TNPSC Group 4 Result Issue | டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவு குளறுபடி
TNPSC Group 4 Result Issue
நேற்று வெளியான டிஎன்பிஸ்சி தேர்வு முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
இந்த குரூப் 4 தேர்வுகள் கடந்த வருடம் நடத்தப்பட்ட நிலையில், ஏழு மாத இடைவெளிக்கு பிறகு டிஎன்பிஸ்சி தேர்வுக்கான முடிவுகளை நேற்று வெளியிட்டது. இந்த நிலையில், தேர்வர்களுக்கு தரவரிசை தயாரிக்கப்பட்டதில் குளறுபடி நடந்துள்ளதாக தற்போது புகார் எழுந்துள்ளது.
Read Also: குரூப் 4 தோ்வு கட்ஆப் உயர்வு
குறிப்பாக தரவரிசை பட்டியலில் அதிக மதிப்பெண் பெற்ற ஒரு தேர்வரின் தரவரிசை, குறைந்த மதிப்பெண் பெற்ற தேர்வரின் கீழ் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்த முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக தேர்வர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அவர்களுக்கான பணி வாய்ப்பு பறிபோகும் சூழ்நிலை ஏற்படும் என்று அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால் அந்த முடிவுகளை அவர்கள் பரிசீலிக்க வேண்டும் என்பதும் தேர்வர்களின் கருத்தாக உள்ளது.
(Sources - News 18 Tamil Nadu)