TNPSC DEO Preliminary Result Latest News | டிஎன்பிஎஸ்சி டிஇஒ தேர்வு ரிசல்ட்
TNPSC DEO Preliminary Result Latest News
டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தோ்வாணையம் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கான தேர்வு முடிவுகளை வெளியிடாமல் காலதாமதம் செய்வதாக தேர்வர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பள்ளி கல்வித்துறையில் 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த ஏப்ரல் 20ம் தேதி நடத்தப்பட்டது. கணினி அடிப்படையிலான நடந்த இத்தேர்வில், லட்சக்கணக்கான தோ்வர்கள் பங்கேற்றனர். 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.
Read Also: டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி
இந்த நிலையில், டிஎன்பிஎஸ்சி இதன் தேர்வு முடிவு மே மாதம் வெளியிடப்படும் என்று தெரிவித்த நிலையில், முடிவுகள் திட்டமிட்டப்படி வெளியிடவில்லை. பின்னர் தேர்வு முடிவுகள் ஜூலை மாதம் வௌியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது. ஆனால், ஜூலை மாதம் முடிய இரண்டே நாட்கள் உள்ள நிலையில், தோ்வு முடிவுகள் வெளியிடுவதற்கான எந்த நடவடிக்கையும் டிஎன்பிஎஸ்சி எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கவில்லை. இதனால், தேர்வர்களின் நேரம் விரயமாவதாக புலம்புகின்றனர்.
இதுகுறித்து தேர்வர் ஒருவர் கூறும்போது, தேர்வு முடிவுகள் வெளியிடாததால், டிஇஒ மெயின் 1 தேர்வுக்கு தயாராக முடியாத சூழல் நிலவுகிறது. தேர்வு முடிவுகள் வெளியிட்டால், தேர்வர்கள் அடுத்த தேர்வுக்கு தயாரவதற்கு உதவியாக இருக்கும். ஆனால், இந்த விவகாரத்தில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதால், தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.