You are at the right place to read the latest education news today in
Tamil. As well as you can read the latest TRB, TNPSC, sports, job news on
our website - TN Education Info.
கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறை திங்கள்கிழமை (ஜூன் 27) தொடங்கியது.
இது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி கோவையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் திருச்சி, பெரியகுளம், கிள்ளிகுளம், கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள கல்வி வளாகங்களில் 32 துறைகளில் எம்.எஸ்சி., எம்.டெக். முதுநிலை பட்டப்படிப்பும், 28 துறைகளில் ஆராய்ச்சி (பி.எச்டி.) பட்டப்படிப்பும் நடத்தப்படுகிறது.
READ ALSO THIS :PENKALVI SCHOLORSHIP https://penkalvi.tn.gov.in
கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மாணவர் சேர்க்கை தாமதமானது. இதனால் சில பாடப்பரிவுகளில் வெளிமாநில மாணவர்களால் சேரமுடியாமல் போனது. தற்போது, நாடு முழுவதும் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களைப் போலவே, கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன. முதுநிலை பட்டப் படிப்பில் சுமார் 400 மாணவர்களும், ஆராய்ச்சிப் படிப்பில் சுமார் 200 மாணவர்களும் சேர்க்கப்படுவார்கள், என்று அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது, பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் இதற்கான இணையதளத்தில் Link Here: https://admissionsatpgschool.tnau.ac.in/ஆகஸ்ட் 8 ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரையிலும் தங்களது விண்ணப்பங்களை வழங்கலாம். இறுதியாண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களும் தங்களது கல்லூரி முதல்வர்களிடம் உரிய சான்றிதழ் பெற்று இதற்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்.
விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி (சனிக்கிழமை) பயிற்சி நுழைவுத் தேர்வும், 28 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நுழைவுத் தேர்வும் நடத்தப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்களின் விவரம் செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும். அந்த மாத இறுதிக்குள் உரிய கட்டணம் செலுத்தும் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அக்டோபர் முதல் வாரத்தில் முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும், என அவர் தெரிவித்தார்.
மேலும், அவர் புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கூறியபோது, ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவர்கள், வேளாண்மை பயிலும் மாணவர்களுக்காக பல்வேறு உலக நாடுகளின் பல்கலைக்கழகங்கள், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் ஆஸ்திரேலியாவின் சதர்ன் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துடன் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு தலா 2 மாணவர்கள் ஓராண்டு ஆராய்ச்சிப் படிப்பை ஆஸ்திரேலியாவில், அந்நாட்டு பல்கலைக்கழகத்தின் செலவில் மேற்கொள்வார்கள். அவர்களுக்கு வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமும், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பட்டமும் வழங்கப்படும்.
மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலிய மாணவர்கள் இங்கு வந்து ஆராய்ச்சி நடத்துவார்கள். இருதரப்பு மாணவர்களும் பருத்தி, தேயிலை, மா, கரும்பு உள்ளிட்ட பயிர்கள் தொடர்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவார்கள்.
பல்கலைக்கழகத்தின் இளநிலை மாணவர் சேர்க்கை தொடர்பான விவரங்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) வெளியிடப்பட உள்ளது.
TNAU PG ADMISSION 2022 BROCHURE PDF - DOWNLOAD HERE