TNUSRB Latest News | இரண்டாம் நிலை காவலர் தேர்வு விரைவில் அறிவிப்பு
TNUSRB Latest News
தமிழகத்தில் 2,599 இரண்டாம் நிலைக் காவலர்களை தேர்வு செய்வதற்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குனர் (டிஜிபி) சி சைலேந்திரபாபு அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
காவல் துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். இந்த தேர்வு வாரியத்தின் மூலம் காவல்துறை, சிறைத்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு காவலர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதையடுத்து தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 2599 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவதற்கு அனுமதி அளித்து டிஜிபி உத்தரவிட்டார்.
Read Also: ஸ்டார்ட் அப் மானியம் பெறுவது எப்படி
ஆயுதப்படைக்கு 780 இரண்டாம் நிலை பெண் காவலர்கள், தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 1819 இளைஞர்கள் என மொத்தம் 2599 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யபட உள்ளனர். இந்த காவலர்களை நடப்பாண்டிற்குள் தேர்வு செய்யும்படி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த காவலர்கள் தேர்வு செய்யப்பட்டு, பணிக்கு வரும்போது காவல்துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களும் நிரப்பப்பட்டிக்கும் என்றும், தேர்வுக்குரிய பணிகளை தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் விரைவில் தொடங்கும் என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.