TN Startup Subsidy in TAMIL | startuptn.in | ஸ்டார்ட் அப் மானியம் பெறுவது எப்படி
TN Startup Subsidy in TAMIL
டான்சீட் திட்டத்தின் கீழ் புத்தாக்க தொழில் (ஸ்டார்ட் அப்) நிறுவனங்கள் அரசின் மானியம் பெற மார்ச் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு, தமிழ்நாடு அரசின் புத்தாக்கத் தொழில் ஆதார முதலீட்டு நிதியின் கீழ் (டான்சீட்) தொடக்க நிலையில் உள்ள புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. இதுவரை நடைபெற்ற நான்கு பதிப்புகளில் 84 நிறுவனங்களுக்கு (ஸ்டார்ட் அப்) மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இப்போது 5ஆம் பதிப்பில் 3 சதவீத அளவிலான மானியம் தமிழ்நாடு புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு வழங்கும் வகையில் இத்திட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 50 நிறுவனங்கள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட உள்ளன. அதன்படி இந்த நிறுவனங்களுக்கு மானியம் ரூ.10 லட்சத்திலிருந்து ரூ 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
Read Also: குரூப் 2 தேர்வு ரத்து செய்க
எனவே பசுமை தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்ட நிறுவனங்களுக்கு ரூ.15 லட்சமும், இதர துறை சார்ந்த நிறுவனங்களுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட உள்ளது.
மேலும், மொத்த திட்ட இலக்கில் 25 சதவீதமும், ஊரக வாழ்வாதார மேம்பாட்டுக்கான புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு என 10 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் பயன்பெற விண்ணப்பிக்கும் நிறுவனங்கள் தமிழகத்தை தலைமையகமாகவும், இந்திய அரசின் டிபிஐஐடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தகுதியான நிறுவனங்கள்
www.startuptn.in எனும் இணையதளத்தில் மார்ச் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.