TNEA Counselling 2022 Update | பொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது? அமைச்சர் பொன்முடி விளக்கம்
TNEA Counselling 2022 Update
பொறியியல் படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்க இருந்த நிலையில் நீட் தேர்வு முடிவுக்கு பிறகு கலந்தாய்வு நடைபெறும் எனவும், பொது கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் உயர்கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
Entrance Exam Tips in Tamil | நுழைவுத் தேர்வு வெற்றி பெற குறிப்புகள்
தமிழகத்தில் உள்ள
அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்து பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 20ம் தேதி முதல் தொடங்கும். அதில் அவர்களுக்கு சேர்க்கைக்கு வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான பிஇ, பிடெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் 431 பொறியியல் கல்லூரிகள் இடம்பெறுகின்றன. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் (65 சதவீதம்) 1,48,811 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அரசு பள்ளி மாணவர்களுக்கு 10,968 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி என்றால் என்ன
இந்த நிலையில், பொதுப்பிரிவு மாணவ, மாணவியருக்கான சேர்க்கை கலந்தாய்வு வரும் 25ம் தேதி (வியாழக்கிழமை) தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்திருந்தார்.
பொறியியல் படிப்பு கலந்தாய்வு எப்போது
இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையில், பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர் பலர் மருத்துவ படிப்புக்கும் விண்ணப்பித்துள்ளனர். அதில் இடம் கிடைக்காத நிலையில் அவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு உள்ளது. அதனால் நீட் தேர்வுகள் தற்போது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
அமைச்சர் பொன்முடி பேட்டி
உயர் கல்வி அமைச்சர் பொன்முடி இன்று காலை விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ஒன்றிய அரசின் நீட் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதனால், மாணவர்கள் நலன் கருதி தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுகிறது. நீட் தேர்வு முடிவு வெளியான 2 நாட்களுக்குள் பிறகு பொறியியல் கலந்தாய்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து காத்திருக்கின்றனர். நீட் தேர்வு முடிவு வெளியாக நிலையில் பொறியியல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தினால், மருத்துவ கனவில் உள்ள மாணவர்கள், பொறியியல் கலந்தாய்வுக்கு வந்து சேர்க்கை பெறும் நிலையில், மீண்டும் மருத்துவ கலந்தாய்வுக்கு செல்வார்கள். இதனால் அவர்கள் அலைக்கழிக்கப்படும் சூழல் உருவாகும். எனவே மாணவர்கள் நலன்கருதி, தமிழக முதல்வர் அறிவுரையின்போில், மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயர் கல்வி அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.