You are at the right place to read the latest education news today in Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on our website - TN Education Info.

TNAU UG ADMSISSION 2022 tnau.ucanapply.com வேளாண்மை பல்கலை இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்   

TNAU Spot Admission 2023  

TNAU UG ADMSISSION 2022 tnau.ucanapply.com வேளாண்மை பல்கலை இளங்கலை படிப்பு மாணவர் சேர்க்கை இன்று முதல் விண்ணப்பிக்கலாம்   

IMPORTANT NOTIFICATION READ THIS: TNAU UG ADMISSION 2023 NOTIFICATION

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு இந்தியாவின் தலைசிறந்த வேளாண்மை பல்கலைக்கழகங்களில் முதன்மையாக உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 28 இணைப்பு கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 12 இளங்கலை பட்டப்படிப்பகளுக்கு 2022-2023 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை ஜூன் 28ம் தேதி இன்று முதல் தொடங்க உள்ளது.

TNAU UG ADMSISSION 2022 tnau.ucanapply.com

இளங்கலை பட்டப்படிப்புகளில், இளங்கலை (மேதமை) வேளாண்மை அறிவியல், தோட்டக்கலை, இளமறிவியல், வேளாண்மை (தமிழ்வழி), இளமறிவியல் (மேதமை) உணவு, ஊட்டசத்து, மற்றும் உணவு முறையியல், இளம் தொழில்நுட்பம் (வேளாண் பொறியியல்), இளமறிவியல் (மேதமை) பட்டுவளப்பு, இளம் தொழில்நுட்பம் (உணவு தொழில்நுட்பம்), இளம் தொழில்நுட்பம் (உயிரித் தொழில்நுட்பம்) இளம் தொழில்நுட்பம் (ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் பொறயியல்) மற்றும் இளமறிவியல் (வேளாண் வணிக மேலாண்மை) ஆகியவற்றிற்கு மாணவர் சேர்க்கை நடைபெறும்.

READ ALSO THIS: TNAU PG ADMISSION 2022|Link Here

உறுப்பு கல்லூரிகளில் 2,148 இடங்களுக்கும், இணைப்புகல்லூரிகளில் 2337 இடங்களுக்கும் இணையதள வாயிலாக 2022-2023 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. 12 பாடப்பிரிவுகளுக்கும் ஒரே ஒரு இணைய வழி விண்ணப்பம் மட்டும் போதுமானது.

மாணவர்கள் http://tnau.ucanapply.com என்ற இணையதளம் மூலம் வாயிலாக ஜூலை 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 2022-2023 ஆம் வருடத்திற்கான மாணவர் சேர்க்கை தொடர்பான பதிவு செய்தல் மற்றும் விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசை பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபார்ப்பு, நகர்வு முறையில் பாடப்பிாிவு மற்றும் கல்லூரிகளை ஒதுக்கீடு செய்தல், கல்லூரியில் சேருவதற்கான இடைக்கால அனுமதி வழங்குதல் அகியவை இணையதளம் மூலம் வாயிலாக மட்டும் நடைபெறும்.

மாணவர் சேர்க்கை குறித்த இதர விபரங்களை அறிந்துகொள்ள http://tnau.ucanapply.com இணையதளத்தில் உள்ள தகவல் கையடு உதவிகரமாக இருக்கும். மேலும் தெளிவுபெற 0422-6611322, 6611328, 6611345, 6611346 ஆகிய தொலைபேசி உதவி சேவை எண்களை அனைத்து வேலை நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்புகொள்ளலாம். மேலும், விண்ணப்பதாரர்கள் தங்களுடைய தேவைகளுக்கான பதில்களை ugadmissions@tnau.ac.in என்ற மின்னஞ்சல் வழியாக பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.