You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNPSC Free Coaching Center in Chennai | டிஎன்பிஎஸ்சி இலவச பயிற்சி

Typing exam apply Tamil 2023

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 1 முதன்மை தேர்வை தமிழ் வழியில் தேர்வு எழுதும் பெண் தேர்வர்களுக்கு மட்டும் உணவு மற்றும் தங்கும் வசதியுடன் மே 17ம் தேதி முதல் ஆகஸ்ட் 6ம் தேதி வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளதாக ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி அறிவித்துள்ளது. 

மூன்று மாதங்கள் தொடர்ந்து முழு நேரமாக நடைபெறும் இந்த எழுத்துப்பயிற்சி வகுப்பானது, டிஎன்பிஎஸ்சி முன்னாள் தலைவர் ஆர் நடராஜ் நேரடி கட்டுப்பாட்டில் பயிற்சி நடைபெற உள்ளது.

Read Also: டிஎன்பிஸ்சி இன்றைய செய்தி

முன்பதிவு விவரங்கள்

முதல் நிலை தேர்வில் வெற்றிபெற்று இந்த பயிற்சி வகுப்புகளில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் “TNPSC GROUP 1 Mains Tamil Medium என்று தட்டச்சு செய்து 9710375604 என்ற எண்ணுக்கு வாட்அப் அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு ஆட்சித்தமிழ் ஐஏஎஸ் அகாதெமி, 142, ஜிஎஸ்டி சாலை, குரோம்பேட்டை, சென்னை 44 என்ற முகவரியில் நேரில் அல்லது 7550151584, 9710375604 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

News Source - Dinamani