதிவு பெட்டியில் தெரிவியுங்கள்.