அன்பார்ந்த ஆசிரியர் மற்றும் மாணவ செல்வங்கள் உங்களுக்கு வணக்கம். உங்கள் கல்வி சார்ந்த கட்டுரைகள், படைப்புகள், தேர்வு வினாத்தாள்கள், முக்கியமான அரசாணைகள், செயல்முறைகள் ஆகியவற்றை இந்த மின்னஞ்சல் Email –tneducationinfo@gmail.com. மூலமாக அனுப்பலாம். உங்கள் பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்த செய்திகள், தனித்திறன் கொண்டவர்கள் செய்தி மற்றும் தகவல்களை tneducationinfo இணையதளத்தில் வெளியிட விரும்பினால், செய்திகள் மற்றும் புகைப்படங்கள் மேற்கண்ட மின்னஞ்சலில் அனுப்பலாம். செய்திகள் இடம்பெறும். (*Conditions Apply). கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு தொடர்பான செய்திகளை உடனுக்குடன் அறிய 9003710850 இந்த எண்ணை உங்கள் வாட்ஸப் குரூப் மற்றும் டெலிகிராமில் இணைக்கவும் –- தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி.
23.3 C
Tamil Nadu
Monday, December 11, 2023

What is Higher Education in Tamil | உயர் கல்வி என்றால் என்ன

What is Higher Education in Tamil | உயர் கல்வி என்றால் என்ன

மாணவர்கள் தொடக்க முதல் மேல்நிலைப் பள்ளி வரை, பள்ளி படிப்பை படிப்பார்கள். 12ஆம் வகுப்புக்கு பிறகு கல்லூரிகளில் சேர்ந்து இளநிலை பட்டப்படிப்பு (Undergraduate Course) படித்து கல்வியை தொடர்வது உயர் கல்வி என்று வரையறுக்கப்படுகிறது. ஏதாவது ஒரு பட்டம் பெற்றதோடு மாணவர்களின் படிப்பு நின்றுவிடுவதில்லை, உயர் கல்வியில் படிப்பு என்பது தொடர்ச்சியாக இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நம் விருப்பத்திற்கு ஏற்ப குறிப்பிட்ட துறையில் சேர்ந்தும் படிக்கலாம்.

உதாரணமாக, இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், முதுநிலை பட்டப்படிப்பில் (Post Graduate) அல்லது முதுநிலை பட்டயப்படிப்பில் (Diploma) சேருகிறார்கள். தாங்கள் விரும்பும் வேலையில் சேருவதற்கு ஏற்ற வகையில் பி.எட், பி.எல் போன்ற மற்றொரு இளநிலை படிப்புகளில் சேருகிறார்கள்.

Entrance Exam Tips in Tamil | நுழைவுத் தேர்வு வெற்றி பெற குறிப்புகள்

முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள், எம்.பில் படிப்பிலோ அல்லது பிஎச்டி ஆய்வு படிப்பிலோ சேருகிறார்கள். பிஎச்.டி ஆய்வை முடித்து வேலையில் சேர்ந்தவர்கள். முதுமுனைவர் பட்டத்துக்காக முதுநிலை ஆய்வில் ஈடுபடுகிறார்கள். இப்படிப்பு என்பது விடாமல் நம்மை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

What is Higher Education in Tamil

டிப்ளமோ படித்தவர்கள், பட்டப்படிப்புகளில் சேர்ந்து தங்களது தகுதியை உயர்த்திக் கொள்கிறார்கள். சிலர் முதுநிலை பட்டயப் படிப்பில் சேருகிறார்கள். தொழில் திறன் பயிற்சிகளில் ஆர்வம் காட்டும் மாணவர்களும் உண்டு. இளநிலை பட்டப்படிப்பை முடித்தவர்கள் வேலைக்கு செல்கிறார்கள். அதாவது பொறியியல் பட்டப்படிப்பைப் படித்த மாணவர்கள், பெரும்பாலும் உடனடியாக வேலைக்கு செல்வதிலேயே ஆர்வமாக இருக்கிறார்கள். படித்தவர்களுக்கு வளாக நேர்காணல் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை கிடைத்துவிடுகிறது. வேறு சிலர், பல்வேறு அரசுப் பணிகளில் வேலையில் சேருவதற்காக போட்டி தேர்வுகளையும் எழுதுகிறார்கள். தொழில் நிறுவனங்களில் வேலைக்கு சேருவதற்கு தேவையான தகுதிகளை வளர்த்திகொள்ள சில பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். பட்டப்படிப்பை படித்து முடித்து, உயர் கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து தங்களது கல்வித்தகுதியை உயர்த்திக்கொள்ள விரும்புகிறார்கள். தொலைநிலை கல்வி மூலம் தங்களது படிப்பை தொடரும் மாணவர்களும் உண்டு.

உயர் கல்வி என்றால் என்ன?

What is Higher Education in Tamil
What is Higher Education in Tamil

முதுநிலை பட்டப்படிப்புகளில் சேருவதற்கு பெரும்பாலும் நுழைவுத்தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. முக்கிய கல்வி நிறுவனங்களில் முதுநிலை படிப்புகளில் சேருவதற்கான சில நுழைவு தேர்வுகளை எழுதித் தகுதிபெறும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் கிடைக்கிறது. கல்லூரிகளில் விரிவுரையாளராக ஆவதற்கு ஆய்வ படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று ஆா்வமிக்கவர்களும் முதுநிலை படிப்புகளில் சேருகிறார்கள். அரசு கல்வி நிறுவனங்களில் முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு கட்டணம் குறைவு. கல்வி உதவித்தொகை வாய்ப்பும் உண்டு. தகவல் தொழில்நுட்ப காலத்தில் எந்த வேலையில் இருந்தாலும் கூட, கற்றது போதும் என்று விட்டுவிட முடியாது. தொடர்ந்து புதிய கருத்துகளையும், புதிய தொழில்நுட்பங்களையும் கற்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது.

Related Articles

Latest Posts