TNPSC today news | டிஎன்பிஎஸ்சி இன்றைய செய்தி
TNPSC today news
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் பி உமா மகேஸ்வரி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உள்ள உதவி பிரிவு அலுவலர் (மொழிப் பெயர்ப்பு) பதவி தொடர்பான மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 06.01.2023 அன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. விண்ணப்பதாரர்கள், தங்கள் இணையவழி விண்ணப்பத்தில் கோரிய கல்விச் சான்று மற்றும் அனைத்து மூலச்சான்றிதழ்களையும் நேரில் கொண்டு வர வேண்டும்.
Read Also: டிஎன்பிஸ்சி தேர்வர்கள் கடும் அதிருப்தி
2) மூன்றாம் கட்ட மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு/ கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விவரங்கள் அடங்கிய “அழைப்புக்கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு கலந்தாய்வு அழைப்பாணை தனியே அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் மூலச்சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அவர்களுக்கு உரிய நாளில் வரத்தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு அதற்கான விவரம் SMS மற்றும் E-Mail மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.