TNPSC Schedule News 2022 | டிஎன்பிஸ்சி தேர்வர்கள் கடும் அதிருப்தி
TNPSC Schedule News 2022
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அடுத்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையில் குரூப் 1 மற்றும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியிடாததால் அத்தேர்வுக்கு தயராகிவரும் தேர்வர்கள் கடும் அதிருப்தி மற்றும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அம்பேத்கா் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பயற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் கணேஷ், தேர்வாணையத்தின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள அவர், குரூப் 1 மற்றும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுக்கு பல வருடங்களாக தங்களை தயார்படுத்தி வரும் தேர்வர்கள், தொடர் பயிற்சி மேற்கொள்ள வழிவகுக்காமல், பயிற்சியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாக அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
சுமார் தமிழகத்தில் மூன்று லட்சம் பேர் தேர்வர்கள் இந்த மூன்று பிரிவு தேர்வுக்கு தயராகி வருவதாகவும், வருட அட்டவணையில் அடுத்த ஆண்டு தேர்வு குறித்து அறிவிக்கப்படாததால் அவர்கள் கடும் ஏமாற்றம் மற்றும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த ஒரு வருட கால இடைவெளி என்பது, அவர்கள் தேர்வுக்கு தயாரவதில் இருந்து மடைமாற்றம் செய்ய தேர்வாணையத்தின் நடவடிக்கை வழிவகுக்கும் என்று கூறியுள்ளார்.
மேலும், டிசம்பர் 8, 2022ன்படி, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் புள்ளி விவரத்தின்படி, சுமார் 67 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்கு காத்திருப்பதாக தெரிவிக்கின்றன.
34 வயதுடைய வீரமணி என்பவர் கூறும்போது, அவர் கடந்த ஏழு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயராகி வருவதாகவும், கொரோனா காலத்தில் தோ்வுகள் நடத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். தற்போது அறிவிப்புகள் ஏதும் இடம்பெறாததால், நான் 2024ம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த கால இடைவெளி, என்னை தேர்விலிருந்து விலக்கி வைத்துவிடும், என்றார்.
கோகுல்பிரசாத் கூறும்போது, யுபிஎஸ்சி போன்று, டின்பிஎஸ்சி சரியான அணுகுமுறையை பின்பற்றுவதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
டிஎன்பிஸ்சி சேர்மன் சி முனியநாதன் (பொ) நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அந்தந்த துறையில் காலிபணியிட விவரங்கள் பெற்ற பிறகு, குரூப் 1 மற்றும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடத்தப்படும் தெரிவித்துள்ளார்.
இருந்தபோதிலும், 2023ம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட அட்டவணையை தேர்வாணையம் வெளியிடுமா என்பதை அவர் உறுதிப்படுத்தவில்லை என அந்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.