You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNPSC Librarian Job Announcement 2023 | டிஎன்பிஎஸ்சி நூலகர் வேலை வாய்ப்பு

Typing exam apply Tamil 2023

TNPSC Librarian Job Announcement 2023 | டிஎன்பிஎஸ்சி நூலகர் வேலை வாய்ப்பு

TNPSC Librarian Job Announcement 2023

ஒருங்கிணைந்த நூலக பணிகள், சார் நிலை பணிகளில் காலியாக உள்ள 35 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) ஒருங்கிணைந்த நூலக பணி, சார்நிலை பணிகளில் அடங்கிய 35 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரியில் நூலகர் 8 இடங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் அலுவலர் 1 இடம், மாவட்ட நூலக அலுவலர் 3 இடங்கள் என 12 இடங்கள் அடங்கும். இந்த காலிபணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். அதேபோல் பொதுத்துறையின் கீழ் தலைமை செயலக நூலகம் நூலக உதவியாளர் 2 இடங்கள், ெபாது நூலக துறையில் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் 21 இடங்கள் என 23 இடங்கள் அடங்கும். இப்பதவிகளுக்கு நேர்முக தேர்வு கிடையாது.

Read Also: டிஎன்பிஎஸ்சி தேர்வு அறை விதிமுறைகள் என்ன

இந்த பதவிகளுக்கான எழுத்து தேர்வுக்கு மார்ச் 1ம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் இணையதளம் (www.tnpsc.gov.in, www.tnpscexams.in) வாயிலாக விண்ணப்பிக்கலாம். இணைய வழி விண்ணப்பங்களை மார்ச் 6ம் தேதி நள்ளிரவு 12.01 மணி முதல் மார்ச் 8ம் தேதி இரவு 11.59 மணி வரை திருத்தம் செய்யலாம்.

இத்தேர்வுக்கான எழுத்து தேர்வு மே 13ம் தேதி நடைபெறுகிறது. 13ம் தேதி காலை 9.30 மணி வரை முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதல் தாள் தேர்வும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். எழுத்து தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய ஏழு மாவட்டங்களில் நடைபெறும். தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு கட்டணம் உள்ளிட்ட முழு விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.